`இனி இது கூடாது'- தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதல் நாளில் சூர்யா காந்த் அதிரடி உ...
'கவுன்டவுன் ஸ்டார்ட் ஆகி விட்டது, திமுகவை யாராலும் காப்பாற்ற முடியாது' - நயினார் நாகேந்திரன்
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்கிற பிரசார பயணம் தேனி மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது, " எம்ஜிஆர், ஜெயலலிதா இரண்டு முதலமைச்சர்களை கொடுத்த ஊர் என்பதால் தான் தேனியை தனி மாவட்டமாக அறிவித்து அரசு மருத்துவ கல்லூரியும் கொடுத்திருக்கிறது அதிமுக.
தேனியில் எல்லா இடங்களிலும் மணல் திருட்டு, லஞ்சம், ஊழல் தான் தற்போது நடக்கிறது. 58 ஆம் கால்வாய் இன்னமும் திறக்கவில்லை. இதைப் பற்றி திமுகவுக்கு கவலையில்லை. அவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என்பதே நோக்கம், இந்த ஒன்றைத் தவிர திமுகவிற்கு வேறு எந்த நோக்கமும் இல்லை.
காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்கிறார்கள், கடந்த வாரத்தில் மட்டும் 4 பாலியல் வன்கொடுமைகள், 8 கொலைகள் நடந்திருக்கின்றன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கே இருக்கிறது?. எல்லா கிராமங்களிலும் கஞ்சா போதை தான் இருக்கிறது.
திமுகவின் கூட்டம் கூடினால் அங்குள்ள டாஸ்மாக் கடையில் வருமானம் அதிகமாகும்.
'இந்த முறை திமுகவை விட 10 சதவீத ஓட்டுக்களை தேசிய ஜனநாயக கூட்டணி பெறும் என கருத்து கணிப்புகள் சொல்கின்றன. கவுன்டவுன் ஸ்டார்ட் ஆகி விட்டது இனி யாராலும் திமுக ஆட்சியை காப்பற்ற முடியாது'.

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை தமிழகத்திற்கு கொடுத்துள்ளது.
தேனி மாவட்டத்தில் மட்டும் 'ஜல்ஜீவன்' திட்டத்தின் கீழ் ஒன்றைரை லட்சம் பேருக்கு குடிநீர் இணைப்பு ஏற்படுத்தி கொடுக்கபட்டுள்ளது.
தேனி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி ரயில் நிலையங்கள் புதுப்பிப்பக்கும் பணிகள் நடந்து வருகிறது" என்றார்.














