செய்திகள் :

With Love: "புருஷனாகி ஃபேமஸ் ஆனதுதான் அதிகம்!" - 'Tourist Family' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கலகல

post image

அறிமுக இயக்குநர் மதன் இயக்கத்தில் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடித்திருக்கும் 'வித் லவ்' திரைப்படம் பிப்ரவரி 6-ம் தேதி திரைக்கு வருகிறது.

இப்படத்தில் மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். எம்.ஆர்.பி. நிறுவனமும், சௌந்தர்யா ரஜினிகாந்தின் ஜியான் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரித்திருக்கின்றன.

படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது. படக்குழுவினர் உட்பட சிறப்பு விருந்தினர்கள் பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டு பேசினர்.

Anaswara Rajan
Anaswara Rajan

அனஸ்வரா ராஜன், "எம். ஆர். பி நிறுவனத்தின் ஹாட்ரிக் வெற்றி இதிலும் தொடரணும். சென்னையில உனக்கொரு சகோதரி இருக்காங்கனு நினைச்சுக்கோனு சௌந்தர்யா மேம் சொன்னது, நினைவுல இருக்கு.

அந்த அன்பை எனக்கு எப்போதும் அவங்க கொடுத்திருக்காங்க. நான் வொர்க் பண்ணின க்யூட் இயக்குநர் இப்படத்தின் இயக்குநர் மதன்தான்.

என்னுடைய அம்மாவின் ஃபேவரிட்டும் அவர்தான். தமிழ் சினிமாவுக்குப் புதிய கதாநாயகனாக அபிஷன் கிடைக்கப் போறாரு. ஆன் ஸ்கிரீன்ல சத்யா - மோனிஷா ஜோடி வொர்க் ஆனதுக்கு, ஆஃப் ஸ்கிரீன்ல இருக்கிற ப்ரண்ட்ஷிப்தான் காரணம்" என்றார்.

இயக்குநர் மற்றும் நடிகர் அபிஷன் ஜீவிந்த், "இந்த இடத்துல என்னுடைய முதல் நன்றியை சூப்பர் ஸ்டார் ரஜினி சாருக்குச் சொல்லிக்கிறேன். முதல்ல இந்தப் படத்துல நடிக்கிறதுக்கு முதல்ல ஓகே சொல்லிட்டேன்.

பிறகு வந்த விமர்சனங்கள் என்னை பாதித்தது. பிறகு ரஜினி சாரை மீட் பண்ணும்போது, அவர்தான் 'நீ நடி கண்ணா'னு சொன்னாரு. அந்த வார்த்தை என்னுடைய இன்செக்யூரிட்டியை உடைச்சது.

'டூரிஸ்ட் ஃபேமிலி' ரிலீஸுக்கு முன்னாடியே இந்தப் படத்துல நான் நடிக்கணும்னு இயக்குநர் மதன் கேட்டாரு. என்மேல வச்ச நம்பிக்கைக்கு நன்றி. 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்துக்குப் பிறகு எனக்கு மரியாதை கிடைச்சது.

Abishan Jeevinth
Abishan Jeevinth

அதுபோல, இரண்டு மடங்கு அதிகமாக இயக்குநர் மதனுக்கும் மரியாதை கிடைக்கும். என்னை பொறாமைப்பட வைப்பது மாதிரியான காட்சிகள் படத்தின் இரண்டாம் பாதியில இருக்கு.

நான் மெட்ரோ ரயில்லதான் முன்னாடி பயணிப்பேன். இன்னைக்கு அங்கு என்னுடைய முகம் அதுல இருக்கு. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. என்னுடைய மனைவி அகிலா அபிஷன் ஜீவிந்துக்கு நன்றி.

நான் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தை இயக்கி ஃபேமஸ் ஆனதைவிட, அவங்க புருஷனாகி ஃபேமஸ் ஆனதுதான் அதிகம்.

நான் என்ன தவறுகள் பண்ணினாலும், அது நான் செய்த பாவங்களின் பிரதிபலிப்புனு நான் நினைக்கிறேன். எனக்கு என்ன நல்லது நடந்தாலும் அதுக்குக் காரணம் அகிலாதான்" எனப் பேசினார்.

'அசுரன் படத்தில் நான்தான் அப்பாவாக நடிக்க வேண்டியது; ஆனால்!' - நம்பிக்கை விருதுகள் விழாவில் கருணாஸ்

`ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025’-க்கான `பெருந்தகையாளர்’ விருதை SA. அமீர் அம்சாவுக்கு வழங்கினார், நடிகர் கருணாஸ். அவர் பேசும்போது, ``முதலில் இந்த அற்புதமான வாய்ப்பை எனக்கு வழங்கிய விகடனுக்கும், ... மேலும் பார்க்க

What To Watch: 'TTT' முதல் 'மை லார்ட் வரை' - இந்த வாரம் தியேட்டர் & ஓடிடி ரிலீஸ்கள் இவைதான்!

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-யில் வெளியாகியுள்ள திரைப்படங்கள், சீரிஸ்களின் லிஸ்ட்.'மை லார்ட்' (தமிழ்) சசிகுமார், சைத்ரா நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மை லார்ட்'. ராஜு முருகன் இயக்கியிருக்... மேலும் பார்க்க

Pookie Review: அந்நியப்பட்டு நிற்கும் `ஜென் ஜி' காதல்; க்ளிக்காகிறதா இந்த பிரேக்கப் காமெடி டிராமா?

ஐடி ஊழியர்களாக இருக்கும் கைலாஷும் (அஜய் திஷன்) ஆழியும் (ஆர்.கே. தனுஷா) காதலித்து வருகிறார்கள். காதலில் செல்லமாக 'பூக்கி' எனவும் பரஸ்பரம் இவர்கள் அழைத்துக் கொள்கிறார்கள். சில தவறான புரிதல்கள் காரணமாக இ... மேலும் பார்க்க

"எனக்கு மெலடி தான் ஸ்ட்ராங்கான ஏரியா!" - ஹாரிஸ் 25 ஸ்பெஷல்! | From Vikatan Archives

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு சினிமாவில் இது 25வது ஆண்டு. அவர் இசையமைப்பாளராக அறிமுகமான 'மின்னலே' திரைப்படம் வெளியாகி பிப்ரவரி மாதத்துடன் 25 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. அப்படமும் இந்த வாரம் ரீ ரிலீ... மேலும் பார்க்க

நீ கவிதைகளா: `இந்த ஒரு வரிக்கு 3 நாட்கள் எடுத்துக்கொண்டோம்' - பாடலாசிரியர் ஜிகேபி | வரித்துணையே 01

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த ... மேலும் பார்க்க

With Love: "உங்களுடைய பாராட்டும், அன்பான வார்த்தைகளும்.!- விஜய் தேவரகொண்டாவுடன் அபிஷன் ஜீவிந்த்

'டூரிஸ்ட் ஃபேமிலி' பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'வித் லவ்'. இயக்குநர் மதன் இயக்கியிருக்கும் 'வித் லவ்' படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் 'டூரிஸ்ட் ஃ... மேலும் பார்க்க