செய்திகள் :

சோனம் வான்சுக் உண்ணாவிரதப் போராட்டம்: மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற காவல்துறை; டெல்லியில் பரபரப்பு

post image

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் நடந்த குளறுபடிகள் தொடர்பாக மத்திய கவ்லித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதாப் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என காக்ரோச் ஜனதா பார்ட்டி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தைத் தொடங்கியது.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த சோனம் வான்சுக் தொடர் உண்ணாவிரதப் போராட்டதை முன்னெடுத்தார். 20 நாள்களைக் கடந்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், 8 கிலோவுக்கும் மேல் உடல் எடைக்குறைந்து, மிகவும் பலகீனமடைந்திருந்தார்.

சோனம் வான்சுக்
சோனம் வான்சுக்

அவரைச் சந்தித்த தலைவர்கள், ஆர்வலர்கள் அனைவரும் அவரைப் போராட்டத்தைக் கைவிட்டு, சிகிச்சை பெற வலியுறுத்தி வந்தனர். ஆனால் அதையெல்லாம் மறுத்த சோனம் வாங்சுக், ''இந்தப் போராட்டம் மூலம் கிடைக்கும் வெளிச்சம் அடுத்த தலைமுறையின் கல்வியைச் சிறப்பாக்கும் எனக் கருதுகிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையில், டெல்லியின் புதிய போலீஸ் கமிஷனராக அனுராக் குமார் நேற்று பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து அவர் தலைமையிலான காவல்துறை இன்று காலை சோனம் வான்சுக்-கை சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு வலுகட்டாயமாகக் கொண்டுச் சென்றது.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின்போது, சோனம் வான்சுக் ஆதரவாளர்கள் சிலர் அதைத் தடுக்க முயன்றதால் ஜந்தர் மந்தர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இருப்பினும், சோனம் வாங்சுக்கின் உடல்நிலை மோசமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படியும், மருத்துவ நிபுணர்களின் அறிவுறுத்தலின்படியும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டெல்லி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டெல்லி போலீஸ் கமிஷனர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ``உயர் நீதிமன்ற உத்தரவின்படியும், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின்படியும் சோனம் வாங்சுக் அத்தியாவசிய மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையின்போது போராட்டக்காரர்கள் இடையூறு ஏற்படுத்த முயன்றதால் லேசான சலசலப்பு ஏற்பட்டது.

சோனம் வான்சுக்
சோனம் வான்சுக்

எனினும், போலீசார் மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடித்து, அவரைப் பத்திரமாக மீட்டனர். ஜந்தர் மந்தரில் உள்ள போராட்டக்காரர்கள் உடனடியாகவும், அமைதியாகவும் அவ்விடத்தை விட்டு கலைந்து செல்ல வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையில், 'காக்ரோச் ஜனதா கட்சி'யின் நிறுவனர் அபிஜித் திப்கே தனது இன்ஸ்டாகிராம் நேரலையில், ``நான் எனது நண்பரின் வீட்டிற்குச் சென்றபோது டெல்லி போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளேன்'' எனக் கூறி வீட்டின் கேட் பூட்டப்பட்டிருப்பதையும், வெளியே போலீஸ் காவலர் நின்றுகொண்டிருப்பதையும் நேரலையில் காட்டினார். எ

னவே போராட்டம் தொடருமா?, அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பன குறித்து இன்னும் எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

சாதிய பாகுபாட்டால் இயக்கப்படாத அரசுப் பேருந்து – இயக்க வைத்து பயணித்த அமைச்சர் வன்னி அரசு!

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் என்ற கிராமம் உள்ளது. இங்கிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் அண்ணா நகர் என்ற பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதி அமைந்துள்ளது. இதனிடையே அப்பகுதியைச் சேர... மேலும் பார்க்க

வாரிய தலைவர் பதவிக்கு 5 'அன்பு பரிசு'கள்; முதல்வருக்கு நெருக்கத்தில் ஜரூராக நடக்கிறதா வசூல் வேட்டை?

'யாராவது லஞ்சம் கேட்டா உங்க அண்ணன் விஜய்யோட ஆட்சி நடக்குதுன்னு சொல்லுங்க...' என முதல்வர் விஜய் கரூரில் பேசியிருந்தார். ஆனால், கோட்டையில் முதல்வரின் நெருக்கமான வட்டத்திலேயே ஒரு முக்கிய புள்ளியின் பெயரி... மேலும் பார்க்க

"தேர்தலுக்கு 5 வருஷம் காத்திருக்க தேவையில்ல; திமுகவுக்கு ஆசை காட்டும் பாஜக.!"- கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் திருப்பத்தூரில் இன்று (ஜூலை. 18) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "என்னுடைய புரிதல் என்னவென்றால் திமுகவுடன், பாஜக பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டது. 'தொ... மேலும் பார்க்க

`என் போராட்டங்கள் அண்ணன் விஜய்க்கு தெரிந்திருந்தால்..!’ - தவெகவில் நீக்கப்பட்ட பெண் வழக்கறிஞர்

`அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டுதான் நியமிக்கிறார்கள்' என்று, த.வெ.க-வின் விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ஞானசௌந்தரி சென்னை உயர் நீத... மேலும் பார்க்க

’எவ்வளவு அவதூறு பரப்பினாலும் வைகோவை நேசித்துக் கொண்டே இருப்போம்’ - அமைச்சர் வன்னி அரசு விளக்கம்!

கோவை விமான நிலையத்தில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ஆதிதிராவிடர் நலத்துறை பெயர் மாற்றம் வருத்தமளிக்கின்றது என திருமாவளவன் சொல்லியிப்பது குறித்த கேள்வ... மேலும் பார்க்க

`கரூர் கம்பெனி வேலைக்காரர்கள்போல் நடத்தப்பட்டோம்'- திமுகவிலிருந்து கோவை மாநகராட்சி கவுன்சிலர் விலகல்

கோவை மாநகராட்சி 22 வது வார்டு கவுன்சிலர் கோவை பாபு செல்வக்குமார் என்பவர், தி.மு.க-வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “2020 ஆம் ஆண்டிலிருந்து திராவிடன் அறக்கட்டளையைத்... மேலும் பார்க்க