செய்திகள் :

UPSC/TNPSC: 'ஸ்கூலுக்கு IAS, IPS வருவாங்க'ன்னு அப்பா சொல்லுவாரு, அதைக்கேட்டு தான்!'- SP சுந்தரவதனம்

post image

UPSC/TNPSC குரூப் - 1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் king makers IAS அகாடமியும் இணைந்து ஓர் இலவச பயிற்ச்சி வகுப்பை நடத்த திட்டமிட்டிருக்கின்றன.

'நீங்களும் ஆகலாம் IAS' என்ற தலைப்பிலான இந்த இலவச பயிற்சி முகாம் வருகிற மே 17ம் தேதி தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பாரத் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் நடக்க இருக்கிறது.

அதனுடன் ஒரு வருட இலவச பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வும் நடக்கிறது. இதில் திருமதி பா.பிரியங்கா பங்கஜம் இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியர், திரு E. சுந்தரவதனம் இ.கா.ப., மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சிறப்புரை ஆற்றவிருக்கின்றனர்.

upsc| tnpsc
upsc| tnpsc

அதே சமயம் திரு. ஆதில் பெய்க் (சிவில் சர்வீஸ் தேர்வு பயிற்சியாளர் - king makers IAS அகாடமி), கிங்க் மேக்கர்ஸ் IAS அகாடமியின் இயக்குநர் சத்யஸ்ரீ பூமிநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்க உரையை ஆற்ற இருக்கிறார்கள்.

இந்நிலையில் தேர்வர்கள் பயன்பெறும் வகையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் E. சுந்தரவதனம் தன் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக நம்மிடம் பேசிய அவர், ``வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் என்னோட சொந்த ஊர். அப்பா அரசு பள்ளி ஆசிரியர், அம்மா அரசு ஊழியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்.

அப்பா வேலை செய்த பள்ளிக்கு கலெக்டர், எஸ்.பி நிகழ்ச்சிகளுக்கு வருவதைப் பற்றி வீட்டில் சிலாகித்துச் சொல்வார். இதைக் கேட்டு வளர்ந்த எனக்கு IAS, IPS ஆக வேண்டும் என்பது மனதில் ஆழமாக வேரூன்றியது. இதையடுத்து அப்துல் கலாம் வழியில் பெரிய இன்ஜீனியராக வர வேண்டும் எனவும் நினைத்தேன்.

பள்ளிப் படிப்பு முடிந்த பிறகு கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் சேர்ந்து படித்தேன். அதன் பிறகு அரசு கோச்சிங் சென்டர் மற்றும் மனித நேய அறக்கட்டளை சென்டரில் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவதற்காகப் படித்தேன். ஆரம்பத்தில் சரியா அமையவில்லை. ஆனாலும் விடாமுயற்சியைக் கைவிடவில்லை. இதையடுத்து வங்கி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன்.

சுந்தரவதனம் | மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
சுந்தரவதனம் | மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்

ரிசர்வ் வங்கியில் வேலை மேனேஜர் பணி கிடைத்தது. மும்பை தலைமை அலுவலகத்தில் பணியாற்றினேன். ஒரு பக்கம் பணி, மற்றொரு பக்கம் சிவில் சர்வீஸ் தேர்வுக்கான படிப்பையும் தொடர்ந்தேன். திட்டமிட்டு கடின உழைப்பையும் காட்டி படித்து தேர்வு எழுதினேன். 2016ல் அதன் ரிசல்ட் வெளியாகி ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்றேன்.

பிறகு டிரெயினிங் முடித்து காவல்துறையில் ஏ.எஸ்.பி உள்ளிட்ட பல்வேறு பதவிகள் வகித்தேன். பின்னர் பதவி உயர்வில் எஸ்.பி-யானேன். கரூர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றிய நான், தற்போது தஞ்சாவூரில் பணியில் இருக்கிறேன். சிவில் சர்சீஸ் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள், திட்டமிடுதல், கடின உழைப்பு, தொடர் முயற்சி, பயிற்சி இவை இருந்தால் நிச்சயம் வெற்றியடைந்து உயர்ந்த பதவியில் அமரலாம்" என்றார்.

ஆனந்த விகடன், King Makers IAS அகடாமியுடன் இணைந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இது போன்ற இலவசப் பயிற்சி முகாமினைப் பல ஆண்டுகளாக நடத்தி வருவதன் மூலம், எண்ணற்ற போட்டித் தேர்வாளர்கள் பயனடைந்து வருகிறார்கள்.

இந்தப் பயிற்சி முகாமிற்கு முன்பதிவு செய்ய 044- 66802997 என்ற எண்ணிற்கு மிஸ்ட்கால் கொடுக்கவும். அப்படி இல்லையென்றால் இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்புகின்றவர்கள் மேற்கொண்ட விண்ணப்பத்தில் பதிவுசெய்து பயன்பெறலாம்.

வினாத்தாள் கிடைத்ததும் பதிலளிக்க எப்படி ப்ளான் செய்ய வேண்டும்? - King Makers பூமிநாதன் விளக்கம்

UPSC/TNPSC குரூப் -1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கின்றன.'நீங்களும் ஆகலா... மேலும் பார்க்க

UPSC / TNPSC: தஞ்சாவூரில் இலவசப் பயிற்சி முகாம் - அனுமதி இலவசம்!

UPSC/TNPSC குரூப் -1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து தூத்துக்குடியில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கின்ற... மேலும் பார்க்க

`IAS தேர்வுக்கு தயாராகுபவர்கள் அடிப்படையாகத் தெரிந்துகொள்ள வேண்டியவை...' - விளக்கும் ரவி Ex., IPS

'UPSC/TNPSC குரூப் -1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து தூத்துக்குடியில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறத... மேலும் பார்க்க

போட்டி தேர்வுகளுக்கு முழு போர்ஷனையும் படிக்க வேண்டுமா?- விளக்கும் King Makers IAS சத்யஶ்ரீ பூமிநாதன்

'UPSC/TNPSC குரூப் -1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து தூத்துக்குடியில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறத... மேலும் பார்க்க

+2 முடித்தவங்களுக்கு Golden Chance; உயர்கல்வித் தேர்வுக்கு முழுமையான வழிகாட்டல்

இந்த,நிகழ்ச்சியில் பங்கேற்க இங்கே கிளிக் செய்யவும்https://forms.gle/mkX53JaTLuszofAt8கல்வி விகடனும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையமும் இணைந்து வரும் 25.04.2026 சனிக்கிழமை, '+2-வுக... மேலும் பார்க்க

முதல் இரண்டு முயற்சிகளிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி? - கல்வியாளர் விளக்கம்!

'UPSC/TNPSC குரூப் -1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து தூத்துக்குடியில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறத... மேலும் பார்க்க