செய்திகள் :

'பங்குச்சந்தை ஏற்றத்தில் இருக்கிறது; அதனால், எனக்கு லாபம்" - தனது வருமான உயர்வு குறித்து ட்ரம்ப்

post image

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது குடும்பத்தின் கிரிப்டோகரன்சி தொழில்கள் மூலம் மட்டும் கிட்டத்தட்ட 1.2 பில்லியன் டாலரை சம்பாதித்துள்ளார்.

அது குறித்து நேற்று (ஜூலை 1, 2026), ட்ரம்பிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அவரது விளக்கம்...

"என்னுடைய தனிப்பட்ட நிதி விவகாரங்களில் நான் நேரடியாகத் தலையிடுவதில்லை. என் பணத்தை நிர்வகிப்பதற்கென்றே சில பிரத்யேக நிதி நிறுவனங்கள் உள்ளன.

கிரிப்டோ கரன்சி
கிரிப்டோ கரன்சி

நான் அதிபராவதற்கு முன்பே பெருமளவில் பணம் ஈட்டியவன். அவர்கள் என் பணத்தை வெவ்வேறு திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். நான் அவர்களுடன் பேசுவதே இல்லை. ஒருபோதும் தொடர்புகொள்வது கிடையாது.

என்னிடம் பல பொறுப்பாளர்கள் இருக்கிறார்கள். 'மூடப்பட்ட கணக்குகள்' (Blind Trust) என்று சொல்வார்களே, அதுபோன்ற ஒரு அமைப்பில் நாம் பணத்தைச் செலுத்திவிட்டால் அதோடு சரி, அதன்பின் நாம் அவர்களுடன் விவாதிக்க முடியாது.

அவை பெரிய நிறுவனங்கள், அவர்கள்தான் அதை முழுமையாக நடத்துகிறார்கள். எவ்வாறாயினும், வணிகத் துறையில் எனக்கு மிகச்சிறந்ததொரு தொழில் வாழ்க்கை அமைந்திருந்தது என்பதை நான் மறுக்க முடியாது.

நான் ஏன் இப்போது லாபம் ஈட்டுகிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா? ஏனெனில், இப்போது பங்குச்சந்தை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.

இதனால் இங்கு எல்லாரும் தான் லாபம் சம்பாதிக்கிறார்கள். உங்களிடம் ஒரு '401k' (அமெரிக்க ஓய்வூதியத் திட்டம்) கணக்கு இருந்தால், அதன் தற்போதைய நிலையைச் சற்றே கவனித்துப் பாருங்கள். அது கிட்டத்தட்ட 85 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

அதற்காக நீங்கள் அதிபர் ட்ரம்பிற்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.

எனவே, இங்கு நாம் அனைவரும் தான் லாபமடைகிறோம். என்னிடம் பெருமளவிலான பணமும் ரொக்கமும் இருப்பதால், அதை நான் பெரிய நிதி நிறுவனங்களிடம் கொடுத்துள்ளேன். அதன் மூலம் எனக்கும் லாபம் கிடைக்கிறது.

அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்குத் தெரிகிறதா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் பரவலான பல துறைகளில் என் பணத்தை முதலீடு செய்கிறார்கள்."

ரஷ்யாவில் பெட்ரோல் தட்டுப்பாடு: என்ன காரணம்? - இந்திய பெட்ரோலை வாங்குகிறதா ரஷ்யா?

சமீபத்தில் ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியிருந்தது. இந்த டிரோன் தாக்குதலில் அந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் பலத்த சேதமடைந்துள்ளன. சுத்திகரிப்பு நிலையங... மேலும் பார்க்க

இன்று தவெகவில் இணையும் 4 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் யார் யார்? | Live Updates

தவெகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் யார் யார்?இன்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் தவெகவில் இணையும் இணைப்பு விழா நடக்க உள்ளது. இந்த விழா மாமல்லபுரத்தில் உள்ள போர் பாயிண்ட்ஸ் ஷெரட்டன... மேலும் பார்க்க

VBGRAMG திட்டத்துக்கு ஒப்புதல்: `வேறு என்ன செய்ய சொல்கிறீர்கள்? தருகிற நிதியையும்...' - துரை வைகோ

முதல்வர் விஜய் தலைமையில் தவெக நடத்திய தோழமை கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு, மதிமுகவின் முதன்மைச் செயலாளரும் எம்.பியுமான துரை வைகோவிடம் பேசினோம். மதச்சார்பின்மை, சமூகநீதி எல்லாம் சரிதான். ஆனால... மேலும் பார்க்க

'முதல்வர் விஜய்யின் 'மெகா' ப்ளான்; பாராட்டிய வைகோ; முன்வைக்கப்பட்ட கோரிக்கை! - தோழமை கூட்ட ஹைலைட்ஸ்

முதல்வர் விஜய் தலைமையில் தோழமை கட்சிகளின் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறது தவெக. தோழமை கட்சியினர் மத்தியில் முதல்வர் விஜய் என்ன பேசினார்? கூட்டத்தின் ஹைலைட்ஸ் என்ன?தவெக - தோழமை கட்சிகளின் கூட்டம்கோவ... மேலும் பார்க்க

'அணுக்கனிமக் கொள்ளை; அனுமதி நீட்டிப்பு ஆணையைத் தவெக அரசு திரும்பப் பெற வேண்டும்'- சீமான் எச்சரிகை

கதிரியக்கத் திட்டத்திற்குத் துணைபோகும் அனுமதி நீட்டிப்பு ஆணையைத் த.வெ.க அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.கடும் கண்டனம... மேலும் பார்க்க