செய்திகள் :

Yezhu Kadal Yezhu Malai: "சில நேரங்களில் அவர் முகம் இயேசுவைப் போலவே தெரியும்"- இயக்குநர் ராம் பேட்டி

post image

இயக்குநர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஏழு கடல் ஏழு மலை'.

சில ஆண்டுகளுக்கு முன்னரே இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், பல திரைப்பட விழாக்களிலும் இப்படம் திரையிடப்பட்டது.

சூரி - ஏழு கடல் ஏழு மலை
சூரி - ஏழு கடல் ஏழு மலை

தற்போது இத்திரைப்படம் திரையரங்க வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது. அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

திரைப்படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து புரமோஷனில் ஈடுபட்டு வரும் இயக்குநர் ராம், அதன் ஒரு பகுதியாகக் கோவையில் உள்ள பிராட்வே திரையரங்கிற்கு கடந்த 7-ஆம் தேதி வந்திருந்தார்.

அங்கு இயக்குநர் ராமுடன் நாம் உரையாடினோம். அவர், "இந்தத் திரைப்படம் குழந்தைக்குச் சொல்லப்படும் கதை என்பதால் அந்த அழகோடும், அந்த சுவாரஸ்யத்தோடும் சொல்லப்பட்டிருக்கும்.

அதற்கான நிஜ எமோஷன்கள் படத்தில் இருக்கும். 'பேரன்பு' படத்தின் பிரீமியர் ஷோவில் படத்தைப் பார்த்துட்டு நிவின் பாலி சார் 'நாம் ஒரு படம் சேர்ந்து பண்ணனும்' என்றார்.

நிவின் பாலி - ஏழு கடல் ஏழு மலை
நிவின் பாலி - ஏழு கடல் ஏழு மலை

இந்தக் கதையில் ஓர் இம்மார்ட்டல் கதாபாத்திரம் எழுதும்போது அவர் முகம்தான் எனக்குத் தோன்றியது. சில நேரங்களில் அவருடைய முகத்தில் தாடி வளர்ந்தால், இயேசுவின் முகம் போலவே எனக்குத் தெரியும். அதனால்தான் அந்தக் கதாபாத்திரத்திற்கு அவர் முகம் என் நினைவுக்கு வந்தது.

அவருடைய நடிப்பும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருக்கு காமெடி வரும், ரொமான்ஸ் வரும், ஆக்ஷன் வரும். அந்த மூன்றுமே இந்தக் கதையில் இருக்கிறது.

சூரி அண்ணனைப் பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது என நினைக்கிறேன். அவரை எனக்கு பல வருடங்களாகத் தெரியும். அவரை நான் 'வெண்ணிலா கபடிக் குழு' படத்திலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

'பேரன்பு' படத்தை அவர் பாராட்டிய விதமும் என்னைக் கவர்ந்தது. எனக்கும் அவருக்கும் எப்போதும் நல்ல புரிதல் இருக்கும். இந்தக் கதையே ஓர் இம்மார்ட்டல் மேனுக்கு எதிராக ஒரு மார்ட்டல் மேன் இருப்பதுதான்.

இயக்குநர் ராம்
இயக்குநர் ராம்

அதற்கு யார் பொருத்தமாக இருப்பார் எனப் பார்த்தால் அவர் இருந்தார். ஹீரோவை விடச் சிறந்த கதாபாத்திரம். இந்தக் கதையில் ஒரு காதல் இருக்கிறது. பீரியாடிக் ஆகவும், மாடர்னாகவும் பண்ண வேண்டும்.

அதை இந்த பட்ஜெட்டிற்குள் பண்ண வேண்டும் என்பதும் இருந்தது. அனைத்திற்கும் பொருந்தி வந்தது அஞ்சலிதான். நடிகர்கள் இந்தப் படத்திற்கு எவ்வளவு முக்கியமோ, அதுபோல எலி, யானை, குரங்கு, பூனையும் இப்படத்தில் முக்கியமானதாக இருக்கும்" எனப் பகிர்ந்துகொண்டார்.

Sigma: "நான் முதலில் தியேட்டரில் பார்த்த படம்..." - ஜேசன் சஞ்சய் சொன்னதும் அதிர்ந்த அரங்கம்

முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் 'சிக்மா' திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஜேசன் இயக்குநராக அறிமுகமாகியி... மேலும் பார்க்க

"என் குடும்பத்திற்கு நன்றி" - மேடையில் பேசிய ஜேசன் சஞ்சய்- 'TVK, TVK..' என ஆரவாரம் செய்த மாணவர்கள்

முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் 'சிக்மா' திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஜேசன் இயக்குநராக அறிமுகமாகியி... மேலும் பார்க்க

எந்திரன் : தகர்க்கப்பட்ட எல்லைகள்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 22

`சினி'ஸ்கோப் 22எந்திரன்2000க்குப் பிறகு சுமார் 10 வருடங்கள், இந்தியாவின் பெரும்பகுதி சினிமா மார்க்கெட்டை தன்வசம் வைத்திருக்கும் இந்தி சினிமா, காதல் படங்களையும், சிறிய அளவு ஸ்பை ஆக்‌ஷன் படங்களையும் 20 ... மேலும் பார்க்க

என்ன விலை: ``என் நடிப்பை பார்த்து நிமிஷா சஜயன் எனக்கு முத்தம் கொடுத்தாங்க" - நடிகர் கருணாஸ்

சஜீவ் பழூர் இயக்கத்தில் நிமிஷா சஜயன், கருணாஸ் நடித்த ‘என்ன விலை’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் கருணாஸ், ``25 வருஷத்துக்கு முன்னாடி, 200... மேலும் பார்க்க

Yuvan Shankar Raja: 'மீண்டும் அந்த OG கூட்டணிகள்' - எதிர்பார்ப்பைக் கூட்டம் யுவன் லைன் அப்!

முன்னணி இயக்குநர்களின் திரைப்படங்கள், புதுமுக இயக்குநர்களுடன் கூட்டணி என யுவன் அடுத்தடுத்து பரபரப்பான லைன்அப்களை வைத்திருக்கிறார். அப்படங்களும் அடுத்தடுத்து ரிலீஸுக்குத் தயாராகிவருகின்றன. அந்த லைன்அப்... மேலும் பார்க்க

Sardar 2: "நல்ல பெயர் வாங்க அண்ணன் சூர்யாவை மாட்டிவிடுவேன்" - கார்த்தி ஜாலி டாக்

கார்த்தி நடித்திருக்கும் 'சர்தார் 2' படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பி.எஸ். மித்ரன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், ரஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் நடித... மேலும் பார்க்க