செய்திகள் :

``அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையா... அந்த நோக்கமே இல்லை" - ஈரான் திட்டவட்டம்

post image

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் கூட்டாகப் போர் தொடங்கி 25 நாள்களுக்கும் மேலாக தொடர்கிறது. இந்தப் போரால் உலகளவில் கச்சா எண்ணெய், எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. சில நாடுகள் அவசர நிலையை அறிவிக்கும் முடிவுக்கு சென்றிருக்கின்றன. இந்தியப் பிரதமர் மோடியும், இன்னொரு லாக்டவுன் நிலைக்கு தயாராக வேண்டும் என பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இதற்கிடையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பத்திரிகைச் செயலாளர், ``ஈரானிடம் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்தப் பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது." எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி

இது தொடர்பாக பேசிய ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ``மத்தியஸ்தர்கள் மூலம் அமெரிக்கா யோசனைகளை அனுப்பி வருகிறது. ஆனால், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஈரான் தற்போது அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அவ்வாறு செய்யும் நோக்கமும் இல்லை" எனக் கூறியுள்ளார்.

ட்ரம்பின் திட்டம் என்ன?

இஸ்ரேலின் சேனல் 12-ன் படி, போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் பல கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அமெரிக்கா கேட்டிருக்கிறது. அதாவது, 'ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் எண்ணத்தை கைவிடுவதாக உறுதியளிக்க வேண்டும். அணுசக்தி நிலையங்களைக் கலைப்பதாக உறுதியளிக்க வேண்டும். மேலும் ஈரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை, ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகமையிடம் (IAEA) ஒப்படைக்க வேண்டும். இந்த முகமைதான் இனிவரும் காலங்களில் இந்த விவகாரத்தைக் கண்காணிக்க வேண்டும்.

டொனால்டு ட்ரம்ப்

கூடுதலாக, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா, காசாவில் உள்ள ஹமாஸ் மற்றும் ஏமனில் உள்ள ஹூதிகள் போன்ற பிராந்தியத்தின் மறைமுக ஆதரவு அமைப்புகளுக்கு நிதியளிப்பதை ஈரான் நிறுத்த வேண்டும்.

மேலும், ஹார்முஸ் ஜலசந்தியை ஒரு சுதந்திரமான கடல்வழிப் பாதையாக செயல்பட வைப்பதற்காக, அதை மீண்டும் திறக்க வேண்டும். இதற்கு ஈடாக ஈரான் மீதான அனைத்து சர்வதேசத் தடைகளும் நீக்கப்படும்' உள்ளிட்ட முடிவுகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எதிர்பார்க்கிறார்.

``இந்த நட்பு நாடுகள் மட்டும் பாதுகாப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கலாம்" - ஈரான் பட்டியலில் இந்தியா?

ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் கூட்டாகப் போர் தொடங்கி 25 நாள்களுக்கும் மேலாக தொடர்கிறது. இந்தப் போரால், ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியிருக்கிறது. இதனால் ஏற்கனவே எண்ணெய் விலைகள் கடுமையாக உயர... மேலும் பார்க்க

பாபநாசம் தொகுதி அமமுக-வுக்கு இல்லை; ரூட் போடும் வைத்தி! - திமுகவில் இணைகிறாரா டிடிவி விசுவாசி?

அமமுக-வின் துணை பொதுச்செயலாளர் எம்.ரெங்கசாமி. டி.டி.வி.தினகரனுக்கு அடுத்தபடியாக டெல்டா அமமுக-வின் முகமாக இருந்தவர். சசிகலாவின் நெருங்கிய உறவினர். அதிமுக-வில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளராக பதவி வகி... மேலும் பார்க்க

பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட்ட ஊட்டி; தலைமைக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய அ.தி.மு.க நிர்வாகிகள்!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு மற்றும் வேட்பாளர் பட்டியல்களை அரசியல் இயக்கங்கள் வெளியிட்டு வருகின்றன. அ.தி.மு.க தரப்பில் களமிறங்கும் முக்கிய... மேலும் பார்க்க