செய்திகள் :

Zimbabwe: "மக்களிடம் மரியாதையைச் சம்பாதித்ததுதான் எங்களின் பெரிய வெற்றி" - கேப்டன் சிக்கந்தர் ராசா

post image

டி20 உலகக்கோப்பையின் நேற்றைய போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்பே அணி வெற்றி பெற்றிருக்கிறது.

சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. இந்த வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜிம்பாப்பே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா, "நாங்கள் எதிர்காலத்தை நோக்கி கவனத்தைச் செலுத்துகிறோம். கடந்த இரண்டு வாரங்களில் எங்கள் வீரர்கள் காட்டிய முயற்சி மிகப்பெரியது.

 ஜிம்பாப்பே அணி
ஜிம்பாப்பே அணி

எங்களால் இன்னும் சிறப்பாக விளையாட முடியும். நாங்கள் இந்த இடத்திற்கு வருவோம் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. மக்களின் மனதை வென்றதும், அவர்களின் மரியாதையைச் சம்பாதித்ததும்தான் எங்களின் பெரிய வெற்றி.

நாம் நல்ல கிரிக்கெட் விளையாடுகிறோம் என்றால் டாஸ் எவ்வளவு முக்கியம் என்று வீரர்களிடம் நான் சொல்லியிருக்கிறேன். நேற்றைய ஆட்டத்தில் டெத் ஓவர்களில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தாலும் நம்மால் முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

பேட்டிங் ஆர்டரை நிலைமைக்கு ஏற்ப மாற்றினோம். ஒவ்வொரு முடிவும் திட்டமிட்டதே. இதுவரை தோல்வியே இல்லாமல் சூப்பர் 8-க்கு வந்தது பெருமையாக இருக்கிறது" என்று பேசியிருக்கிறார்.

SL Vs Zim : 'ஒன் டைம் வொண்டரல்ல!' - மீண்டும் மீண்டும் சாதிக்கும் ஜிம்பாப்வே!

டி20 உலகக்கோப்பையில் கொழும்புவில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இதன் மூலம் க்ரூப் B இல் முதலிடத்தை பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற... மேலும் பார்க்க

T20 WC : `என் வாழ்க்கையை மாற்றியவர் தோனி' - மனம் திறந்த பாக்., வீரர் உஸ்மான் தாரிக்

Usman Tariqபாகிஸ்தான் கிரிக்கெட்டில் தற்போது அதிகம் பேசப்படும் பெயர்களில் முக்கியமானவர், Usman Tariq.2026 டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் நம்பிக்கைக்குரிய ஸ்பின்னராக மாறியுள்ள தாரிக்கின் இ... மேலும் பார்க்க

IND vs PAK: குல்தீப் யாதவிடம் கோபப்பட்ட ஹர்திக்; இணையத்தில் வைரலாகும் வீடியோ! - நடந்தது என்ன?

2026 டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றிருக்கிறது.இதன்மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. நேற்றையப் போட்டியில் த... மேலும் பார்க்க

IND vs PAK: "அவர்களை அதிகம் ஓட வைக்க முயன்றேன்; அது நன்றாக வேலை செய்தது" - ஆட்டநாயகன் இஷான் கிஷன்

2026 டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றிருக்கிறது. இதன்மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. நேற்றையப் போட்டியில் ... மேலும் பார்க்க

IND vs PAK: ' இஷான் கிஷனின் ‘அவுட் ஆஃப் த பாக்ஸ்’ சிந்தனை' - கேப்டன் சூர்யகுமார் யாதவ்

2026 டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றிருக்கிறது. இதன்மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. நேற்றையப் போட்டிக்கு ... மேலும் பார்க்க

Ind vs Pak : 'இலங்கையில் பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா!' - சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் “நடக்குமா, நடக்காதா?” என்று ஆரம்பத்திலிருந்தே காத்திருந்த இந்த T20 தொடரின் மிகப்பெரிய போட்டியான இந்தியா vs பாகிஸ்தான் ஆட்டம், பல சர்ச்சைகளுக்குப் பிறகு இன்று கொழும்ப... மேலும் பார்க்க