Doctor Vikatan: கர்ப்பப்பை நீக்கம், சினைப்பைகளையும் சேர்த்து நீக்குவது சரியா?
சீன விமான நிலையத்தில் அருணாச்சலப் பெண் தடுத்து நிறுத்தம்: சீனாவின் பதிலுக்கு இந்தியா கண்டனம்
சீனாவின் நடவடிக்கை
"நவம்பர் 21, 2025-ம் தேதியில் நான் சீனாவின் ஷாங்காய் விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 18 மணிநேரம் தடுத்து நிறுத்தப்பட்டேன்.
நான் அருணாச்சல பிரதேசத்தில் பிறந்திருப்பதால், என்னுடைய இந்திய பாஸ்போர்ட் செல்லாது என்று கூறினார்கள். இதற்கு காரணமாக, அவர்கள் அருணாச்சல பிரதேசத்தை சீனாவின் பிராந்தியம் என்று கூறுகிறார்கள்"
- இது அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த பிரேமா வாங்ஜோம் தோங்டாக்கின் சமீபத்திய பதிவு.

இந்தப் பதிவு இந்தியா - சீனா உறவில் சிக்கலை கொண்டு வந்துள்ளது.
இந்தியாவின் மாநிலமாக இருந்து வரும் அருணாச்சல பிரதேசத்தை, 2006-ம் ஆண்டு முதல் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதை இந்தியா சற்றும் ஏற்றுக்கொள்ளவே இல்லை.
இந்த நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது.
சீனாவின் பதில்
'பிரேமா வாங்ஜோம் தோங்டாக் சீனாவின் சட்டப்படி நடத்தப்பட்டார்' - இந்த சம்பவம் குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் கூறும் காரணம் இது.
இந்தியாவின் பதிலடி
பிரேமா தடுக்கப்பட்டதற்கும், சீனாவின் பதிலுக்கும் கடுமையான பதிலடியை தந்திருக்கிறார் இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்.
அவர், "அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி ஆகும். இது வெளிப்படையான உண்மை.
இதை சீனா எவ்வளவு மறுத்தாலும், அது மறுக்க முடியாத யதார்த்தத்தை மாற்றாது.

இந்தத் தடுப்பு விவகாரத்தை பற்றி சீனாவிடம் கேட்கப்பட்டுள்ளது. சர்வதேச விமான பயண மரபுகளை மீறும் இந்த செயலுக்கு சீனா இன்னும் பதிலளிக்கவில்லை.
சீனாவின் இந்த செயல், அனைத்து தேசத்தினரும் அவர்களது நாட்டில் 24 மணி நேரம் எந்த விசாவும் இல்லாமல் பயணம் செய்யலாம் என்கிற அவர்களது சொந்த விதிமுறையை மீறியது ஆகும்" என்று பதிவிட்டுள்ளார்.
Our response to media queries on statements made by the Chinese Foreign Ministry⬇️
— Randhir Jaiswal (@MEAIndia) November 25, 2025
https://t.co/3JUnXjIBLcpic.twitter.com/DjEdy7TmTK
















