செய்திகள் :

கோவை வடக்கில் பாஜக, திமுக ஸ்டார் வேட்பாளார்களை சம்பவம் செய்த தவெக! - யார் இந்த சம்பத் குமார்?

post image

கோவை வடக்கு தொகுதியில் 2 லட்சத்து 96 ஆயிரத்து 939 மொத்த வாக்காளர்களில், 2 லட்சத்து 24 ஆயிரத்து 222 பேர் வாக்களித்தனர். இதில் த.வெ.க. வேட்பாளர் சம்பத் குமார் 92 ஆயிரத்து 500 வாக்குகள் பெற்று 21 ஆயிரத்து 992 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

70 ஆயிரத்து 506 வாக்குகள் பெற்ற தி.மு.க. வேட்பாளர் துரை செந்தமிழ் செல்வன் இரண்டாம் இடத்தையும், 49 ஆயிரத்து 722 வாக்குகள் பெற்ற பா.ஜ.க. வேட்பாளர் வானதி சீனிவாசன் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

கோவை வடக்கு தொகுதியில் இதற்கு முன்பாக நடைபெற்ற 3 தேர்தல்களிலும், அ.தி.மு.க-வே வெற்றி பெற்றிருந்த நிலையில், முதல் முறையாக த.வெ.க. வெற்றி பெற்றுள்ளது.

விஜய்

யார் இந்த சம்பத் குமார்?

கோவை கணபதி பகுதியை சேர்ந்த சம்பத் குமார் (47), எம்.பி.ஏ. பட்டதாரி. இவர் அப்பகுதியில் நெய் வியாபாரம் செய்து வருகிறார். விஜய் ரசிகர் மன்றம், விஜய் மக்கள் இயக்கம் ஆகியவற்றில் பொறுப்பில் இருந்த இவர், த.வெ.க-வில் கோவை மாநகர மாவட்டச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

தமிழ்நாட்டில் முதல் முறையாக நடந்த த.வெ.க-வின் மேற்கு மண்டல பூத் முகவர் கூட்டம் கோவையில் வெற்றிகரமாக நடக்க காரணமாக இருந்தவர்களில் இவரும் ஒருவர். தொடர்ந்து கட்சி பணிகளில் ஈடுபட்டு வந்த இவர், முதல் முறையாக தேர்தல் களம் கண்டார். கோவை பா.ஜ.க-வின் முகமாக கருதப்படும் வானதி சீனிவாசன், தி.மு.க. மாநகர மாவட்டச் செயலாளர் துரை செந்தமிழ் செல்வன் ஆகிய பலம் வாய்ந்த வேட்பாளர்களை வீழ்த்தி, சம்பத் குமார் சட்டமன்றத்திற்கு தேர்வாகியுள்ளார்.

அவிநாசி: இ-சேவை மையம் நடத்தும் கணவர்; எல்.முருகனை வீழ்த்தி வாகை சூடிய இல்லத்தரசி! யார் இந்த கமலி?

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனி தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட இளம் வேட்பாளர் மருத்துவர் கோகிலா மணி, அ.தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளரான மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ... மேலும் பார்க்க

ஈரோட்டில் வாஷ் அவுட்டான திமுக கூட்டணி; அமைச்சர் உட்பட 8 பேரை வீழ்த்திய த.வெ.க!

ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, கோபிச்செட்டிப்பாளையம், மொடக்குறிச்சி, பவானி, பவானிசாகர் தனி, அந்தியூர், பெருந்துறை என மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஈரோடு மேற்கு, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்ப... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம்: சோபிக்காத த.மா.கா; சம்பவம் செய்த சக்கரபாணி - 7வது முறை வெற்றி சாத்தியமானது எப்படி?

ஒட்டன்சத்திரம் தொகுதியில் தொடர்ந்து ஆறு முறை வெற்றி பெற்று அமைச்சராக இருந்தார், சக்கரபாணி. தொகுதி முழுவதும் மக்களுக்கான அடிப்படை வசதிகள், சாலை வசதிகள் என எல்லாவற்றையும் செய்து தொகுதியைத் தன் கன்ட்ரோலி... மேலும் பார்க்க

ஓ.பி.எஸ்ஸிற்கு ’கிலி’யை ஏற்படுத்திய த.வெ.க; திக் திக் வாக்கு எண்ணிக்கை; போராடி கரை சேர்ந்த தி.மு.க!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தி.மு.க -வில் இணைந்து போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார் எனும்போது வெல்வாரா? தோற்பாரா? என்ற எதிர்பார்ப்புகள் எகிறியது. அ.தி.மு.க-வால் இவ்வளவு காலமும் வெற... மேலும் பார்க்க

TVK: சீட் தராத திமுக; பழி தீர்த்த கட்சித்தாவல்; சூலூரை வென்ற தவெக சுகுமாரின் பின்னணி என்ன?

சூலூர் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 3 லட்சத்து 7 ஆயிரத்து 616 வாக்காளர்கள் உள்ள நிலையில்,2 லட்சத்து 71 ஆயிரத்து 567 பேர் வாக்களித்தனர். இதில் 90 ஆயிரத்து 531 வாக்குகள் பெற்ற த.வெ.க. வேட்பாளர் சுகுமார... மேலும் பார்க்க

TVK: 'சென்னைவாசி, சிபி சத்யராஜின் ஆதரவு' - சிங்காநல்லூரை வென்ற ஸ்ரீ கிரி பிரசாத்தின் பின்னணி என்ன?

சிங்காநல்லூர் தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 69 ஆயிரத்து 941 வாக்காளர்களில், தேர்தலில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 746 பேர் வாக்களித்தனர். இதில் த.வெ.க. வேட்பாளர் ஸ்ரீ கிரி பிரசாத் 84 ஆயிரத்து 163 வாக்... மேலும் பார்க்க