செய்திகள் :

Viswanath & Sons: ``நான் எந்த அவார்ட் வாங்குனாலும் அவர் தான் முதல்ல வாழ்த்துவார்" - ஜி.வி பிரகாஷ்

post image

'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஆகஸ்ட். 2) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஜீ.வி பிரகாஷ், ``இந்த வாய்ப்பை அளித்ததற்கு திரு. நாகவம்சி அவர்களுக்கு மிகுந்த நன்றிகள். நாங்கள் இணைந்து பணியாற்றிய 'வாத்தி' திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. திரு. பிரேமா லிங்குசாமி அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.

நடிகர் சூர்யா சாருடன் 'சூரரைப் போற்று' திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் இணைந்து பணியாற்றும் திரைப்படம் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்'. இத்திரைப்படம் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. 'சூரரைப் போற்று' திரைப்படம் எனக்கும் சூர்யா சாருக்கும் மிகவும் அதிர்ஷ்டமான படம். ஏனெனில், எங்கள் இருவருக்கும் முதல் தேசிய விருதைப் பெற்றுத் தந்தது அப்படம் தான்.

Viswanath & Sons
Viswanath & Sons

நான் தேசிய விருது பெற்றபோது சூர்யா சாரும் ராஜா சாரும் எனக்கு தனிப்பட்ட முறையில் பல உதவிகளைச் செய்தனர். அந்த உதவியை நான் என்றும் மறக்க மாட்டேன், சூர்யா சாருக்கு மிக்க நன்றி.

'வாத்தி' திரைப்படத்தில் நானும் வெங்கி சாரும் இணைந்து பணியாற்றியபோது தேசிய விருது கிடைத்தது. தொடர்ந்து 'லக்கி பாஸ்கர்' திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைத் தந்த நாம், தற்போது மூன்றாவது முறையாக 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படத்தில் இணைந்துள்ளோம்.

சூர்யா சார் என்னை மிகவும் ஊக்குவித்து, இன்று சிறப்பாக 'தி ஒன்' (The One) பாடலை வெளியீடு செய்ய உள்ளோம். இப்பாடலை நான் சூர்யா சாரின் ரசிகர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்.

நடிகை மமிதா மிகவும் எளிமையான நபர். அவருடைய அன்பின் காரணமாகவே பலர் அவருடைய நடனத்தை மீண்டும் செய்து பார்க்க முயற்சிக்கின்றனர்.

ராதிகா மேடத்திற்கும் சுரேஷ் அவர்களுக்கும் நன்றி. சுரேஷ் சாரின் ரசிகர்கள் தவறாமல் உங்கள் குடும்பத்துடன் வந்து, இந்தத் திரைப்படத்தை உற்சாகத்துடன் திரையரங்கில் கண்டு களியுங்கள்.

G.V.Prakash
G.V.Prakash

எனது பாடலாசிரியர்கள் அருண் ராஜா, கென், பாலாஜி, வேணுகோபால் மற்றும் காதர் ஆகிய அனைவருக்கும் நன்றி. கடந்த 25 ஆண்டுகளில் எனக்கு மிகவும் பிடித்த பாடலாசிரியர் நா. முத்துக்குமார் தான். நான் இசையமைத்த 'சைவம்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'அழகே அழகே' பாடலுக்காக அவர் தேசிய விருது பெற்றார்.

பாடும் திறனால் என்னை வியப்பில் ஆழ்த்தியவர் சங்கர் மகாதேவன். இசைத்துறையில் எனது முன்மாதிரி (Icon) எப்போதும் ஏ.ஆர். ரஹ்மான் சார் தான். நான் எந்த விருது பெற்றாலும் அவர்தான் முதன்முதலில் எனக்கு வாழ்த்திப் பதிவிடுவார்." என்றார்.

Vishwanath & Sons: "ஒரு படத்தின் வெற்றி என்பது, டிக்கெட் மற்றும் வசூல் கணக்கில் இல்லை!" - சூர்யா

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வெங்கி அட்லூரி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், மமிதா பைஜூ, ரவீனா டாண்டன் ஆகியோர் நடித்திருக்கிறார்... மேலும் பார்க்க

Magudam Review: இரட்டை வேட ஆக்ஷன் ட்ராமா... இயக்குநராக விஷால் சாதிக்கிறாரா, சோதிக்கிறாரா?

மெடிக்கல் ரெப்பாக வேலை பார்த்துக்கொண்டு, மனைவி ஜமுனா (துஷாரா விஜயன்) மற்றும் இரண்டு குழந்தைகளுடன் எளிய நடுத்தர வாழ்க்கை வாழ்கிறார் கிருபாகரன் (விஷால்). இன்னொரு புறம், கப்பல்களையே விலைக்கு வாங்கும் அளவ... மேலும் பார்க்க

"நான்தான் உண்மையான கருப்பு; கஷ்டப்பட்டு 'கருப்பு' படத்தில் ஆடினேன்; ஆனா..."- மன்சூர் அலிகான் ஆதங்கம்

மைதீன் இயக்கத்தில் துஷி, ஜனனி குணசீலன், ஜெயபிரகாஷ், செந்திகுமாரி, சுப்ரமணிய சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘ஆல் பாஸ்’. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் ... மேலும் பார்க்க

"'உன் வேலையை நேசி, கற்​றுக்​கொண்டே இரு' என்று ரஜினி சார் சொன்னார்" - ஸ்ரேயா சரண் ஷேரிங்

‘சி​வாஜி’ திரைப்​படத்​தில் ரஜினி​காந்​துடன் பணி​யாற்​றிய அனுபவம் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் 'Pinkvilla' ஊடகத்திற்குப் பேட்​டி​ அளித்​திருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசியிருக்கும் அவர், "ரஜினி சாரை நே... மேலும் பார்க்க

மொழி : மௌனத்தின் இசை! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 15

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது `சினி'ஸ்கோப் தொடர்!`சினி'ஸ்கோப் 15மொழி : மௌனத்தின் இசை!ஷீலாவின் திருமணத்துக்கு வரப்போவதில்லை என்... மேலும் பார்க்க

Vishwanath & Sons Review: காதலில் வயது வித்தியாச சிக்கல் - முதிர்ச்சியான உரையாடலாகிறதா படம்?

பெரும் தொழிலதிபரும், துப்பாக்கிச் சுடுதலில் ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்றவருமான சஞ்சய் விஸ்வநாத் (சூர்யா), தன் அம்மா நிர்மலாவுடன் (ராதிகா) வாழ்கிறார். 40 வயதைத் தாண்டிய சஞ்சய்யைத் திருமணம் செய்துகொள்ள... மேலும் பார்க்க