செய்திகள் :

"இயற்கையை நேசிக்க மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும்" - K.K.S.S.R. ராமச்சந்திரன்

post image

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு வனத்துறை - ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் இணைந்து நடத்தும் 'வனமும் வாழ்வும்' என்ற தலைப்பிலான ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் நடக்கிறது.

இதை ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் முருகன் முன்னிலையில், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் தலைமையில், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியதாவது, “இயற்கையை நேசிக்க ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மாணவனும் குறைந்தது 2 மரங்களை நட்டுப் பராமரிக்க வேண்டும். எந்த வேலையாக இருந்தாலும் அதை ரசனையோடு செய்தால் மனம் நிம்மதி பெறும்" என்றார்.

மேலும், "வனத்தைப் பாதுகாப்பது கடினமான வேலை அந்த வேலையைச் செய்யும் வனத்துறை பணியாளர்களைப் பாராட்டுகிறேன். தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி மாநிலம் முழுவதும் 20,000 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வன பாதுகாப்பு, காட்டுத்தீ மேலாண்மை, வனவிலங்கு கணக்கெடுப்பு மற்றும் மனித விலங்கு மோதல் மேலாண்மை குறித்த சான்றிதழ் பயிற்சி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உரை
வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உரை

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 25 மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு பள்ளியிலும் பதினோராம் வகுப்பு மாணவர்களிலிருந்து பத்து மாணவர்கள், பத்து மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு பள்ளிகளில் அந்த மாணவர்களுக்கு வனப் பாதுகாப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் வனப் பாதுகாப்பு, காட்டுத்தீத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி வழங்குவர்.

மேலும் வனவிலங்கு கணக்கெடுப்பு அடிப்படை நடைமுறைகள் மற்றும் புது தலைமுறைக்கு வனப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவர். மேலும் மனித விலங்கு மோதல் தடுப்பு மேலாண்மை மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விரிவான விளக்கங்களை வழங்குவர். இதன் மூலம் மாணவர்கள் விழிப்புணர்வு பெற்று சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முன்வருவர்” என்று பேசினார்.

மதுரை, கோவை மெட்ரோ: நிராகரித்த மத்திய அரசு: "அங்கெல்லாம் அனுமதி வழங்கியது எப்படி?" - எதிர்க்கட்சிகள்

மதுரை மற்றும் கோவை மாநகரங்களுக்கு முன்மொழியப்பட்ட மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் தர மறுத்திருக்கிறது. இரண்டு நகரங்களிலும் மக்கள்தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருப்பதனால் இந்த முடிவு... மேலும் பார்க்க

படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்கள்; சடலங்கள் மீது நடப்பட்ட காலிஃபிளவர்; 36 வருட ரத்த வரலாறு என்ன?

பீகாரில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலானது ராஷ்ட்ரீய ஜனதா தளம் + காங்கிரஸ் கூட்டணிக்குப் படுதோல்வியைப் பரிசளித்திருக்கிறது.மகாபந்தன் கூட்டணி இந்தத் தேர்தலில் வெறும் 35 இடங்களை மட்டுமே வென்ற... மேலும் பார்க்க

SIR: கம்பியூட்டரே இல்லா உதவி மையங்கள்; விழிபிதுங்கும் BLOக்கள்; குழம்பி நிற்கும் சென்னைவாசிகள்

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் தமிழ்நாட்டில் வேகவேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. டிசம்பர் 4 ஆம் தேதிக்குள் 6 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களிடம் B.L.O-க்கள் விண்ணப்பப் படிவங்களை வழங... மேலும் பார்க்க

SIR: `விரக்தி, வேலைப் பளு, அவமரியாதை' - கண்டுகொள்ளப்படாத BLOகளின் மன உளைச்சல்; கவனிக்கப்படுமா?

தமிழ்நாட்டின் தற்போது மிக முக்கியமான பேசுபொருளாகியிருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம் கொண்டுவந்திருக்கும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தம் (Special Intensive Revision - SIR).பீகார் சட்டமன்றத் தேர்தல... மேலும் பார்க்க

விருதுநகர்: "பிறந்த மண்ணுக்கு எதுவும் செய்யவில்லை" - 20 சென்ட் நிலத்தை சாலை அமைக்க தானமளித்த நீதிபதி

விருதுநகரில் புத்தக திருவிழா கடந்த 14ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி பேசியதாவது, “நீதிபதியாக ஏழு ஆண்டுகள் இருந்துள்ளேன்.... மேலும் பார்க்க

கூட்டணி ஆட்சியில் உறுதியாக நிற்கும் பிரேமலதா; தயங்கும் பிரதான கட்சிகள்; குழப்பத்தில் நிர்வாகிகள்!

"மக்கள் விரும்பும் மாபெரும் கூட்டணி நிச்சயம் அமையும், இந்த முறை மிக பொறுமையாக, தெளிவாகச் சரியான நேரத்தில் முடிவெடுப்போம், கூட்டணி அமைச்சரவையில் நாங்கள் இருப்போம்" என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா... மேலும் பார்க்க