செய்திகள் :

US Fed வட்டி உயர்வு அறிவிப்பிற்கு பின் Gold விலை குறைஞ்சிருக்கணுமே? ஆனால், அப்படி ஆகவில்லையே; ஏன்?

post image

நினைத்தது ஒன்று... நடப்பது வேறாக இருக்கிறது.

நேற்று முன்தினம் (செப்டம்பர் 16) அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி தங்களது வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தியது.

பொதுவாக இந்த வங்கி தங்களது வட்டி விகிதத்தை உயர்த்தும் போதெல்லாம் தங்கம் விலை இறங்கும்.

ஆனால், இந்த முறை மாறாகத் தங்கம் விலை சற்று ஏறியிருக்கிறது.

சர்வதேச சந்தையில் 16-ஆம் தேதி ஒரு அவுன்ஸிற்கு 4,263 டாலர் என்று வர்த்தகமான தங்கம் விலை, நேற்று 4,341 டாலர் என்று வர்த்தகமானது.

Gold Rate - தங்கம் விலை
Gold Rate - தங்கம் விலை

ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டியை அதிகரிக்கும் போது, வட்டி தரும் வருமானங்கள் பக்கம் முதலீட்டாளர்கள் திரும்புவார்கள். தங்கம் முதலீடு வட்டி தராது.

அதனால், தங்கத்தில் உள்ள முதலீடுகள் வட்டி தரும் வருமானத்திற்கு மாறும். இதுதான் ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி உயரும் போது, தங்கம் விலை குறையும் லாஜிக்.

ஆனால், இப்போது ஏன் தங்கம் விலை ஏறியது என்பதற்குப் பொருளாதார நிபுணர்கள் சில காரணங்களை முன்வைக்கின்றனர்.

ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் என்று ஏற்கெனவே சந்தை கணித்துவிட்டது. இதனால், அப்போதே இந்தத் தாக்கம் தங்கம் விலையில் பிரதிபலித்துவிட்டது.

இதனால், அறிவிப்பு வெளியானதும், விலையில் பெரிய மாற்றம் நிகழவில்லை.

அடுத்ததாக மத்திய வங்கிகளும் தங்கத்தை அதிகம் இறக்குமதி செய்திருக்கின்றன. குறிப்பாகச் சீனாவின் வங்கிகள் 22-ஆவது மாதமாகத் தங்கத்தை இறக்குமதி செய்திருக்கிறது.

உலக அளவில் போர்கள், நிலையற்ற தன்மை என்று இருந்து வருகிறது. இதனால், நாடுகளின் இறையாண்மை குறித்துக் கேள்வி எழுகிறது.

இன்னொரு பக்கம், நாடுகளின் கடன் சுமையும் கூடுகிறது.

இதனால், வட்டி தரும் வருமானங்களான பத்திரங்களில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

இவையால் தங்கம் விலை குறையாமல் ஸ்டெடியாக வர்த்தகமாகி வருகிறது.

தங்கம், வெள்ளி ETF-கள் இறங்குமுகத்தில் இருக்கிறதே; முதலீட்டைத் தொடரலாமா, வேண்டாமா?

தங்கம், வெள்ளி விலை இறங்குமுகத்தில் இருக்கிறது. இதன் எதிரொலியாகத் தங்கம் இ.டி.எஃப் மற்றும் வெள்ளி இ.டி.எஃப்பும் இறங்குமுகத்தில் இருக்கிறது. இதனால், இ.டி.எஃப்களில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு அச்சம் ... மேலும் பார்க்க

Gold: 'ஏறலாமா, வேண்டாமா?' - அமெரிக்காவின் 'இந்த' அறிவிப்பிற்காக Wait செய்யும் தங்கம் விலை!

சென்னையில் தங்கம் விலை கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி, ஒரு பவுன் தங்கம் விலை ரூ.1.20 லட்சத்தைத் தாண்டியது. சர்வதேச சந்தையிலோ, தங்கம் விலை ஒரு அவுன்ஸிற்கு 3,600 டாலரை ஆகஸ்ட் 25-ம் தேதி தாண்டியது. அதன் பின், அ... மேலும் பார்க்க

Gold: 5 நாள்கள் கழித்து தங்கம் விலை கொடுத்த ட்விஸ்ட் - அதிரடி ஏற்றம்; இதுக்கும் ட்ரம்ப் தான் காரணமே!

கடந்த 5 நாள்களாகவே, சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து இறங்குமுகத்தில்தான் இருந்தது. இன்று ட்விஸ்ட் கொடுத்து அதிரடியாக ஏறியுள்ளது தங்கம் விலை.கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி முதல் நேற்று (செப்டம்பர் 2) வரை, சென... மேலும் பார்க்க

Gold: 5 நாள்களில் தங்கம் விலை ரூ.6,920 குறைவு; ஏன் குறைகிறது? - இதிலும் ஒரு சூப்பர் சான்ஸ்!

கடந்த 5 நாள்களாக, தங்கம் விலை இறங்குமுகத்தில் சென்றுகொண்டிருக்கிறது.சென்னையில் மட்டும் இந்த 5 நாள்களில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.865-உம், ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.6,920-உம் குறைந்துள்ளது.ஏன் ... மேலும் பார்க்க

Gold: வீட்டில் கிலோ கணக்கில் தங்கம் இருக்கிறதா? வருமான வரித்துறை என்ன செய்யும்?

நம்மில் ஒவ்வொருவர் வீட்டிலும் ‘எவ்வளவு தங்கம் இருக்கிறது?’ என்கிற அளவு மாறுபடும். ஒருவர் வீட்டில் கிராம் கணக்கில் தங்கம் இருக்கலாம்... இன்னொருவர் வீட்டில் பவுன் கணக்கில் தங்கம் இருக்கும்... மற்றொருவர்... மேலும் பார்க்க

Gold: மீண்டும் ரூ.1.20 லட்சத்தைத் தாண்டிய தங்கம் விலை; என்னதான் காரணம் இதற்கு? இன்னும் உயருமா?

சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.15,030-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.1,20,240-க்கும் விற்பனையாகி வருகிறது.கிட்டத்தட்ட 5 மாதங்களுக்குப் பிறகு, தங்கம் விலை பவுனுக்கு ரூ.1.20 லட்சத்தைத் தாண்டியுள்ளது... மேலும் பார்க்க