செய்திகள் :

TVK: கிணத்துக்கடவு தொகுதியில் முந்தும் தவெக; திமுக, அதிமுக பின்னடைவு; நிலவரம் என்ன?

post image

கிணத்துக்கடவு தொகுதியில் தி.மு.க-வில் சபரி கார்த்திகேயன், அ.தி.மு.க-வில் செ.தமோதரன், த.வெ.க-வில் விக்னேஷ், நா.த.க-வில் பானுப்பிரியா போட்டியிடுகின்றனர்.

இத்தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்னிக்கை 3 லட்சத்து 5 ஆயிரத்து 878 ஆக உள்ள நிலையில், தேர்தலில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 349 பேர் வாக்களித்தனர். இதனால் வாக்கு சதவீதம் 87.08 ஆக உள்ளது.

கோவை தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்னிக்கை நடைபெற்று வருகிறது. இதில் கிணத்துக்கடவு தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் விக்னேஷ் முன்னிலை வகித்து வருகிறார்.

முதல் சுற்றில் த.வெ.க. வேட்பாளர் விக்னேஷ் 3,385 வாக்குகளும், அ.தி.மு.க. வேட்பாளர் செ.தாமோதரன் 3,052 வாக்குகளும், தி.மு.க. வேட்பாளர் 2,597 வாக்குகளும் பெற்றனர்.

இரண்டாவது சுற்றில் விக்னேஷ் 7,361, செ.தாமோதரன் 5,636, சபரி கார்த்த்கேயன் 5,191 வாக்குகளும் பெற்றனர். மூன்றாவது சுற்றில் விக்னேஷ் 11,606, செ.தாமோதரன் 8,470, சபரி கார்த்த்கேயன் 8,026 வாக்குகளும் பெற்றனர்.

விக்னேஷ்
விக்னேஷ்

நான்காவது சுற்றில் விக்னேஷ் 15,754 வாக்குகளும், செ.தாமோதரன் 11,008, சபரி கார்த்திகேயன் 11,117 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதனால் நான்காவது சுற்று முடிவில் சபரி கார்த்திகேயனை விட விக்னேஷ் 4,637 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

அவிநாசி: இ-சேவை மையம் நடத்தும் கணவர்; எல்.முருகனை வீழ்த்தி வாகை சூடிய இல்லத்தரசி! யார் இந்த கமலி?

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனி தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட இளம் வேட்பாளர் மருத்துவர் கோகிலா மணி, அ.தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளரான மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ... மேலும் பார்க்க

ஈரோட்டில் வாஷ் அவுட்டான திமுக கூட்டணி; அமைச்சர் உட்பட 8 பேரை வீழ்த்திய த.வெ.க!

ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, கோபிச்செட்டிப்பாளையம், மொடக்குறிச்சி, பவானி, பவானிசாகர் தனி, அந்தியூர், பெருந்துறை என மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஈரோடு மேற்கு, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்ப... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம்: சோபிக்காத த.மா.கா; சம்பவம் செய்த சக்கரபாணி - 7வது முறை வெற்றி சாத்தியமானது எப்படி?

ஒட்டன்சத்திரம் தொகுதியில் தொடர்ந்து ஆறு முறை வெற்றி பெற்று அமைச்சராக இருந்தார், சக்கரபாணி. தொகுதி முழுவதும் மக்களுக்கான அடிப்படை வசதிகள், சாலை வசதிகள் என எல்லாவற்றையும் செய்து தொகுதியைத் தன் கன்ட்ரோலி... மேலும் பார்க்க

ஓ.பி.எஸ்ஸிற்கு ’கிலி’யை ஏற்படுத்திய த.வெ.க; திக் திக் வாக்கு எண்ணிக்கை; போராடி கரை சேர்ந்த தி.மு.க!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தி.மு.க -வில் இணைந்து போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார் எனும்போது வெல்வாரா? தோற்பாரா? என்ற எதிர்பார்ப்புகள் எகிறியது. அ.தி.மு.க-வால் இவ்வளவு காலமும் வெற... மேலும் பார்க்க

TVK: சீட் தராத திமுக; பழி தீர்த்த கட்சித்தாவல்; சூலூரை வென்ற தவெக சுகுமாரின் பின்னணி என்ன?

சூலூர் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 3 லட்சத்து 7 ஆயிரத்து 616 வாக்காளர்கள் உள்ள நிலையில்,2 லட்சத்து 71 ஆயிரத்து 567 பேர் வாக்களித்தனர். இதில் 90 ஆயிரத்து 531 வாக்குகள் பெற்ற த.வெ.க. வேட்பாளர் சுகுமார... மேலும் பார்க்க

TVK: 'சென்னைவாசி, சிபி சத்யராஜின் ஆதரவு' - சிங்காநல்லூரை வென்ற ஸ்ரீ கிரி பிரசாத்தின் பின்னணி என்ன?

சிங்காநல்லூர் தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 69 ஆயிரத்து 941 வாக்காளர்களில், தேர்தலில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 746 பேர் வாக்களித்தனர். இதில் த.வெ.க. வேட்பாளர் ஸ்ரீ கிரி பிரசாத் 84 ஆயிரத்து 163 வாக்... மேலும் பார்க்க