செய்திகள் :

'ஜம்பம் அடித்த பிரவீன் சக்கரவர்த்தி; உஷ்ணமான விஜய்!' - கம்யூ.,க்களை தேடி ஓடிய காங்கிரஸ்

post image

தமிழகத்தில் காலியாக இருக்கும் ராஜ்ய சபா எம்.பி சீட்டை காங்கிரஸூக்கு கொடுத்திருந்தது தவெக. காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி இன்று தலைமைச் செயலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார். ஆனால், இந்த விவகாரத்தில் பிரவீன் சக்கரவர்த்தி நடந்து கொண்ட விதம் முதல்வர் விஜய்யை டென்ஶனாக்கியிருப்பதாக கிசுகிசுக்கின்றனர் கோட்டை வட்டாரத்தினர்.

விஜய்
விஜய்

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய உள்விவகாரம் அறிந்த சிலர், 'காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி ராஜ்ய சபா எம்.பி ஆவார் என்கிற ஒரே காரணத்துக்காகதான் முதல்வர் விஜய் அந்த எம்.பி சீட்டை விட்டுக் கொடுத்தார். தவெக - காங்கிரஸ் கூட்டணி அமைய காரணமாக இருந்தவர் என்பதால் பிரவீன் சக்கரவர்த்தி எம்.பி ஆவதில் முதல்வருக்குமே பெரும் மகிழ்ச்சிதான்.

'தமிழ்நாடு சமூகநீதி முற்போக்கு கூட்டணி'

ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானவுடன் பிரவீன் சக்கரவர்த்தி தானாக முந்திக்கொண்டு 'தமிழ்நாடு சமூகநீதி முற்போக்கு கூட்டணி' என ட்வீட் செய்தது முதல்வரை டென்ஷன் ஆக்கிவிட்டது. கூட்டணி கட்சி தலைவர்களுடன் கலந்து பேசி, அத்தனை கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்பாகவும் ஒரு முக்கிய நிகழ்வில் கூட்டணியின் பெயரை அறிவிக்க வேண்டும். இடைத்தேர்தலை முன்னிட்டு அந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென முதல்வரின் வியூக வகுப்புக்குழு திட்டமிட்டு வைத்திருந்தது. ஆனால், இந்த கூட்டணியில் நான் 'பெரிய ஆள்' என்பதைக் காட்டிக் கொள்ள கூட்டணியின் பெயரை பிரவீன் சக்கரவத்தி முந்திக் கொண்டு அறிவித்துவிட்டார்.

பிரவீன் சக்கரவர்த்தி
பிரவீன் சக்கரவர்த்தி

இதில் முதல்வர் விஜய்யே கடும் அப்செட். பிரவீன் சக்கரவர்த்தியின் ட்வீட் வெளியான அடுத்த ஒன்றிரண்டு மணி நேரங்களிலேயே கூட்டணியின் பெயரை யாரும் தப்பித் தவறிக் கூட பயன்படுத்தக் கூடாது, தலைவரே முறையாக அறிவிப்பார் என தவெக நிர்வாகிகளுக்கு அவசர அலர்ட்டும் தவெக நிர்வாகிகளுக்கு சொல்லப்பட்டது. முதல்வர் தரப்பின் அதிருப்தியும் காங்கிரஸ் தரப்புக்கு சொல்லப்பட்டிருக்கிறது. அதற்குள் கம்யூனிஸ்ட்டுகளும் களத்தில் இறங்கிவிட்டார்கள்.

பெ.சண்முகம் 'அதிக பிரசங்கித்தனம்' என விமர்சிக்க, 'நாங்கள் இந்த கூட்டணியில் இல்லை' என மு.வீரபாண்டியன் ஒரே போடாக போட்டார். கம்யூனிஸ்ட்டுகளின் இந்த எதிர்வினை முதல்வர் தரப்பை இன்னும் உஷ்ணப்படுத்திவிட்டது.

'முதல்வர் அப்செட்டாக இருக்கிறார். கம்யூனிஸ்ட்டுகளை சமரசம் செய்ய வேண்டியது காங்கிரஸின் பொறுப்பு. உடனடியாக எதாவது செய்யுங்கள்' என கதர்சட்டை அமைச்சர்களிடம் தவெகவின் சீனியர் அமைச்சர் ஒருவர் அனலடிக்க பேசியிருக்கிறார்.

