செய்திகள் :

What To Watch: Spider Man டு கட்டா குஸ்தி 2 - இந்த வாரம் என்ன படங்கள் & சீரிஸ்கள் பார்க்கலாம்?

post image

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வெளியாகியிருக்கும் படங்கள் இவைதான்!

ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே (Spider Man: Brand New Day)

டெஸ்டின் டேனியல் கிரெட்டன் இயக்கியுள்ள இப்படத்தில் டாம் ஹாலண்ட், ஜெண்டயா, ஜான் பெர்ன்தால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே', மார்வெலின் 38-வது படமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படம் (ஜூலை 30) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

புளூட்டோ (Pluto - மலையாளம்)

ஆதித்யன் சந்திரசேகர் இயக்கியுள்ள இப்படத்தில் நீரஜ் மாதவ், அல்தாப் சலீம், அஜு வர்கீஸ், ஆர்ஷா பைஜு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 'விக்கி' என்ற கதாபாத்திரம், தனித்து விடப்பட்ட ஒரு வேற்றுக்கிரகவாசியைச் சந்திக்கும்போது, அவர்களின் எதிர்பாராத நட்பு இருவரின் வாழ்க்கையையும் என்றென்றைக்குமாக மாற்றிவிடுகிறது.

நகைச்சுவை மற்றும் சாகசங்கள் நிறைந்த கலகலப்பான அறிவியல் புனைவே (Sci-Fi) இதன் கதைக்களம். இத்திரைப்படம் (ஜூலை 30) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Spider Man: Brand New Day
Spider Man: Brand New Day

உன்மத்தம் (Unmatham - மலையாளம்)

கிரண் தாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் குஞ்சாக்கோ போபன், லிஜோமோல் ஜோஸ், சித்திக் ஆகியோர் நடித்துள்ளனர். தனது கடந்த காலத்தின் சுமையைச் சுமக்கும் ஒரு காவலர், நீண்ட காலமாக மறக்கப்பட்ட மற்றும் தீர்க்கப்படாத ஒரு வழக்கின் விசாரணையில் ஈடுபடுகிறார்.

அவர் அதை ஆழமாக ஆராயும்போது மறைக்கப்பட்ட ரகசியங்கள் வெளிவரத் தொடங்குகின்றன. இதனால், தனது நம்பிக்கைகளுக்குச் சவால் விடும் மற்றும் தன் வாழ்க்கையையே என்றென்றும் மாற்றியமைக்கக்கூடிய சங்கடமான உண்மைகளை அவர் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதுவே இதன் கதைக்களம். இத்திரைப்படம் (ஜூலை 31) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ஶ்ரீனிவாச மங்காபுரம் (Srinivasa Mangapuram - தெலுங்கு)

அஜய் பூபதி இயக்கியுள்ள இப்படத்தில் ஜெய் கிருஷ்ணா கட்டமனேனி, ராஷா தடானி, ஷியாம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வாசு பாபு மற்றும் மங்கா ஆகிய இரு கவலையற்ற இளம் காதலர்களின் காதலுக்குத் திடீரென ஓர் ஆபத்து நேர்கிறது.

அவர்களைப் பிரித்துவிடக்கூடிய இக்கட்டான சூழல் உருவாகும்போது, எப்பாடுபட்டாவது தன் காதலியைப் பாதுகாக்க வாசு பாபு தீவிர உறுதியுடன் போராடுகிறான் என்பதே இதன் கதைக்களம். இத்திரைப்படம் (ஜூலை 30) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Nooru Saami
Nooru Saami

இந்த வார ஓடிடி (OTT) ரிலீஸ்கள்:

