செய்திகள் :

​இளைய தளபதி `டு' தளபதி - விஜய்-க்கு வாழ்த்துகளையும் அவர் பற்றிய நினைவுகளையும் பகிர்ந்துகொள்ளுங்கள்!

post image

மை விகடன் (My Vikatan) தளத்தில் முதல்வர் விஜய்யின் திரைப் பயணத்தை பற்றி உங்கள் கருத்தைக் கட்டுரைகளாக எழுதி அனுப்புங்கள்!

தமிழ் சினிமாவின் செல்ல பிள்ளையான நடிகர் விஜய், தற்போது தமிழ் மக்களின் நெஞ்சில் குடியிருக்கும் மாண்புமிகு முதல்வர் ஆகிவிட்டார். அவரின் பிறந்தநாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

அவர் இன்று மக்கள் பணியில் தடம் பதித்திருந்தாலும், கடந்த முப்பதாண்டுகளாகத் தமிழ் திரையுலகில் அவர் நிகழ்த்திய சாதனைகளும், ரசிகர்களுக்குக் கொடுத்த நினைவுகளும் என்றும் அழியாதவை.

'நாளைய தீர்ப்பு' முதல் அவரது சமீபத்திய படங்கள் வரை, உங்களை உருக வைத்த, ரசிக்க வைத்த, கொண்டாட வைத்த 'நடிகர் விஜய்' அவர்களைப் பற்றிப் பேச விகடன் உங்களுக்கு ஒரு களம் அமைத்துத் தருகிறது.

மை விகடன் (My Vikatan) தளத்தில் முதல்வர் விஜய்யின் திரைப் பயணத்தை பற்றி உங்கள் கருத்தைக் கட்டுரைகளாக எழுதி அனுப்புங்கள். குறிப்பு:- உங்கள் கட்டுரை தொடர்பாக புகைப்படங்கள் இருப்பின் அவற்றையும் இணைத்து அனுப்புங்கள்!

நடிகர் விஜய்

முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘மை விகடன்’ உங்களுக்காக ஒரு சிறப்பு மைக்ரோ பக்கத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இதில் விகடன் வாசகர்களும், விஜய்யின் தீவிர ரசிகர்களும் தங்களின் வாழ்த்துகளையும் நினைவுகளையும் கட்டுரைகளாகப் பகிர்ந்து கொள்ளலாம்.

நீங்கள் செய்ய வேண்டியது!

நடிகர் விஜய் அவர்களுக்கு நீங்கள் கூற விரும்பும் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்து செய்தி.

விஜய் நடித்த திரைப்படங்களிலேயே உங்களை மிகவும் கவர்ந்த படம் எது? ஏன்?

தியேட்டரில் நீங்கள் பார்த்து ரசித்த, உங்களை ஆச்சர்யப்பட வைத்த அல்லது எமோஷனல் ஆக்கிய அவரது படத்தின் சிறந்த காட்சி அல்லது உங்களது மறக்க முடியாத சினிமா அனுபவம் உள்ளிட்டவற்றைப் பகிரலாம்.

விஜய் படங்கள்
விஜய் படங்கள்

வாசகர்கள் அனுப்பும் கட்டுரைகளில் இருந்து மிகச்சிறந்த முதல் மூன்று கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு விகடன் சார்பில் சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும்!

விதிமுறைகள்:

இந்தத் தொகுப்பு முற்றிலும் சினிமா மற்றும் கலை சார்ந்த கொண்டாட்டம் மட்டுமே. எனவே, கட்டுரைகள் அரசியல் சார்பற்று, பொழுதுபோக்கு மற்றும் திரைப்பயணத்தை மட்டுமே மையமாகக் கொண்டு அமைதல் வேண்டும்.

உங்கள் கட்டுரைகளை, my@vikatan.com என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள். குறிப்பு:- உங்கள் கட்டுரை தொடர்பாக புகைப்படங்கள் இருப்பின் அவற்றையும் இணைத்து அனுப்புங்கள்!

தங்களின் வாழ்த்துகளையும் நினைவுகளையும் 500 முதல் 1,000 வார்த்தைகளுக்குள் பிரத்யேகக் கட்டுரைகளாக எழுதி, எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தை விகடனுடன் இணைந்து கொண்டாடுங்கள்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

KGF Yash: "நான் உனக்குத் துணையாக இருக்கிறேன்" - புற்றுநோய் பாதிக்கப்பட்ட ரசிகருடன் பேசிய நடிகர் யஷ்!

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரமும், `கே.ஜி.எஃப்' (KGF) படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானவருமான நடிகர் யஷ், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தனது தீவிர ரசிகர் ஒருவருடன் வீடியோ கா... மேலும் பார்க்க

இசை ராஜ்ஜியமும், திரை காவியமும்..! | இளையராஜா - மணிரத்னம் பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

ராம் சரண் Bodyguard சம்பளம் ஒரு நாளுக்கு 4 லட்சமா? - யார் இந்த கெவின் குண்டா?

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண், ஆப்பிரிக்காவைச் சேர்ந்த தொழில்முறை தற்காப்புக் கலை (MMA) வீரரான கெவின் குண்டா (Kevin Kunta) என்பவரைத் தனது தனிப்பட்ட பாதுகாவலராக நியமித்துள்ளார்.ராம் சர... மேலும் பார்க்க

அஜித்தை நேரில் சந்தித்து, கட்டி அணைத்து ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய், நடிகை த்ரிஷா

சென்னையில் அஜித் குமாருடன் வசித்து வந்த அவருடைய அம்மா மோகினி மணி உடல்நலக் குறைபாடு காரணமாகவும், வயது முதிர்வு காரணமாகவும் காலமானார்.திரைத்துறையினர், அரசியல் கட்சியினர் என பலரும் அஜித் குமாரின் தாயாரின... மேலும் பார்க்க

அனிருத்தின் `DC' இசை சாதனை: உலக அளவில் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்த தமிழ்ப் பாடல்!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராகத் திகழ்கிறார், ‘ராக்ஸ்டார்’ அனிருத். தனது துள்ளலான இசையாலும், புதுமையான இசைக்கோப்புகளாலும் தொடர்ந்து உலக அளவில் கவனத்தை ஈர்த்துவருகிறார். அந்த வரிசையில், சமீபத்... மேலும் பார்க்க

ஊட்டி: 7 லட்சம் பூக்களில் சென்னை சென்ட்ரல், மகாபலிபுரம்! - 10 நாள்கள் நடைபெற இருக்கும் ஃபிளவர் ஷோ

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள நூற்றாண்டு பழைமை வாய்ந்த அரசு தாவரவியல் பூங்காவில் 128- வது மலர் கண்காட்சி இன்று தொடங்கியது.‌ உள்ளூர் அரசு விடுமுறையுடன் தொடங்கிய இந்த மலர் கண்காட்சி தொடர்ந்து 10 நாள்க... மேலும் பார்க்க