செய்திகள் :

What To Watch: 'மொத ராத்திரி டு ஜனநாயகன்' - இந்த வாரம் வெளியாகியிருக்கும் படங்கள் & சீரிஸ் லிஸ்ட்!

post image

இந்த வாரத்தில் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகியுள்ள படங்கள் மற்றும் சீரிஸ்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

மொத ராத்திரி - தமிழ்

ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா நடித்துள்ளனர். இந்த நகைச்சுவை மற்றும் குடும்பத் திரைப்படமானது ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ராம் & லீலா - தமிழ்

அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் ரியோ ராஜ், வர்திகா, சேத்தன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த காதல் கலந்த நகைச்சுவைத் திரைப்படமானது ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Modha Rathiri
Modha Rathiri

ஒன் மேன் - தமிழ்

சங்ககிரி ராஜ்குமார் இயக்கி நடித்துள்ள இந்த அட்வென்ச்சர் திரைப்படமானது ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

சோளக் கொல்லை பொம்மை - தமிழ்

ஜேம்ஸ் வசந்தன் இயக்கியுள்ள இப்படத்தில் கமலேஷ், சாச்சனா நமிதாஸ் மற்றும் சிங்கம்புலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படமானது ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

பெத்லகேம் குடும்ப யூனிட் - மலையாளம்

கிரிஷ் ஏ.டி. இயக்கியுள்ள இப்படத்தில் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூ நடித்துள்ளனர். இந்த ஃபீல் குட் திரைப்படமானது ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

காலிஃபா - மலையாளம்

வைசாக் இயக்கியுள்ள இப்படத்தில் பிருத்விராஜ் சுகுமாரன், நீல் நிதின் முகேஷ் மற்றும் மாளவிகா சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த ஆக்ஷன் கிரைம் த்ரில்லர் திரைப்படமானது ஆகஸ்ட் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Bethlehem Kudumba Unit
Bethlehem Kudumba Unit

இருமுடி - தெலுங்கு

சிவா நிர்வாணா இயக்கியுள்ள இப்படத்தில் ரவி தேஜா, பிரியா பவானி சங்கர் மற்றும் சாய் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த ஆக்ஷன் டிராமா திரைப்படமானது ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இன்சிடியஸ் - அவுட் ஆஃப் தி ஃபர்தர் - ஆங்கிலம்

ஜேக்கப் சேஸ் இயக்கியுள்ள இப்படத்தில் அமெலியா ஈவ், பிராண்டன் பெரியா, மைசி ரிச்சர்ட்சன்-செல்லர்ஸ் மற்றும் லின் ஷே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தத் திகில் திரைப்படமானது ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

மியூட்டினி (Mutiny) - ஆங்கிலம்

ஜீன்-பிரான்சுவா ரிஷெட் இயக்கியுள்ள இப்படத்தில் ஜேசன் ஸ்டேதம், அன்னாபெல் வாலிஸ் மற்றும் அட்ரியன் லெஸ்டர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த ஆக்ஷன் திரைப்படமானது ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த வார ஓடிடி (OTT) ரிலீஸ்கள்:

திரையரங்கிற்குப் பிந்தைய ஓடிடி ரிலீஸ்:

  • ஜனநாயகன் - ZEE5

  • பியார் பிரேமா கல்யாணம் - Netflix

  • டார்க் - Amazon Prime Video

  • சென்னை லவ் ஸ்டோரி - Sony LIV

  • வெல்கம் டு தி ஜங்கிள் (இந்தி) - JioHotstar

  • தி கிரேட் கிராண்ட் சூப்பர்ஹீரோ (இந்தி) - ZEE5

Jana Nayagan - Vijay
Jana Nayagan - Vijay

இந்த வாரம் வெளியாகியிருக்கும் வெப் சீரிஸ்கள்:

  • கிளீன் அப் கம்பெனி (இந்தி) - Amazon Prime Video and MX Player

  • ஃபேஸிங் எல் சாப்போ (ஸ்பானிஷ்) - Netflix

  • ஹோஸ்டேஜ் (ஆங்கிலம்) - Netflix

  • கொனான் ஓ'பிரையன் மஸ்ட் கோ: சீசன் 3 (ஆங்கிலம்) - JioHotstar

  • தி டைனஸ்டி: யூகான் ஹஸ்கீஸ் (ஆங்கிலம்) - Apple TV

Sivakarthikeyan: "கல்யாணத்தின்போது மோதிரம் வாங்கதான் காசு இருந்தது, அப்போது..." - சிவகார்த்திகேயன்

அக்ஷயா தங்க மாளிகையின் திறப்பு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நகைக் கடையின் விளம்பரத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வந்தார். இதன் திறப்பு விழாவில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு பேசியிருக்கிறார... மேலும் பார்க்க

மொத ராத்திரி விமர்சனம்: கலகல காமெடி விருந்தும், மொய் வைக்கப்படும் மெசேஜும்! கல்யாணம் களைகட்டுகிறதா?

துபாயிலிருந்து திரும்பி வரும் மருதநாயகத்திற்கு (ரிஷிகாந்த்) திருமணம் செய்துகொள்வதில் துளியும் இஷ்டமில்லை. அவருக்குத் தெரியாமல் திருமண ஏற்பாடு செய்கின்றனர் அவருடைய குடும்பத்தினர். மற்றொரு பக்கம், காதலி... மேலும் பார்க்க

Ram & Leela Review: ஃபேன்டஸி ஐடியா ஓகே; ஆனால் காமெடியும் திரைக்கதையும் புதுமை சேர்க்கின்றனவா?

திருமணம் ஆகாத ஏக்கத்திலிருக்கும் ராம் என்கிற ரகு (ரியோ ராஜ்), குடும்ப உறுப்பினர்களுடன் முரண்டு பிடித்தல், நண்பன் ராமுடன் (பாலாஜி தியாகராஜன் தயாளன்) அரட்டை என வாழ்ந்து வருகிறார். தினசரி அலுவலகத்துக்கு ... மேலும் பார்க்க

சௌகார் ஜானகி : 'எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிய அவரது கலைப்பணி..!' - முதல்வர் விஜய் இரங்கல்

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக் குறைவு காரணமாக இன்று மதியம் 2 மணியளவில் காலமானார். இவருக்கு வயது 94. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்க... மேலும் பார்க்க

"அவர் அம்மா, நான் பிள்ளை; கண்ணீரோடு வழியனுப்புகிறேன்"- சௌகார் ஜானகிக்கு கமல்ஹாசன் இரங்கல்

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மதியம் 2 மணியளவில் காலமானார். இவருக்கு வயது 94. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உள... மேலும் பார்க்க

Sowcar Janaki: நடிகை செளகார் ஜானகி காலமானார்! - திரையுலகினர் இரங்கல்

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், இன்று மதியம் 2 மணியளவில் அவர் இயற்கை எய்தினார். இவருக்கு வயது ... மேலும் பார்க்க