செய்திகள் :

USA:``இந்த வழக்கில் தோற்றால் பேரழிவு'' - பிறப்பு குடியுரிமை குறித்து ட்ரம்ப் ஆவேசம்!

post image

அமெரிக்கவில் 1860 காலகட்டத்தில் அடிமை முறைக்கு ஆதரவாகவும் - எதிராகவும் உள்நாட்டுப்போர் நடந்தது. இந்தப் போர் முடிவுக்கு வந்தபோது, அமெரிக்காவில் அடிமைகளாக இருந்தவர்களுக்கு சாதகமாக அமெரிக்காவில் பிறக்கும் குழந்தை அமெரிக்க சட்டப்படி அமெரிக்கராகவே கருதப்படும் எனச் சட்டமியற்றப்பட்டது.

அதன்படி, அமெரிக்க அரசியலைப்பின் 14-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் 1868, ``அமெரிக்காவில் பிறந்த அல்லது குடியுரிமை பெற்ற மற்றும் அதன் அதிகார வரம்பிற்கு உட்பட்ட அனைத்து நபர்களும் அமெரிக்கா மற்றும் அவர்கள் வசிக்கும் மாநிலத்தின் குடிமக்கள்." என வரையறுக்கிறது. அந்தச் சட்டம் நூற்றாண்டைக் கடந்தும் இன்றும் தொடர்கிறது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

இந்தச் சட்டத்தை எதிர்த்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஜனவரி 2025-ல், சட்டவிரோத குடியேறிகள், சுற்றுலா விசா போன்ற தற்காலிகமாக அமெரிக்காவில் வசிப்பவர்கள் ஆகியோருக்கு அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படாது.

இதற்கு முன் அத்தகைய குடியுரிமைப் பெற்றவர்களிடமிருந்து குடியுரிமை திரும்பப்பெறப்படாது. இனி பிறக்கப்போகும் குழந்தைகளுக்கே இந்த சட்டம் செல்லும்' என அறிவித்தார். அதிபர் ட்ரம்பின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்க செய்தி நிறுவனமான பொலிட்டிகோவிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், ``இந்த வழக்கு மிகவும் சுவாரஸ்யமானது. இந்த சட்டம் அடிமைகளின் குழந்தைகளுக்காக இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் ஆண்டைப் பார்த்தாலே தெரிந்துவிடும்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

அது உள்நாட்டுப் போருடன் தொடர்புடையது. வேறொரு நாட்டிலிருந்து சுற்றுலா விசாவில் வந்து, இங்கு குழந்தைப்பெறும் சில பணக்காரர்கள் நம் நாட்டில் கால் வைப்பதற்காக அந்தச் சட்டம் இல்லை. திடீரென்று பெரும் பணக்காரரின் முழு குடும்பமும் அமெரிக்க குடிமக்களாக மாறுகிறது.

அது எப்படி நடக்கிறது என இப்போது மக்கள் இந்தச் சட்டத்தைப் புரிந்துகொள்கிறார்கள். நீதிமன்றமும் அதைப் புரிந்துகொள்கிறது என்று நான் நினைக்கிறேன். அந்த வழக்கில் நாம் தோற்றால் அது ஒரு பேரழிவு தரும் முடிவாக இருக்கும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அதிமுக பொதுக்குழு: மட்டன் பிரியாணி, சிக்கன் 65, மீன் வறுவல், மட்டன் குழம்பு - கம கம உணவுகள்! | Album

அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள்அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள்அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள்அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள்அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள்அதிமுக பொதுக்குழு | கம கம உணவுகள்அத... மேலும் பார்க்க

``SIR வரவேற்பு, நீதித் துறையை மதிக்காத திமுக"- அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் என்னென்ன?- முழு விவரம்

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சென்னை வானகரத்தில் உள்ள தனி​யார் மண்​டபத்தில் அ.தி​.மு.க பொதுக்​குழு மற்​றும் செயற்​குழு கூட்​டம் இன்று நடை​பெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில... மேலும் பார்க்க

மட்டன் பிரியாணி, சிக்கன் 65, மீன் வறுவல்; அதிமுக பொதுக்குழுவிற்காகத் தயாராகும் மெனு

அடுத்த ஆண்டு (2026) தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை கட்சிகள் த... மேலும் பார்க்க

நள்ளிரவு வரை நீண்ட பேச்சுவார்த்தை: `ஷிண்டே கட்சியிலிருந்து தலைவர்களை இழுக்கமாட்டோம்' - பாஜக உறுதி

மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் சிவசேனாவும், பா.ஜ.கவும் ஒருவரை எதிர்த்து ஒருவர் போட்டியிட்டனர். அதோடு தேர்தலின் போது சிவசேனாவில் இருந்து தலைவர்களை பா.ஜ.கவினர் தங்களது கட்சிக்கு இழ... மேலும் பார்க்க

BJP: 'அடுத்தடுத்த சந்திப்புகள்; மீண்டும் டெல்லி பயணம்!' - அண்ணாமலைக்கு என்ன அசைன்மென்ட்?

அதிருப்தி.. தனி ரூட்!தமிழக பாஜக தலைவராக இருந்து வந்த அண்ணாமலையின் பதவிக்காலம் முடிந்த பின்னர், அது நீட்டிக்கப்படாமல், நயினார் நாகேந்திரன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். தலைவர் பதவியைத் தக்கவைத்துக் ... மேலும் பார்க்க

``கரூரில் குலுங்கி அழுத அன்பில் மகேஷ், பள்ளி மாணவர் இறப்புக்கு வரவே இல்லை'' - பாமக ம.க.ஸ்டாலின்

கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம், அரசு அறிஞர் அண்ணா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இனாம்கிளியூர் பகுதியைச் சேர்ந்த கவியரசன் என்ற மாணவன் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கும் அதே பள்ளியில் 11-ம் வகுப்... மேலும் பார்க்க