திரையரங்கத்திலிருந்து ஓடிடி-க்கு

நூறு சாமி - ZEE5

கட்டா குஸ்தி 2 - Netflix

பாலன்: தி பாய் (Balan: The Boy - மலையாளம்) - ZEE5

ஹை ஜவானி தோ இஷ்க் (Hai Jawani Toh Ishq - இந்தி) - ZEE5

ராவ் பகதூர் (Rao Bahadur - தெலுங்கு) - Netflix

தி டெவில் வேர்ஸ் பிராடா 2 (The Devil Wears Prada 2 - ஆங்கிலம்) - Jio Hotstar

தீவானா (Deewana - தெலுங்கு, தமிழ்) - Aha

இந்த வாரம் வெளியாகியிருக்கும் வெப் சீரிஸ்கள்:

பேட்மேன்: கேப் Crusader சீசன் 2 (Batman: Caped Crusader Season 2 - ஆங்கிலம்) - Prime Video

தி லெஜண்ட் ஆஃப் கர்ணா (The Legend of Karna) - Sony LIV

'மன்னிக்க முடியாத குற்றமா?'- பிரபுதேவாவின் நடனத்தை விமர்சித்தது குறித்து ப்ரீத்தியின் விளக்கம் என்ன?

நடிகர் பிரபுதேவாவின் நடனத்தை விமர்சித்து சீரியல் நடிகை ப்ரீத்தி தெரிவித்த கருத்து நடன ஏரியாவில் பெரிய சலசலப்பை உண்டு பண்ணியுள்ளது.சில தினங்களுக்கு முன் தன்னுடைய மாஸ்டர்களுக்கு மரியாதை செலுத்தும் குரு ... மேலும் பார்க்க

Jana Nayagan: "விஜய் சாரை எம்.ஜி.ஆர் கூப்பிடும் காட்சிக்கு டப் செய்தது நான்தான்; ஆனா.!" - டி.எஸ்.கே

நடிகரான பிறகும் மிமிக்ரியால் நம்மைத் தொடர்ந்து எண்டர்டெயின் செய்து வருகிறார் டி.எஸ்.கே. கார்த்தியின் 'வா வாத்தியார்' படத்தில் எம்.ஜி.ஆர். பேசுவது போல இடம்பெற்றிருக்கும் காட்சிகளுக்கு, அவரைப் போல மிமிக... மேலும் பார்க்க

August Releases: சூர்யா டு லோகேஷ் கனகராஜ் - ஆகஸ்ட் மாதத்தில் திரைக்கு வரும் படங்களின் லிஸ்ட்!

ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளுக்கு மிகவும் பிஸியான மாதமாக அமைந்திருக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, பெரிய நட்சத்திரங்களின் படங்கள் ரிலீஸுக்குத் தயாராகி இருக்கின்றன. Vishal - Magudamஅதுமட்டுமல்லாமல், க... மேலும் பார்க்க

D. Imman: "யாருக்குத்தான் வாழ்க்கையில துரோகம் நடக்காம இருக்கு?" - பட விழாவில் டி. இமான்

முகேன் ராவ், ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோர் நடித்திருக்கும் 'நிறம்' திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகிவருகிறது. இந்தப் படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்றைய தினம் நடைபெ... மேலும் பார்க்க

Madhampatty Rangaraj: "கதறி அழுத ஒரு தாயை அவர்கள் பார்க்கவில்லை" - ஜாய் கிறிஸ்டில்டா

ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிறிஸ்டில்டா, தானும் மாதம்பட்டி ரங்கராஜும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டதாகவும், தன்னுடைய குழந்தைக்கு அவர்தான் தந்தை எனவும் கூறியிருந்தார். பிறகு, தங்களுக்குள் நடந்த திருமணத... மேலும் பார்க்க

காதல் : ஆணவச் சமூகம்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 11

கடந்த கால் நூற்றாண்டாக தமிழ் சினிமாவில் வெளியான தேர்ந்தெடுக்கப்பட்ட 50 திரைப்படங்கள் குறித்து பேசுகிறது`சினி'ஸ்கோப்தொடர்!`சினி'ஸ்கோப் 11காதல்18 வயதே ஆன ஒரு பள்ளிக்கூடத்து மாணவி ஐஸ்வர்யாவுக்கும், 20 வய... மேலும் பார்க்க