செய்திகள் :

கொளத்தூர்: `முதல்வர் ஸ்டாலினை சாய்த்த வி.எஸ்.பாபு' - அன்று வெல்ல வைத்தவரே இன்று வீழ்த்திய கதை!

post image

தமிழக அரசியல் வரலாற்றையே உலுக்கும் வகையில், 2026 சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் கொளத்தூர் தொகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் சுமார் 5,000 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவைச் சந்தித்து வருகிறார். ஒவ்வொரு சுற்றிலும் த.வெ.க வேட்பாளர் சராசரியாக 1,000 வாக்குகள் முன்னிலை பெறுவது தி.மு.க-வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக - விஎஸ் பாபு
அதிமுக - விஎஸ் பாபு

யார் இந்த வி.எஸ்.பாபு?

தற்போது ஸ்டாலினுக்கு சவால் அளிக்கும் வி.எஸ்.பாபு, ஒருகாலத்தில் வட சென்னை தி.மு.க-வின் அசைக்க முடியாத தளபதியாக விளங்கியவர். 2006-ல் புரசைவாக்கம் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாக வென்றவர். 2011-ல் கொளத்தூர் தொகுதி உருவானபோது, அங்கு ஸ்டாலின் முதன்முதலில் போட்டியிட்டு வெற்றி பெற முக்கியப் பங்காற்றியவர் இவர்தான். இருப்பினும், அந்தத் தேர்தலில் ஸ்டாலின் வெறும் 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வென்றதால், பாபு மீது அதிருப்தி ஏற்பட்டு ஓரங்கட்டப்பட்டார்.

தவெக வி.எஸ்.பாபு
தவெக வி.எஸ்.பாபு

இதன்பின் சேகர்பாபுவின் வருகையால் தி.மு.க-வில் இடமிழந்த பாபு, அ.தி.மு.க-வில் இணைந்து பணியாற்றி வந்தார். அங்கு உரிய அங்கீகாரம் கிடைக்காத சூழலில், நடிகர் விஜய் முன்னிலையில் தவெக-வில் இணைந்தார். இன்று தனது பழைய 'தலைவருக்கே' எதிராகக் களம் கண்டு, சொந்தக் கோட்டையிலேயே முதலமைச்சரை பின்னடையச் செய்து 'ஜெயண்ட் கில்லர்' அவதாரத்தை எடுத்துள்ளார் வி.எஸ்.பாபு. இந்தத் திருப்பம் தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.

'கடந்த காலங்களை போலவே, பாஜக ஆளுநர்களை வைத்து இடையூறு!' - செல்வப்பெருந்தகை

தவெக ஆட்சி அமைப்பதில் இழுப்பறி நீடித்து வரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். "கடந்த காலங்களை போலவே, தமிழ்நாட்டில் மக்க... மேலும் பார்க்க

``ஆளுநர் நல்லவர்தான். ஆனால் பாஜக அரசியல் செய்கிறது!" - மாணிக்கம் தாக்கூர்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றிருக்கிறது.118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுக கூட்டணியி... மேலும் பார்க்க

`விஜய் முதல்வராவதை தடுத்தால்..!' - ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவூட்டும் காங்கிரஸ் நிர்வாகி

காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் மகேந்திரன். இவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதி மகேந்திரனுக்கு ... மேலும் பார்க்க

`தி.மு.க-வுக்கு பாயத் தயாராகும் சிறுத்தைகள் டு சாரி கேட்ட செந்தில் பாலாஜி!' | கழுகார் அப்டேட்ஸ்

புலம்பும் கு.ப.கிருஷ்ணன்!"தப்புக்கணக்கு போட்டுட்டோம்"த.வெ.க-வில், முகம் தெரியாத பலரும் வெற்றிபெற்ற நிலையில், லால்குடி தொகுதி வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனோ தோல்வியைத் தழுவியிருக்கிறார். அ.தி.மு.க முன்னாள் அ... மேலும் பார்க்க

விஜய்க்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமல் பந்தாடும் ஆளுநர்! - வலுக்கும் கண்டனங்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன... மேலும் பார்க்க

`அந்த திட்டம் வேண்டாம்!' - அதிமுகவுக்கு `நோ' சொல்லிய திமுக?

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்தாலும் இன்னும் பரபரப்புக்குக் குறைவில்லாமல் நகர்கிறது அரசியல் களம். குறிப்பாக நேற்று இரவு வெளியான சில தகவல்கள் தமிழக அரசியல் பார்வையாளர்கள்கூட எதிர்பாராதவை. அதாவது, ... மேலும் பார்க்க