செய்திகள் :

சேலம் தி ஃபுட் ஸ்ட்ரீட்: 35 கடைகளுடன் கோடிக்கணக்கில் அமைந்த புதிய டைம் பாஸ் ஸ்பாட் - எப்படி இருக்கு?

post image

சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி ஏரி பூங்கா அருகில் பிரமாண்டமான அழகுடன், அனைத்து வசதிகளும் அடங்கிய சுமார் ₹300 கோடி செலவில் கட்டப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு விழாவை எதிர்நோக்கி காத்திருக்கிறது சேலம் ஃபுட் ஸ்ட்ரீட்.

சுமார் 35 அழகிய சிறுசிறு கடைகளுடன், பேவர் ப்ளாக் கற்கள் பொதிக்கப்பட்டுள்ள வளாகம், ஆண்கள்–பெண்கள் என தனித்தனியான கழிவறை வசதிகளுடனும், இரவு நேரங்களை மக்கள் இயல்பு நேரங்களாக மாற்றும் வண்ணம் அமைக்கப்பட்ட அழகிய மின் விளக்குகளுடனும், பள்ளப்பட்டி பகுதிக்கு இன்னொரு அடையாளமாக மாறவிருக்கிறது `சேலம் தி ஃபுட் ஸ்ட்ரீட்'

சேலம் தி ஃபுட் ஸ்ட்ரீட்
சேலம் தி ஃபுட் ஸ்ட்ரீட்

என்ன சிறப்பு?

கேள்வியோடு உள்ளே சென்றோம் பல கேளிக்கைகள் உள்ளடங்கிய வீதிக்குள். கைகழுவும் இடங்கள் உட்பட தண்ணீர் குழாய்கள், வாகனங்களை நிறுத்துவதற்கான வாகன நிறுத்துமிடம், பாதுகாப்பு கருதி பாதுகாவலர் அறையுடன் கூடிய உள் நுழைவு வளைவு ஆகியவற்றை கொண்ட உணவு வீதிக்குள் மனமகிழ்ச்சியுடன் சென்றோம்.

சற்று சுவர் சுற்றி எழுந்திருந்த நிலையிலும், சுத்தமான பகுதியாகவும், சத்தமான வாகன போக்குவரத்துக்கு நடுவிலும் அமைதிநிலையுடன் இருக்கும் பூங்கா அருகே இது அமைந்துள்ளது.

இதுகுறித்து ஏரி பூங்காவில் இருந்த ஒருவரிடம் கேட்டபோது, "இந்த பூங்கா திறப்பு விழாவுக்கு பின்னர் இந்த ஃபுட் ஸ்ட்ரீட் மிகவும் பிஸியாகவும், முக்கியமான டைம் பாஸ் பகுதியாகவும் மாறும்" என்றார்.

மற்றொருவர் கூறுகையில், "இதன் மூலம் அரசுக்கு வருவாய் வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் 35 கடைகளிலிருந்து கிடைக்கும் வாடகை வருமானம் உயர வாய்ப்புள்ளது. ஆனால் அருகிலுள்ள உணவுக் கடைகளுக்கு சற்று வருவாய் இழப்பும் ஏற்படலாம்" என்றார்.

சேலம் தி ஃபுட் ஸ்ட்ரீட்
சேலம் தி ஃபுட் ஸ்ட்ரீட்

இதுகுறித்து சூரமங்கலம் பகுதி இளநிலை பொறியாளரை தொடர்பு கொண்டு, கடைகள் ஒதுக்கீடு, வாடகை மதிப்பீடு மற்றும் ஏலம் தொடர்பான தகவல்களை கேட்டபோது, அந்த தகவல்களை வழங்க அவர் தயாராக இல்லை.

தகவல் வழங்கினால் அதையும் சேர்த்து வெளியிடத் தயாராக உள்ளோம்.

காத்திருந்து பார்ப்போம், `சேலம் தி ஃபுட் ஸ்ட்ரீட்' எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா என்று!

திடீரென்று ஒரு சைரன் சத்தம்! - அந்நிய மண்ணில் ஒரு அபாய அனுபவம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Maldives: 2007-ம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள் மாலத்தீவில் புகைப்பிடிக்க தடை; மீறினால்?

2007-ம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள், மாலத்தீவில் கண்டிப்பாக புகைப்பொருள்களைப் பயன்படுத்தவே கூடாது என்கிற புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது அந்த நாட்டு அரசு. என்ன அறிவிப்பு? இந்த அறிவிப்பு Tobacco Cont... மேலும் பார்க்க

AI துறைகளில் கடும் போட்டி; சீனாவில் இளம் விஞ்ஞானிகளின் அடுத்தடுத்த மரணங்கள் - அதிர்ச்சி ரிப்போர்ட்

சீனாவில் இளம் விஞ்ஞானிகளின் மரணங்களைச் சார்ந்த புதிய புள்ளிவிவரங்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.CSND என்ற ஆன்லைன் தளத்தில் வெளியிடப்பட்ட தகவலின்படி, இந்த ஆண்டு இதுவரை 60 வயதுக்குட்பட்ட 76 ஆராய... மேலும் பார்க்க

குளிர்சாதனப் பெட்டிகளில் ஒட்டப்படும் காந்தங்களால் மின்சாரக் கட்டணம் அதிகமாகுமா? உண்மை என்ன?

ஃபிரிட்ஜை அலங்கரிக்கப் பயன்படுத்தப்படும் காந்தங்களால் (Fridge Magnets) மின்சாரக் கட்டணம் அதிகரிப்பதாக ஒரு விஷயம் பரவி வருகிறது. இந்த வதந்தியின் உண்மைத்தன்மை என்ன? நிபுணர்கள் கூறுவது என்ன? என்பது குறித... மேலும் பார்க்க

போனில் `ஹலோ' சொல்ல மறுக்கும் ஜென் Z தலைமுறையினர்; காரணம் என்ன? - விளக்கும் கம்யூனிகேஷன் ரிசர்ச்

‘ஜென் Z’ இளைஞர்களின் தொடர்பு பழக்கத்தில் ஒரு புதிய மாற்றம் கவனத்துக்கு வருகிறது. தொலைபேசி அழைப்பு வந்தால் ‘ஹலோ’ என்று வழக்கமாக சொல்லும் சொல்லை சொல்லாமல் உரையாடலைத் தொடங்குவது ஒரு வழக்கமாகி வருகிறது.Ge... மேலும் பார்க்க

தாஜ் உணவகம்: 'நான் சம்மணங்கால் போட்டு அமர்வது உங்களுக்கு பிரச்னையா?' - ஷ்ரதா பதிவு

'யுவர் ஸ்டோரி' என்னும் மீடியா நிறுவனத்தின் நிறுவனர் ஷ்ரதா. இவர் தீபாவளியை முன்னிட்டு தன்னுடைய சகோதரியுடன் டெல்லி தாஜ் ஹோட்டலில் உள்ள ஹவுஸ் ஆஃப் மிங் உணவகத்திற்கு சென்றிருக்கிறார்.அங்கே அவர் சம்மணங்கால... மேலும் பார்க்க