இந்தியா, சீனா மீது 500% வரியா? - மீண்டும்... மீண்டும் ட்ரம்ப் அதிரடி! ரஷ்யா வழிக...
எந்த ஊருக்கு போனாலும் 'ஓகே' ; Rail One-ல் Unreserved டிக்கெட் புக் செய்தால் 3% Cash Back | How to
Unreserved கோச்சில் ரயில் டிக்கெட் புக் செய்யுங்கள்... உங்களுக்கு 3 சதவிகிதம் கேஷ்பேக் கிடைக்கும் என்று சொன்னால், நம்ப முடிகிறதா?
இது உண்மை தான்... நம்பித் தான் ஆக வேண்டும்.
Rail One ஆப்பில், டிஜிட்டல் பேமென்டுகள் மூலம் முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட் புக் செய்தால் இந்த ஆஃபர்.
டிஜிட்டல் பேமென்ட்டை ஊக்குவிக்க இந்தச் சலுகை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

எப்போது முதல்... எப்படி?
வருகிற ஜனவரி 14-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை இந்தச் சலுகை அமலில் இருக்கும்.
ரயில் ஒன் ஆப்பில் ஜி பே, Paytm, Phone pe போன்ற எந்த ஆன்லைன் டிஜிட்டல் மோடில் பேமென்ட் செய்து டிக்கெட் புக் செய்தாலும், 3 சதவிகிதம் கேஷ்பேக் கிடைக்கும். இது முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும்.
R-Wallet மூலம் டிக்கெட் புக் செய்பவர்களுக்கு ஏற்கெனவே இந்தச் சலுகை இருந்து வந்தது. அது தொடரும்.
இது உள்ளூர், வெளியூர் என அனைத்து இடங்களுக்கும் செல்லும்.
சரி... அந்த ரயில் டிக்கெட்டை எப்படி புக் செய்வது என்பதைப் பார்ப்போம்.
> ரயில் ஒன் ஆப்பிற்கு செல்லவும்.
> Unreserved ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
> Outside Station, Inside Station என்கிற இரண்டு ஆப்ஷன்கள் இருக்கும். ரயில் நிலையத்திற்கு வெளியே புக் செய்கிறீர்கள் என்றால் Outside Station-ஐ தேர்ந்தெடுக்கவும்.
> ரயில் நிலையத்திற்கு உள்ளே புக் செய்கிறீர்கள் என்றால் Inside Station-ஐ தேர்ந்தெடுக்கவும்.

> அடுத்ததாக, எங்கு இருந்து எங்கு செல்கிறீர்கள் என்பதை நிரப்பவும்.
> Proceed to Book கொடுத்து, எந்த வகையான ரயில் வேண்டும்... எத்தனை பேர் செல்கிறீர்கள் என்பதை பதிவிட்டு, 'Book Now'-ஐ கிளிக் செய்யுங்கள்.
> அடுத்ததாக, ஆன்லைன் பேமென்ட் செய்தால், உங்கள் டிக்கெட் புக் ஆகிவிடும்.
ஆனால், இந்தச் சலுகை வரும் 14-ம் தேதி முதல் தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.



















