செய்திகள் :

Youth: "எனக்கு இப்போது 24 வயது. ஆனால்.!" - நெகிழும் கென் கருணாஸ்

post image

கென் கருணாஸ் இயக்கி நடித்திருக்கும் 'யூத்' திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது. 'சிறை' அனிஷ்மா, மினாட்சி தினேஷ், இன்ஸ்டாகிராம் கன்டென்ட் கிரியேட்டர் சின்ன தமிழா உள்ளிட்ட பலர் இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இந்த 'ஜென் சி' படைப்புக்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

 'யூத்' படம்
'யூத்' படம்

இத்திரைப்படத்தின் மூலம் பல அறிமுக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அறிமுகமாவதால் இப்படம் பலருக்கும் எவ்வளவு முக்கியமானது என்பதைச் சொல்லி கென் கருணாஸின் தாயார் கிரேஸ் கண்கலங்கியிருந்தார்.

நாளை திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றைப் போட்டிருக்கிறார் கென்.

அந்தப் பதிவில், "சினிமா மீது நான் காதல் கொண்ட நாள் முதல், மற்ற அனைத்தும் மெல்ல மெல்ல இரண்டாம் பட்சமாகிவிட்டன. அது வெறும் பார்வையாக மட்டும் இல்லை. என் வாழ்க்கையின் ஒன்றாக மாறிவிட்டது.

எனக்கு இப்போது 24 வயது. ஆனால் குழந்தைப் பருவத்திலிருந்து இன்று வரை, என்னுடன் தங்கியிருந்த ஒரே விஷயம் சினிமாதான். எந்தவொரு சூழலிலும் சினிமா என்னை ஒருபோதும் கைவிடவில்லை. 'யூத்' படத்தில் இனி வேலை செய்ய முடியாது என்பது என்னால் நம்ப முடியவில்லை.

இவ்வளவு காலம் அது என் சொந்த குழந்தை போலவே இருந்தது. இத்தனை நாட்களாகத் தூங்கும் வரை அதைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன். ஒரு ஹீரோவாக, அழகான ஒரு கதையில் வாழ்ந்தேன்.

ஒரு இயக்குநராக, என்னுடைய சொந்த பாதையைக் கண்டடைந்தேன். ஒவ்வொரு ஃப்ரேமும் என் மனதுக்கு நெருக்கமானதாக இருந்திருக்கிறது. இந்தப் படம் என்னை உடைத்த நாட்களும் இருந்தன.

என்னை உருவாக்கிய நாட்களும் இருந்தன. ஆனால் எப்போதும் நான் ஏன் சினிமா பயணத்திற்கு வந்தேன் என்பதை நினைவூட்டியது. இந்தப் படத்தை உங்களை மனதில் வைத்துத்தான் உருவாக்கினேன். நீங்கள் எங்கு புன்னகைப்பீர்கள், எங்கு என்னோடு இணைவீர்கள், எப்படி உணர்வீர்கள் என எப்போதும் யோசித்துக்கொண்டே இருந்தேன். என்னுடையதாக 'யூத்', உங்களுடையதாக மாறுகிறது. அதைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். நான் அதனை காதலித்ததைவிட அதிகமாக காதலியுங்கள்." எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.

என் ரோஜா நீயா: `மணிரத்னம் சார் அனுப்பிய ஸ்மைலிதான் பெரிய பாராட்டு!' - மதன் கார்க்கி | வரித்துணையே 10

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த ... மேலும் பார்க்க

Tamil Cinema: திரைப்பட நடிகர்கள் வெப் சீரிஸில் நடிக்கக்கூடாதா!- தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவு என்ன?

கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் என அனைவரும் இணைந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இ... மேலும் பார்க்க

"வெட்கப்படாமல் பொதுக்கூட்டத்தில்.." - சி.வி.சண்முகத்திற்கு கண்டனம் தெரிவித்த நடிகர் சங்கம்!

விழுப்புரத்தில் சி.வி.சண்முகம் தலைமையில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடர்ந்து நடந்து வரும் பாலியல் குற்றங்கள், சட்ட ஒழுங்கு சீர்கேடுகள் ஆகியவற்றை கட்டுப்படுத்தாமல் தவறியதாக, திமுக அரசைக் கண்டித்... மேலும் பார்க்க

சூர்யாவின் 'கருப்பு'வில் சிம்பு பாடிய பவர்ஃபுல் பாடல்; வேகமெடுக்கும் `அரசன்' ஷூட்டிங் - பரபர அப்டேட்

தாணுவின் தயாரிப்பில் வெற்றிமாறன் - சிலம்பரசன் கூட்டணியில் 'அரசன்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வேகம் எடுத்திருக்கிறது. 'அரசன்' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்து பல வாரங்கள் ஆனதும்... மேலும் பார்க்க