செய்திகள் :

What To Watch: 'கருப்பு, துரந்தர் 2, அதிரடி' - இந்த வாரம் தியேட்டர் & OTT-யில் வந்திருக்கும் படங்கள்

post image
இந்த வாரம் தியேட்டர், ஓடிடி-யில் வெளிவந்திருக்கும் படங்கள் & சீரிஸ் இவைதான்.

கருப்பு - தமிழ்

ஆர் ஜே. பாலாஜி இயக்கி சூர்யா, திரிஷா, ஆர்.ஜே பாலாஜி, நட்டி நடராஜ், மன்சூர் அலிகான், ஸ்வாசிகா, ஷிவாதா, இந்திரன்ஸ், அனகா மாயா ரவி ஆகியோர் நடித்திருக்கும் கருப்பு திரைப்படம் நேற்று (மே 15) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

சட்டென்று மாறுது வானிலை - தமிழ்

பாபு விஜய் தயாரித்து எழுதி இயக்கியிருக்கும், 'சற்றென்று மாறுது வானிலை' படத்தில் ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன், யோகி பாபு, ஆதித்யா கதிர், ராமச்சந்திர ராஜு, ஸ்ரீமன், சத்யன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இத்திரைப்படம் நேற்று (மே 15) திரையரங்குகளில் வெளியானது.

கருப்பு - சூர்யா
கருப்பு - சூர்யா

அதிரடி - மலையாளம்

மின்னல் முரளி படத்தின் எழுத்தாளரான அருண் அனிருதன் எழுதி இயக்கியிருக்கும் படம் 'அதிரடி'. பாசில் ஜோசப், டொவினோ தாமஸ், வினீத் ஸ்ரீனிவாசன், ரியா ஷிபு ஆகியோர் நடித்திருக்கும் இத்திரைப்படம் கடந்த மே 14-ம் திரையரங்குகளில் வெளியாகியது.

பதி பத்னி அவுர் வோ தோ - இந்தி

முதாஸர் அஜீஸ் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, வாமிகா கப்பி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் இணைந்து நடித்துள்ள 'பதி பத்னி அவுர் வோ தோ' திரைப்படம் நேற்று (மே 15) திரையரங்குகளில் வெளியானது.

ஆக்ரி சவால் - இந்தி

அபிஜீத் வாராங் இயக்கத்தில் சஞ்சய் தத், நமாஷி சக்ரவர்த்தி, நீது சந்திரா ஸ்ரீவாஸ்தவா, அமித் சாத், சமீரா ரெட்டி, த்ரிதா சவுத்ரி, மிருணாள் குல்கர்னி, ஹர்சிம்ரன் ஓபராய், ராக்கி ரெய்னா ஆகியோர் நடிப்பில் உருவாக்கியுள்ள ஆக்ரி சவால் திரைப்படம் நேற்று (மே 15) திரையரங்குகளில் வெளியாகியது.

 'துரந்தர் - தி ரிவெஞ்ச்'
'துரந்தர் - தி ரிவெஞ்ச்'

இந்த வார ஓடிடி ரிலீஸ்

1. ப்ராஜெக்ட் ஹெயில் மேரி - Project Hail Mary - Amazon Prime Video

2. ஆஃப் கேம்பஸ் - Off Campus - Amazon Prime Video

3. குட் ஓமன்ஸ் (சீசன் 3) - Good Omens (Season 3) - Amazon Prime Video

4. இன்ஸ்பெக்டர் அவிநாஷ் (சீசன் 2) - Inspector Avinash (Season 2) - JioHotstar

5. தி பனிஷர்: ஒன் லாஸ்ட் கில் - The Punisher: One Last Kill - JioHotstar

6. துரந்தர் 2: தி ரிவெஞ்ச் - Dhurandhar 2: The Revenge - Netflix ( இந்தியாவில் Jio Hotstar தளத்தில் வெளியாகிறது)

7. கர்த்தவ்யா - Kartavya - Netflix

8. பெர்லின் அண்ட் தி லேடி வித் அன்எர்மைன் - Berlin and the Lady with an Ermine - Netflix

9. நெமெசிஸ் - Nemesis - Netflix

TVK: "விஜய்க்கு இன்னும் நிறைய சவால்கள் வரப்போகின்றன" - செளந்தர்யா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்தின் மகளும் இயக்குநருமான சௌந்தர்யா மற்றும் தயாரிப்பாளர் மகேஷ் உள்ளிட்டோர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை கால்கள் மற்றும் உபகரணங்கள், ஆட்டோ உள்ளிட்ட... மேலும் பார்க்க

'இந்த மக்கள் பணி அரசியலாக மாற வாய்ப்பிருக்கிருக்கிறதா?' - சௌந்தர்யா ரஜினிகாந்த் 'பளீச்' பதில்

நாகர்கோவிலில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இயக்குநரும், நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான சௌந்தர்யா ரஜினிகாந்த் கலந்துகொண்டார். மாற்றுத்திறனாளிகளுக்குச் செயற்கைக் கால்களையும், பெண்களுக்கு வ... மேலும் பார்க்க

பொருளாதார நெருக்கடி: 'திரையுலகினர் ஒன்றிணைந்து ஆலோசிக்க வேண்டிய சரியான நேரம் இது.!'- கமல்ஹாசன்

மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன் எதிரொலியாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்... மேலும் பார்க்க

Karuppu Review: எகிறியடிக்கும் கருப்பு; திரையரங்கைத் திருவிழா ஆக்குகிறதா இந்த ஆக்ஷன் கடா விருந்து?

மகள் பினுவின் (அனகா ரவி) அறுவை சிகிச்சைக்காக, கேரளாவிலிருந்து சென்னை வருகிறார் பினுவின் தந்தை (இந்திரன்ஸ்). சென்னைக்குப் புதியவர்கள் என்பதால், வழி தவறிச் சென்றுவிடும் பினு மற்றும் அவரின் தந்தையிடம் தி... மேலும் பார்க்க

இளையராஜாவுடன் இணையும் மாரி செல்வராஜ்; தள்ளிப் போகிறதா தனுஷ் படம்? 'வாழை 2' உண்மையா? - பரபர அப்டேட்

அடுத்த அதிரடி பாய்ச்சலுக்கு ரெடியாகிவிட்டார் இயக்குநர் மாரி செல்வராஜ். 'பைசன்' படத்திற்கு பின் அடுத்து தனுஷை இயக்குவார் என்ற பேச்சு இருந்தது. 'கர்ணன்' படத்திற்கு பின் தனுஷ் -மாரி செல்வராஜ் இணையும் படம... மேலும் பார்க்க