`ஏன் நம்ம ஸ்கூல் மட்டும் இப்படியிருக்குன்னு' அரசு பள்ளியில் பயனில்லா கழிவறை; மனம...
Youth: "என் வாழ்க்கைய இந்தப் படம் மாத்தும்னு நினைக்கல.!" - கென் கருணாஸ் எமோஷனல்
கென் கருணாஸ் இயக்கத்தில் வெளியான 'யூத்' படத்தின் சக்சஸ் மீட் இன்று (மார்ச். 31) நடைபெற்றிருக்கிறது.
இதில் கலந்துகொண்டு பேசிய கென், " நான் ஒரு படம் பண்ணி, தியேட்டர் விசிட்டுக்கு போகும் போதெல்லாம் என்னைப் பார்த்து மக்கள் கத்துறாங்கன்னு நம்பவே முடியல.

நான் ரொம்ப ஆசைப்பட்ட ஒரு விஷயம் எல்லாம் உண்மையா நடக்குது. எங்க அப்பா ஒரு விஷயம் சொல்லுவாரு, நம்ம ரொம்ப ஆசைப்பட்ட விஷயம் நிச்சயமா நடக்கும்போது நமக்கு நம்புகிற மாதிரி இருக்காதுன்னு சொல்லுவாரு.
என் ஆசையை நிறைவேத்துன தயாரிப்பாளருக்கு நன்றி. எங்க அப்பா, அம்மாவ பெருமைப்படுத்தத் தான் இந்த 'யூத்' படத்தை நாங்க பண்ணோம். அவங்க எல்லாரும் இப்போ சந்தோஷமா இருக்காங்க.
நாங்க நினைச்சதைத் தாண்டி படம் கலெக்ஷன் ஆகிருக்கு. இந்தப் படத்துல நடிச்ச எல்லாருமே அடுத்த அடுத்த கட்டத்துக்கு போகுறது சந்தோஷமா இருக்கு. எல்லா விமர்சனங்களையும் பார்த்தேன், படிச்சேன். என்னோட அடுத்தடுத்த படங்கள்ல அது எல்லாத்தையும் மாத்த முயற்சி செய்றேன்.

என் வாழ்க்கைய இந்தப் படம் மாத்தும்'னு நினைக்கல. இந்த 'யூத்' படம் எனக்கு நிறைய சொல்லிக்கொடுத்துருக்கு. ஒரு ஹீரோவா இந்தப் படம் என்னை மாத்திருக்கு. எல்லோருக்கும் ரொம்ப நன்றி" என்று எமோஷனலாகப் பேசியிருக்கிறார்.














