செய்திகள் :

'அரசியலில் தனி மனித ஒழுக்கத்தை பின்பற்றாதது திமுக' - வானதி சீனிவாசன் கடும் விமர்சனம்

post image

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது. அந்த வழக்கில் உழைத்த காவல்துறை மற்றும் வழக்கறிஞர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

வானதி சீனிவாசன்

மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. கோவையில் 82 வயதான மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. வயதானவர்கள் வீட்டில் தனியாக வாழ்வதற்கு கூட பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது.

சட்டவிரோத மது, போதை விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும். தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் கடமையை தமிழ்நாடு அரசு தவறிவிட்டது. திராவிட மாடல் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதில் தோல்வியடைந்த அரசு என்பது நிரூபணமாகியுள்ளது.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

தவெக தலைவர் விஜய்யின் மகளிருக்கான வாக்குறுதிகளை வரவேற்கிறேன். வாக்குறுதிகள் நல்லதாக இருக்கலாம். ஆனால் தனியாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அவருக்கு இல்லை.

விஜய் தனித்து ஆட்சி அமைப்பார் என்பதை யாரும் நம்ப மாட்டார்கள். விஜய் ஆட்சிக்கு வரப்போவதில்லை. அவருக்கு வாய்ப்பு இல்லை ராஜா என்று தான் சொல்ல வேண்டும். நான் தனிப்பட்ட தாக்குதலில் இறங்க மாட்டேன். அரசியல் தலைவர்கள் தனிமனித ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். அந்த ஒழுக்கத்தை பின்பற்றாதது திமுக.

ஸ்டாலின் - திமுக
ஸ்டாலின் - திமுக

தனி மனித வாழ்க்கையில் நாங்கள் எப்படி வேண்டுமானாலும் இருப்போம் என்கிற கலாசாரத்தை திமுக உருவாக்கியுள்ளது. ஸ்டாலினுக்கு கண்ணை மூடி திறந்தாலே பாஜக தான் கண்ணுக்கு தெரிகிறது. அதனால் எங்களை விமர்சிக்கிறார்” என்றார்.

தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக திருமாவளவனை மாற்றிய முதல் தேர்தல் வெற்றி! | முதல் களம் 09

திருமாவளவனின் முதல் தேர்தல் வெற்றி!முதல் களம் 09தமிழக அரசியலில் கட்சித் தலைவர்களின் செல்வாக்கு, கூட்டணி பலம் மற்றும் சமூகம் ஆகியவைதான் எப்போதும் முக்கியப் பங்காற்றி வருகின்றன. ஆனால், இந்த நிலையான சூத்... மேலும் பார்க்க

ஈரோட்டில் 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' பயணம்; இபிஎஸ் ஆவேசப் பேச்சு | Photo Album

அந்தியூர் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் அந்தியூர் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் அந்தியூர் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் அந்தியூர் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் அந்தியூர் தமிழகத்தை ... மேலும் பார்க்க

'எங்களது தலைவரின் ரத்தத்திற்கு பழி வாங்காமல் விடமாட்டோம்' - ஈரான் கூறும் 'அமெரிக்கா'வின் பிளான்?

ஈரானின் உச்ச தலைவர்‌ இறந்து ஒரு வாரத்திற்கும் மேலாகிறது.இன்னமும் அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் போர் தொடர்ந்து வருகிறது.இந்தப் போர் இன்னும் நீளும் என்று அமெரிக்க அதிபர்‌ ட்ரம்ப் தொடர்ந்து சிக்னல் தந்து வரு... மேலும் பார்க்க

நீங்கள் 'இதற்காக' வந்தால் என்னால் வரமுடியாது; நான் பிஸி - முர்முவிற்கு 'தங்கை' மம்தா பதில்

நேற்றும், இன்றும் மேற்கு வங்கத்தில் 9-வது சர்வதேச சந்தாலி மாநாடு நடக்கிறது.இந்தியாவின் ஜார்காண்ட், ஒடிசா, மேற்கு வங்கம், பீகார் ஆகிய மாநிலங்களில் சந்தால் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர்.அவர்களது கல... மேலும் பார்க்க