செய்திகள் :

மதுரை, கோவை மெட்ரோ: நிராகரித்த மத்திய அரசு: "அங்கெல்லாம் அனுமதி வழங்கியது எப்படி?" - எதிர்க்கட்சிகள்

post image

மதுரை மற்றும் கோவை மாநகரங்களுக்கு முன்மொழியப்பட்ட மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் தர மறுத்திருக்கிறது. இரண்டு நகரங்களிலும் மக்கள்தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருப்பதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, கோயம்புத்தூர் நகரத்தின் மக்கள்தொகை 15.84 லட்சமாகவும், மதுரை நகரத்தின் மக்கள்தொகை 15 லட்சமாகவும் இருப்பதாக, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் நவம்பர் 14, 2025 தேதி வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Madurai Metro: AI Image Shared By Su Venkatesan Mp
Madurai Metro: AI Image Shared By Su Venkatesan Mp

மெட்ரோ ரயில் கொள்கை 2017ன் படி, மெட்ரோ ரயில் திட்டத்தைத் திட்டமிட நகரத்தின் மக்கள்தொகை 20 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும்.

மேலும் அந்தச் செய்திக்குறிப்பில், "மெட்ரோ திட்டங்கள் செலவு மிகுந்தவை, நீண்டகால நிலைத்தன்மைக்காக கவனமாகத் திட்டமிடப்பட வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த நகரங்களுக்கு வலுவான பேருந்து அமைப்பு மற்றும் BRTS (விரைவான பேருந்து போக்குவரத்து) ஆகியவை பொருத்தமானதாக இருக்கலாம்" என்றும் கூறியுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட், கோயம்புத்தூர் மெட்ரோ ரயிலுக்கான விரிவான திட்ட அறிக்கையை ஜூலை 2023 இல் சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.

Metro rail
Metro rail

'நீண்டகால நிலைத்தன்மைக்காக' மெட்ரோ ரயில் திட்டங்களைத் திட்டமிடுவதாகக் கூறும் மத்திய அரசு, 2011 மக்கள்கொகையைக் கொண்டு இத்திட்டத்தை நிராகரித்திருப்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் கடந்த 15 ஆண்டுகளாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடக்காத நிலையில் தற்போது கோவையில் 30 லட்சம் மக்கள் வாழ்வதாகவும் கூறப்படுகிறது.

போபால் மற்றும் பாட்னாவிற்கான மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ திட்டத்தை வேண்டுமென்றே நிராகரித்துவிட்டதாகவும், இது கோவை மக்களுக்குச் செய்யும் துரோகம் என்றும் கோவை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி பி. ராஜ்குமார் குற்றம் சாட்டியிருப்பதாக தி இந்து தளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

அத்துடன் மதுரை எம்.பி சு.வெங்கடேசன், "கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை 20 லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை இருப்பதாகக் கூறி நிராகரித்துள்ளது ஒன்றிய அரசு.

தமிழ்நாட்டின் மீதான ஒன்றிய அரசின் வஞ்சகம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

குருகிராம், புவனேஷ்வர், ஆக்ரா, மீரட் உள்ளிட்ட நகரங்ளின் மக்கள்தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக இருந்தபோதும் அங்கு மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி வழங்கியது எப்படி?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

"இயற்கையை நேசிக்க மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும்" - K.K.S.S.R. ராமச்சந்திரன்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு வனத்துறை - ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் இணைந்து நடத்தும் 'வனமும் வாழ்வும்' என்ற தலைப்பிலான ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம்... மேலும் பார்க்க

படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்கள்; சடலங்கள் மீது நடப்பட்ட காலிஃபிளவர்; 36 வருட ரத்த வரலாறு என்ன?

பீகாரில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலானது ராஷ்ட்ரீய ஜனதா தளம் + காங்கிரஸ் கூட்டணிக்குப் படுதோல்வியைப் பரிசளித்திருக்கிறது.மகாபந்தன் கூட்டணி இந்தத் தேர்தலில் வெறும் 35 இடங்களை மட்டுமே வென்ற... மேலும் பார்க்க

SIR: கம்பியூட்டரே இல்லா உதவி மையங்கள்; விழிபிதுங்கும் BLOக்கள்; குழம்பி நிற்கும் சென்னைவாசிகள்

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் தமிழ்நாட்டில் வேகவேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. டிசம்பர் 4 ஆம் தேதிக்குள் 6 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களிடம் B.L.O-க்கள் விண்ணப்பப் படிவங்களை வழங... மேலும் பார்க்க

SIR: `விரக்தி, வேலைப் பளு, அவமரியாதை' - கண்டுகொள்ளப்படாத BLOகளின் மன உளைச்சல்; கவனிக்கப்படுமா?

தமிழ்நாட்டின் தற்போது மிக முக்கியமான பேசுபொருளாகியிருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம் கொண்டுவந்திருக்கும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தம் (Special Intensive Revision - SIR).பீகார் சட்டமன்றத் தேர்தல... மேலும் பார்க்க

விருதுநகர்: "பிறந்த மண்ணுக்கு எதுவும் செய்யவில்லை" - 20 சென்ட் நிலத்தை சாலை அமைக்க தானமளித்த நீதிபதி

விருதுநகரில் புத்தக திருவிழா கடந்த 14ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி பேசியதாவது, “நீதிபதியாக ஏழு ஆண்டுகள் இருந்துள்ளேன்.... மேலும் பார்க்க

கூட்டணி ஆட்சியில் உறுதியாக நிற்கும் பிரேமலதா; தயங்கும் பிரதான கட்சிகள்; குழப்பத்தில் நிர்வாகிகள்!

"மக்கள் விரும்பும் மாபெரும் கூட்டணி நிச்சயம் அமையும், இந்த முறை மிக பொறுமையாக, தெளிவாகச் சரியான நேரத்தில் முடிவெடுப்போம், கூட்டணி அமைச்சரவையில் நாங்கள் இருப்போம்" என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா... மேலும் பார்க்க