செய்திகள் :

Vijay: "முதலில் சந்தேகித்தார்கள்; தற்போது மகுடம் சூட்டியிருக்கிறார்கள்"- தவெக விஜய்யை வாழ்த்திய நானி

post image

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்குக் கடந்த மாதம் 23ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தின் பல முக்கியத் தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி தவெக முன்னிலை வகிக்கிறது.

தவெக விஜய்
தவெக விஜய்

இந்நிலையில் தவெக தலைவர் விஜய்யை வாழ்த்தி நடிகர் நானி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "வாழ்த்துகள் விஜய் சார். முதலில் சந்தேகித்தார்கள், தற்போது மகுடம் சூட்டியிருக்கிறார்கள். இது எங்கள் வீட்டில் நடந்தது, இப்போது எங்கள் பக்கத்து வீட்டிலும் நடக்கிறது.

பின்தங்கிய நிலையில் இருந்த ஒருவர் வெற்றி பெறுவது என்பது எப்போதுமே ஒரு சிறந்த சினிமா (அல்லது சிறந்த அரசியல் என்று சொல்லலாமா?) தங்கள் முடிவைத் தெளிவாகத் தெரிவித்துள்ள தமிழக மக்களுக்கு, இனி நல்லவை நடக்கும் என நம்புகிறேன்" என்று விஜய்யை வாழ்த்தியிருக்கிறார்.

பிரபாஸ் வீட்டு விருந்து, அல்லு அர்ஜுன் அனுப்பின பொக்கே - 'டார்லிங்' ரீ-ரிலீஸ் பகிரும் இயக்குநர்

கோலிவுட் ரீரிலீஸ் கலாசாரம் இப்போது பக்கத்து மாநில படவுலகங்களில் கொடிகட்டிப்பறக்கிறது. டோலிவுட்டில் கடந்த 2010ல் வெளியான பிரபாஸின் 'டார்லிங்' படம், 16 வருடங்களுக்குப் பின் உலகெங்கும் ரீரிலீஸ் ஆகியிருக்... மேலும் பார்க்க

"வொரி பண்ணாதப்பா, நல்லதே நடக்கும் என நீங்கள் என்னிடம் சொன்னப்போதே..!"- விஜய்க்கு ரவி மோகன் வாழ்த்து

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 23ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. திமுக, அதிமுக, நாம் தமிழர், த.வெ.க என 4 முனைப் போட்டி நிலவிய நிலையில், பதிவான வாக்குகள் மாநிலம் முழுவத... மேலும் பார்க்க

TVK: "புதிய முதல்வருக்கு எல்லா வளங்களும் கிடைக்க வாழ்த்துகிறேன்" - விஜய் குறித்து விஜய் தேவரகொண்டா

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தற்போதைய நிலவரப்படி 108 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. தவெக தலைவர் விஜய், தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் அதிக வாக்குகள் பெற... மேலும் பார்க்க

சாய் பல்லவியா? ருக்மினி வசந்த்யா? எம்.எஸ்.சுப்புலட்சுமி பயோபிக்கில் யார் நடிக்கலாம்? ஒரு அலசல்...

இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் (Biopic) சாய் பல்லவிக்குப் பதிலாக கன்னட நடிகை ருக்மினி வசந்த் நடிக்கவுள்ளதாக செய்தி வெளியாகி இணையத்தில் பேசுபொருளானது. கௌதம் தி... மேலும் பார்க்க

"முழுமையாக குணமடைய இன்னும்..." - பவன் கல்யாண் சிகிச்சை பற்றி சிரஞ்சீவி

ஆந்திராவின் துணை முதலமைச்சரும் நடிகருமான பவன் கல்யாண் உடல் நலக்குறைவால் கடந்த வெள்ளிக்கிழமை (17.04.2026) அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த சனிக்கிழமை (18.04.2026) அவருக்கு அறுவை சி... மேலும் பார்க்க

"அதை முடித்துவிட்டு இரவில் பாடங்களைப் படிக்க வேண்டியிருக்கும்" - எம்பிபிஎஸ் பட்டம் பற்றி ஸ்ரீ லீலா

கோலிவுட், டோலிவுட் என இப்போது டிரெண்டிங்காக வலம் வருகிறார் நடிகை ஸ்ரீ லீலா. இவர் சமீபத்தில் அவருடைய எம்பிபிஎஸ் (MBBS) படிப்பை முடித்து மருத்துவர் பட்டம் பெற்றிருந்தார். ஶ்ரீலீலாதிரையில் நடனமாடுவதையும்... மேலும் பார்க்க