செய்திகள் :

'காங். சந்திப்பை விரும்பாத ஸ்டாலின்; சோனியா மீது பாரத்தை போட்ட ராகுல்!' - பின்னணி என்ன?

post image

பாஜக அரசு கொண்டு வரும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக திமுக அறிவித்திருந்தது.

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்திக்க சோனியா, ராகுல் உட்பட காங்கிரஸின் முக்கிய தலைகள் அத்தனை பேரும் சென்னை வந்துகொண்டிருக்கின்றனர்.

ஆனால், அறிவாலயம் தரப்பில் இந்த சந்திப்பை விரும்பாததாகவும் அதை காங்கிரஸிடமே சொல்லிவிட்டதாகவும் கூறுகின்றனர்.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த கையோடு அமித்ஷாவையும் நேரில் சந்தித்திருந்தது கனிமொழி தலைமையிலான எம்.பிக்கள் குழு. திமுகவின் ஆதரவால் தொகுதி மறுவரையறை மசோதா எளிதில் நிறைவேறும் என்பதால்,

ஸ்டாலின் - திமுக
ஸ்டாலின் - திமுக

ஸ்டாலினை காங்கிரஸின் மூத்தத் தலைவர்கள் நேரில் சந்தித்து எதிர்த்து வாக்களிக்குமாறு கேட்கப் போகின்றனர். ஆனால், ஸ்டாலின் தரப்பு இந்த சந்திப்பை விரும்பாததாக அறிவாலயம் வட்டாரத்தில் கூறுகின்றனர்.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய அறிவாலயத்தினர், 'தேர்தல் தோல்வியடைந்த மறுநாளே கூட்டணியை முறித்து விட்டு ஓடியது காங்கிரஸ்தான். அதில் திமுக தொண்டர்கள் நிர்வாகிகள் அத்தனை பேரும் அப்செட்டில் இருக்கிறார்கள்.

தலைவரும் காங்கிரஸின் துரோகத்தால் மனம் உடைந்துவிட்டார். அதனால்தான் காங்கிரஸூக்கு அரசியல்ரீதியாக பாடம் புகட்டும் முடிவை எடுத்தார். தொகுதி மறுவரையறையை காங்கிரஸ் மிக முக்கியமாக பார்க்கிறது. தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் வட மாநிலங்களில் காங்கிரஸால் பாஜகவை வீழ்த்தவே முடியாது என ராகுல் உட்பட ஒட்டுமொத்த காங் தலைவர்களும் நினைக்கிறார்கள்.

அதனால்தான் மசோதாவை முறியடிக்க தீவிர பிரயத்தனத்தில் இருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும்போது திமுக ஏன் மசோதாவை எதிர்க்க வேண்டும்?

தொகுதி மறுவரையறை | Delimitation
தொகுதி மறுவரையறை | Delimitation

மேலும், இந்த மசோதாவை ஆதரிப்பதன் மூலம் மத்திய விசாரணை அமைப்புகள் மூலமான சில நெருக்கடிகளையும் திமுக தவிர்க்க முடியும். ஆளும் தவெக அரசுக்கும் நெருக்கடி கொடுக்க முடியும். அதையெல்லாம் மனதில் வைத்துதான் ஆதரவு முடிவை எடுத்தோம். உடனே அமித்ஷாவையும் சந்தித்தோம்.

கட்சியின் சீனியர்கள் மூலம் எங்களின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தி பேசவும் ஆரம்பித்துவிட்டோம். இப்போது போய் காங் தலைமை தலைவரை சந்திக்க நினைப்பது நேர விரயம்தான். 'நாங்கள் முடிவெடுத்துவிட்டோம். சிரமப்பட்டு நீங்கள் ஏன் நேரில் வந்து சந்திக்க வேண்டும்.பின்னர் பார்த்துக் கொள்ளலாம்' என கனிமொழி மூலம் காங் தலைமைக்கும் தகவல் சொல்லிவிட்டோம்.

அதை கேட்டப் பிறகும் அவர்கள் நேரில் வருகிறோம் என்கின்றனர். ஒரு மரியாதைக்காக அவர்களை தலைவர் சந்திப்பர். மற்றபடி காங்கிரஸ் நினைப்பது நடப்பது சந்தேகம்தான்' என்கின்றனர்.

திமுக தலைமை சந்திப்பை விரும்பாவிட்டாலும் சோனியாவே நேரில் பேசினால் ஸ்டாலின் மனது மாறுவார் என ராகுலும் காங் சீனியர்களும் நம்பிக்கைக் கொண்டிருக்கிறார்களாம்.

2027 மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை கோரும் ராகுல் காந்தி; தென்னிந்தியாவுக்கு எதிரானதா?

நாளை (நவம்பர் 30) கூடும் நாடாளுமன்றச் சிறப்பு அமர்வில் தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொண்டுவர உள்ளது மத்திய பாஜக அரசு.இந்த மசோதாவிற்கு திமுக ஆதரவளித்துள்ளது.ராகுல் காந்தியின் 2027 பதிவுஇந்த நிலையில் நேற்... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: பாரம்பர்யபடி உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றலாம்; மக்களுக்கு அனுமதி

உச்ச நீதிமன்றத் தீர்ப்பையொட்டி நேற்று (நவம்பர் 28) திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள கல்தூணில் தீபம் ஏற்றப்பட்டது.இதன் பிறகு, இனி பாரம்பர்ய வழக்கப்படி உச்சிப் பிள்ளையார் கோயிலில்தான் தீபம் ஏற்றப்பட வேண்டு... மேலும் பார்க்க

"வரலாறு எங்களை எட்டப்பன்களாக அல்ல, கட்டபொம்மன்களாகவே மதிப்பிடும்" - ராகுலுக்கு ஸ்டாலின் பதில்

தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக அளித்துள்ள ஆதரவைத் திரும்பப் பெறுமாறு பேச ஸ்டாலினைச் சந்தித்துப் பேச சென்னை வருகிறார்கள் இந்தியா கூட்டணித் தலைவர்கள்.இதில் காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர், காங்கிரஸ்... மேலும் பார்க்க

Delimitation: 'ராகுல், சோனியா முதல் மம்தா வரை' - ஸ்டாலினைச் சந்திக்க சென்னை வரும் தலைவர்கள் பட்டியல்

தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக கொடுத்துள்ள ஆதரவைத் திரும்பப் பெறக் கோரிக்கை வைக்க சென்னை வருகிறார்கள் இந்தியா கூட்டணித் தலைவர்கள்.இரண்டு தனி விமானங்களில் வரும் தலைவர்கள் யார் யார் என்கிற பட்டியல் ... மேலும் பார்க்க

செஞ்சி சிறுமி மாயம்: "கட்டி வைத்து அடித்தனர்" – சிபிசிஐடி போலீசார் மீது 3 இளைஞர்கள் புகார்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சிறுமி காணாமல் போன வழக்கு விசாரணை என்ற பெயரில் சிபிசிஐடி போலீசார் அழைத்து சென்று கை, கால்களை கட்டி வைத்து அடித்து சித்ரவதை செய்வதாக இளைஞர்கள் குற்றச்சாட்டு. விழுப்புர... மேலும் பார்க்க

Delimitation: "என் பெயரைப் பயன்படுத்த வேண்டாம்" - திமுக-வின் நிலைப்பாடு குறித்து திருச்சி சிவா

தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது பல்வேறு தரப்புகளில் எதிர்ப்புகளைக் கிளப்பியுள்ளது.திமுகவின் இந்தத் திடீர் நிலைப்பாட்டிற்குப் பின்னால், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவ... மேலும் பார்க்க