'தாயுள்ளம் கொண்ட ஆண்மகன் கேப்டன்' - ஆர்.கே.செல்வமணி உருக்கம்
Vijay: 'ஜனநாயகன் NDA வுக்கு வர வேண்டும்!' - விஜய்க்கு தமிழிசை அழைப்பு
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2வது ஆண்டு நினைவு தினத்தை குருபூஜை விழாவாக தேமுதிக அனுசரிக்கிறது. இந்த குருபூஜை விழாவில் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டிருக்கிறார்.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், "தமிழகத்தில் தூய்மையான ஆட்சி அமைய வேண்டுமென்று விஜயகாந்த் நினைத்தார். அது நிறைவேற வேண்டும். அவர் பாரத பிரதமர் மோடி மீது மிகுந்த அன்புக் கொண்டவராக இருந்தார். 2014 -ல் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்காக கடுமையாக உழைத்தார்" என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து பேசிய அவர், "எதிர்க்கட்சிகளின் வாக்குகள் ஒன்றாக இருக்கவேண்டும். பிரியக்கூடாது என்றே எல்லோரும் கூறுகிறார்கள்.
விஜய் எங்களோடு வருவதுதான் அவருக்குப் பாதுகாப்பு என்ற நயினாரின் கருத்து யதார்த்தமான உண்மை. ஜனநாயக முறைப்படி முடிவெடுக்க வேண்டியது ஜனநாயகனின் கடமை" என்று தமிழிசை பேசியிருக்கிறார்.

விஜயகாந்தின் குருபூஜைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட முக்கியமான கட்சித் தலைவர்கள் பலருக்கும் பிரேமலதா விஜயகாந்த் அழைப்பு விடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


















