செய்திகள் :

திருப்பரங்குன்றம்: பாரம்பர்யபடி உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றலாம்; மக்களுக்கு அனுமதி

post image

உச்ச நீதிமன்றத் தீர்ப்பையொட்டி நேற்று (நவம்பர் 28) திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள கல்தூணில் தீபம் ஏற்றப்பட்டது.

இதன் பிறகு, இனி பாரம்பர்ய வழக்கப்படி உச்சிப் பிள்ளையார் கோயிலில்தான் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று பொதுமக்களிடம் தெரிவித்துள்ளது திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம்.

இது குறித்து திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகத்தின் அறிக்கை...

"மாண்புமிகு இந்திய உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் நிர்வாகப் பொறுப்பாளர்களாக (Receivers) நியமிக்கப்பட்டுள்ள மாண்புமிகு ஓய்வுபெற்ற நீதிபதிகள் திரு. எஸ். வைத்தியநாதன் (மேனாள் தலைமை நீதிபதி, மேகாலயா உயர்நீதிமன்றம்) மற்றும் திரு. வி. பார்த்திபன் (மேனாள் நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்) ஆகியோரது நேரடி மேற்பார்வையில்,

அறிக்கை
அறிக்கை

(28.11.2026) அன்று மாலை 5.00 மணியளவில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தூணில் தீபம் ஏற்றப்பட்டது.

மேலும், பக்தர்களின் வழிபாடு மற்றும் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு, நிர்வாகப் பொறுப்பாளர்களின் உத்தரவின்படி, உச்சிப் பிள்ளையார் கோவில் அருகில் மட்டும் 29.11.2026 முதல் 15.12.2026 வரை காலை 10.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை பொதுமக்கள் தீபமேற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திருக்கோயில் நிர்வாகப் பொறுப்பாளர்கள் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினர் வழங்கும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, அமைதியான முறையில் தீபமேற்றி சட்டம்-ஒழுங்கைப் பேணுவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்".

"வரலாறு எங்களை எட்டப்பன்களாக அல்ல, கட்டபொம்மன்களாகவே மதிப்பிடும்" - ராகுலுக்கு ஸ்டாலின் பதில்

தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக அளித்துள்ள ஆதரவைத் திரும்பப் பெறுமாறு பேச ஸ்டாலினைச் சந்தித்துப் பேச சென்னை வருகிறார்கள் இந்தியா கூட்டணித் தலைவர்கள்.இதில் காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர், காங்கிரஸ்... மேலும் பார்க்க

Delimitation: 'ராகுல், சோனியா முதல் மம்தா வரை' - ஸ்டாலினைச் சந்திக்க சென்னை வரும் தலைவர்கள் பட்டியல்

தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக கொடுத்துள்ள ஆதரவைத் திரும்பப் பெறக் கோரிக்கை வைக்க சென்னை வருகிறார்கள் இந்தியா கூட்டணித் தலைவர்கள்.இரண்டு தனி விமானங்களில் வரும் தலைவர்கள் யார் யார் என்கிற பட்டியல் ... மேலும் பார்க்க

செஞ்சி சிறுமி மாயம்: "கட்டி வைத்து அடித்தனர்" – சிபிசிஐடி போலீசார் மீது 3 இளைஞர்கள் புகார்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சிறுமி காணாமல் போன வழக்கு விசாரணை என்ற பெயரில் சிபிசிஐடி போலீசார் அழைத்து சென்று கை, கால்களை கட்டி வைத்து அடித்து சித்ரவதை செய்வதாக இளைஞர்கள் குற்றச்சாட்டு. விழுப்புர... மேலும் பார்க்க

Delimitation: "என் பெயரைப் பயன்படுத்த வேண்டாம்" - திமுக-வின் நிலைப்பாடு குறித்து திருச்சி சிவா

தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது பல்வேறு தரப்புகளில் எதிர்ப்புகளைக் கிளப்பியுள்ளது.திமுகவின் இந்தத் திடீர் நிலைப்பாட்டிற்குப் பின்னால், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவ... மேலும் பார்க்க

Delimitation: ஸ்டாலினைச் சந்திக்க வரும் இந்தியா கூட்டணித் தலைவர்கள்; என்ன சொல்கிறார் ராகுல் காந்தி?

தொகுதி மறுவரையறை மசோதாவில் திமுகவின் நிலைப்பாடு குறித்து திமுக தலைவர் ஸ்டாலினிடம் பேச ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் சென்னை வருகிறார்கள்.இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பத... மேலும் பார்க்க

”காவிரி பிரச்னையை உன்னிடம் முறையிடுகிறேன்” - பெரியகோயில் பெருவுடையார் சன்னதியில் வைகோ தரிசனம்

தஞ்சாவூரில் மதிமுக சார்பில், கர்நாடகா அரசு மேகதாதுவில், அணை கட்டுவதையும், அதற்கு உறுதுணையாகச் செயல்படும் மத்திய அரசையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ உள்ளி... மேலும் பார்க்க