Book Fair: "சாதி, நிலம், பொருளாதாரம் போன்றவற்றையும் பேசுவதுதான் தலித் பெண்ணியம்"...
அதிமுக: 'பெண்களுக்கு மாதம் ரூ.2000; ஆண்களுக்கும் இலவசப் பேருந்து பயணம்' - அதிரடி வாக்குறுதிகள்
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் முதற்கட்ட தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கிறார்.

அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் முக்கிய அம்சங்கள், 'குலவிளக்கு திட்டத்தின்படி அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் குடும்பத்தலைவிகளின் வங்கிக் கணக்கில் மாத மாதம் 2000 ரூபாய் அளிக்கப்படும்.
*நகரப் பேருந்துகளில் ஆண்களுக்கும் கட்டணமில்லா பயணம்.
*அம்மா இல்லம் திட்டத்தின் மூலம் கிராமம் நகர்ப்புறங்களில் குடியிருக்க வீடு இல்லாதவர்கள் அரசே நிலம் வாங்கி வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.
*ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலினத்தவர்களில் மகன், மகள் திருமணமாகி தனிக்குடித்தனம் செல்கையில் வீடு கட்டி கொடுக்கப்படும்.

*நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் நூற்றைம்பது நாட்களாக விரிவுபடுத்தப்படும்.
*5 லட்சம் மகளிருக்கு 25000 ரூபாய் மானியத்துடன் அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்படும்.
எம்.ஜி.ஆரின் 109 வது பிறந்தநாளான இன்று அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு முதற்கட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.













