`சொந்த வீடு' எந்த வயதில் வீடு கட்டுவது சரியானது?
வீடு கட்டுவது அவ்வளவு எளிதல்ல. இதற்கு, 'வீட்டைக் கட்டிப்பார்... கல்யாணம் பண்ணிப்பார்' என்கிற சொலவடையே சாட்சி.
அதனால், வீட்டை கட்டுவதற்கு முன், அது குறித்த பிளான் என்பது மிக அவசியம். இந்தப் பிளானில், 'வீடு எங்கே கட்ட வேண்டும்?', 'வீடு எப்படி கட்ட வேண்டும்?', 'வீட்டில் எத்தனை அறைகள் இருக்க வேண்டும்?' என்பது மட்டும் இடம்பெறக்கூடாது.
மிக முக்கியமாக, 'எந்த வயதில் வீடு கட்டுகிறோம்?' என்கிற கேள்வியும் இடம்பெற வேண்டும்.

காரணம் வீடு கட்டும்போது நாம் எதிர்பாராத செலவுகள் அதிக வரும். திட்டமிட்டதை விட, அதிக செலவு ஆகிவிடுவதற்கான அதிக வாய்ப்புகள் உண்டு.
இதனால், 30 - 45 வயதிற்குள் வீடு கட்டும் விஷயத்தை பிளான் செய்துகொள்ள வேண்டும்.
காரணம், அந்த வயதிற்கு மேல், குழந்தைகளின் உயர்கல்வி செலவு, அவர்களின் திருமண செலவு என வரிசை கட்டி செலவுகள் நிற்கும் . அதனால், இந்த வயதிற்கு முன்பே வீட்டு பிளான் செய்வது புத்திசாலித்தனம்.

வீட்டுக்கடன்
அடுத்ததாக, வீட்டுக் கடனும் 30 - 45 வயதில் எளிதாக கிடைக்கும். அதற்கு மேல் வங்கிகளை அணுகினால், கடன் கிடைப்பது சற்று கடினம் தான்.
அடுத்ததாக, வீட்டுக் கடனை 10 - 20 ஆண்டுகளுக்கு எடுப்போம். 45 வயதிற்குள் மேல் இந்தக் கடனை எடுத்தால், ஓய்வுக்காலத்தை எட்டிவிடுவோம். அப்போது இ.எம்.ஐ கட்டுவது சிரமமாகிவிடும்.
அதனால், 30 - 45 வயதிற்குள் பிளான் செய்துவிடுவது நல்லது.








.jpeg)