இதைத் தொடர்ந்துதான் கம்யூனிஸ்ட்டுகளை அவர்களின் அலுவலகத்துக்கே போய் சாந்தப்படுத்தும் முயற்சியை கையில் எடுத்தது காங்கிரஸ். வேட்புமனு தாக்கல் செய்த கையோடு பிரவீன் சக்கரவர்த்தி கம்யூனிஸ்ட்டுகளின் அலுவலகங்களுக்கு செல்வார் என்கிற தகவல் கிடைத்தவுடன்தான் முதல்வர் கொஞ்சம் கூல் ஆனார்.

பெ.சண்முகம்
பெ.சண்முகம்

அதன்பிறகுதான் வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வுக்கும் வந்தார். வெளியே வந்து பத்திரிகையாளரிடம் பேசிய பிரவீன் சக்கரவர்த்தி 'முதல்வரின் கருணையாலும் பெருந்தன்மையாலும் காங்கிரஸூக்கு எம்.பி சீட் கிடைத்திருக்கிறது' என விஜய்யை ஏகத்துக்கும் புகழ்ந்தார்.!

"பெயர் மாற்றம், தமிழகத்தில் பாஜக-வின் புதிய உத்தி" - அண்ணாமலையை விமர்சித்த பெ.சண்முகம்

அண்ணாமலை, பாஜக-வில் இருந்து விலகி புதிய அரசியல் இயக்கம் தொடங்கப்போவதாகத் தெரிவித்திருக்கிறார். பின்னாளில் அது கட்சியாக உருவெடுக்கும் என்றும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் தெரிவித்திருக்கிறார... மேலும் பார்க்க

"நான் கிரிக்கெட்டைவிட்டு விலக தாதா தாவூத்தான் காரணம்" - லலித் மோடி அடுக்கும் குற்றச்சாட்டுகள் என்ன?

தான் நிரந்தரமாக கிரிக்கெட் உலகை விட்டு விலகியதற்கு, நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது 'டி-கம்பெனி' நெட்வொர்க் கொடுத்த கொலை மிரட்டல்கள்தாம் காரணம் என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருக்க... மேலும் பார்க்க

`மோடி எதிர்ப்பு மட்டுமே போதுமா?' - ஸ்டாலின் முடிவும் இந்தியா கூட்டணியின் எதிர்காலமும்? - ஓர் அலசல்!

2023 ஜூன் மாதத்தில் 28 கட்சிகளுடன் தொடங்கப்பட்ட 'இந்தியா' கூட்டணி, கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வின் தனிப்பெரும்பான்மையைத் தடுத்து நிறுத்தியதில் முக்கியப் பங்கு வகித்தது. அந்த தேர்தலில், உத்த... மேலும் பார்க்க

Annamalai: 'பாஜக துணை தலைவர் டு தொண்டர்' - அண்ணாமலையின் கோவை REWIND | Photo Album

ஆகஸ்ட 2020 - தமிழக பா.ஜ.க மாநில துணைத்தலைவராக பொறுப்பேற்று கோவைக்கு முதன்முதலில் வந்தபோது ஆகஸ்ட 2020 - தமிழக பா.ஜ.க மாநில துணைத்தலைவராக கோவையில் அண்ணாமலை முதல் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு ஆகஸ்ட 2... மேலும் பார்க்க

கோவை பாஜக முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா – அண்ணாமலை அமைப்பில் ஐக்கியம்

பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ராஜினாமா ஏற்கப்பட்ட நிலையில், முன்னாள் கோவை மாநகர மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, தெற்கு மாவட்டத் தலைவர் வசந்த ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் அக்கட்சியில்... மேலும் பார்க்க

முன்பு வேண்டாம் என்று மறுத்த `இந்தியா' ; மீண்டும் கதவைத் தட்டும் `ரஷ்யா!' Su-57 டீல் ஓகே ஆகுமா?

ஐந்தாம் தலைமுறை போர் விமானமான சுகோய் Su-57-ஐ இந்தியாவோடு இணைந்து தயாரிக்கத் தயார் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மீண்டும் ஒருமுறை வெளிப்படையாகவே அழைப்பு விடுத்திருக்கிறார். ஒரு காலத்தில் இதே திட்டத்... மேலும் பார்க்க