49-வது புத்தகக் காட்சி: `எழுத்துக்களைப் படிக்க படிக்க எண்ணங்கள் மலரும்..!' - முத...
சொமேட்டோ நிறுவனர் நெற்றியில் பொருத்தப்பட்ட டிவைஸ்; வைரலான புகைப்படம்; எச்சரிக்கும் மருத்துவர்கள்
உணவு டெலிவரி நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாகத் திகழும் சொமேட்டோவின் நிறுவனர் தீபிந்தர் கோயல் பயன்படுத்தும் டிவைஸ் (device) தான் சமூக வலைத்தளங்களில் தற்போது பேசபொருளாக மாறியிருக்கிறது.
தீபிந்தர் கோயல்
சில மாதங்களுக்கு முன்பு தீபிந்தர் கோயல் 'Gravity Aging Hypothesis' என்ற புதிய கருத்தொன்றை முன்வைத்திருந்தார்.
அதாவது மனித வாழ்நாளில் ஈர்ப்பு விசை (gravity) காரணமாக மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் படிப்படியாகக் குறையலாம். அதுவே முதுமை ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்திய பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தீபிந்தர் கோயல், தனது வலது நெற்றிப் பகுதியில் தங்க நிறத்தில் சிறிய டிவைஸ் ஒன்றைப் பொருத்தியிருந்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேசுபொருளாகி இருக்கின்றன.
டெம்பிள் (Temple) டிவைஸ்
"இந்த டிவைஸின் பெயர் டெம்பிள் (Temple). இது மூளையின் ரத்த ஓட்டத்தைத் துல்லியமாக அளவிட உருவாக்கப்பட்டது.
கடந்த ஒரு ஆண்டாக இதை நான் பயன்படுத்தி வருகிறேன். விரைவில் இந்த டிவைஸை பொதுமக்களுக்கு அறிமுகம் செய்ய இருக்கிறேன்" என்று அந்த நிகழ்ச்சியில் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் தீபிந்தர் கோயல் பயன்படுத்தும் இந்த டிவைஸ்க்கு மருத்துவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எச்சரிக்கும் மருத்துவர்
அந்த வகையில் இது குறித்து பேசியிருக்கும் டெல்லி எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவரும் ரேடியாலஜிஸ்டுமான டாக்டர் சுவரங்கர் தத்தா, "'Temple’ என்று அழைக்கப்படும் இந்த டிவைஸைப் பயன்படுத்தலாம் என்பதற்கு எந்த அறிவியல்பூர்வ ஆதாரமும் இல்லை.
இது பணத்தை வீணடிக்க நினைக்கும் கோடீஸ்வரர்களுக்கான 'fancy toy' மட்டுமே.
அதேபோல முதுமைக்கு ஈர்ப்பு விசையும் ஒரு காரணம் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை" என்று மருத்துவர் விளக்கமளித்துள்ளார்.



















