செய்திகள் :

VBGRAMG திட்டத்துக்கு ஒப்புதல்: `வேறு என்ன செய்ய சொல்கிறீர்கள்? தருகிற நிதியையும்...' - துரை வைகோ

post image

முதல்வர் விஜய் தலைமையில் தவெக நடத்திய தோழமை கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு, மதிமுகவின் முதன்மைச் செயலாளரும் எம்.பியுமான துரை வைகோவிடம் பேசினோம்.

மதச்சார்பின்மை, சமூகநீதி எல்லாம் சரிதான். ஆனால், மாநில சுயாட்சி, மாநில உரிமை விவகாரத்தில் தவெக அரசு சறுக்க தொடங்கியிருக்கிறதே. பல மாநிலங்கள் எதிர்க்கும் VBG - RAM - G திட்டத்தை அமல்படுத்திவிட்டார்களே?

``வேறு என்ன செய்ய சொல்கிறீர்கள்? நாடாளுமன்றத்தில் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டு விட்டது. நானே அந்த மசோதாவை எதிர்த்து பேசியிருக்கிறேன். மாநிலங்கள் இந்த திட்டத்துக்காக 40% நிதியை கொடுக்க வேண்டும் என்பதை ஏற்கவே முடியாது. ஆனால், அதற்காக முரண்டு பிடித்து கொண்டு நின்றால் அவர்கள் தருகிற நிதியையும் தரமாட்டார்கள்.

அப்படி நடக்கும்பட்சத்தில் இந்த வேலைவாய்ப்பு திட்டத்தை நம்பியிருப்பவர்களின் நிலை என்னவாகும்? அதையெல்லாம் மனதில் வைத்துதான் அந்த திட்டத்தை தவெக அரசு அமல்படுத்தியிருக்கிறது. இந்தத் திட்டம் மட்டுமில்லை மாநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த திட்டமாக இருந்தாலும் கூட்டணியாக ஒன்றாக நின்று எதிர்ப்போம்" என்றார்.

Udhayanidhi: திமுக இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுகிறாரா உதயநிதி ஸ்டாலின்?

கட்சி மறுசீரமைப்புப் பணிகளில் தி.மு.க கவனம் செலுத்திவரும் நிலையில், இளைஞரணிச் செயலாளர் பொறுப்பிலிருந்து உதயநிதி ஸ்டாலின் விலகுவதாக தகவல்கள் கசிந்துவரும் நிலையில், அறிவாலய வட்டாரங்களில் நாமும் விசாரித்... மேலும் பார்க்க

’ஓமந்தூர் ராமசாமி முதல் விஜய் வரை’ - முதல்வர்கள் போட்டோ பிரச்னைக்கு கோவை மாநகராட்சியில் நூதன தீர்வு!

கோவைமாநகராட்சிமாமன்றக்கூட்டம்டவுன்ஹால் பகுதியில் உள்ளமாநகராட்சிபிரதானஅலுவலகவளாகத்தில்நடைபெற்றது. மேயர்ரங்கநாயகி தலைமையில் நடத்த இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா,துணைமேயர்வெற்றிச்... மேலும் பார்க்க

கோவை மாநகராட்சியில் திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மோதல்; சிபிஐ, சிபிஎம் கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்

கோவைமாநகராட்சிமாமன்றக்கூட்டம்டவுன்ஹால் பகுதியில் உள்ளமாநகராட்சிபிரதானஅலுவலகவளாகத்தில்நடைபெற்றது.மேயர்ரங்கநாயகிதலைமையில் நடத்த இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, துணை மேயர் வெற்றிச... மேலும் பார்க்க

பத்திரிகையாளர் விஜயனிடம் விசாரணை: "காவல்துறை Reels Mafiaக்களின் கட்டுப்பாட்டில் உள்ளதா?" - அப்பாவு

தவெக ஆட்சியைக் கவிழ்க்க ஊத்தங்கரை எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் பேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருவல்லிக்கேணி போலீசார் இதுவரை 8 பேரைக் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தனியார் தொலைக்காட்ச... மேலும் பார்க்க

கூடங்குளம் தரவுகள் கசிவு: 'நாட்டின் பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளது'- மாணிக்கம் தாகூர்

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உள்கட்டமைப்பு குறித்த ஆவணங்கள் டார்க் வெப்பில் கசிந்துள்ளது. 'World Leaks' என்னும் ஹேக்கர் குழு தான் டார்க் வெப்பில் வெளியிட்டிருக்க... மேலும் பார்க்க

பழனி கோயில் நில மோசடி வழக்கு: அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் சந்நிதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 100 கோடி மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறிப் போலி ஆவணங்கள் மூலம் வெறும் 2 கோட... மேலும் பார்க்க