இந்திய ATM-களில் பணப் பற்றாக்குறை; பணப் புழக்கத்தில் சிக்கலா? மக்களுக்கு என்னென்...
"நான் கிரிக்கெட்டைவிட்டு விலக தாதா தாவூத்தான் காரணம்" - லலித் மோடி அடுக்கும் குற்றச்சாட்டுகள் என்ன?
தான் நிரந்தரமாக கிரிக்கெட் உலகை விட்டு விலகியதற்கு, நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது 'டி-கம்பெனி' நெட்வொர்க் கொடுத்த கொலை மிரட்டல்கள்தாம் காரணம் என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார் லலித் மோடி.
2008- ஆம் ஆண்டு ஐபிஎல் அறிமுகப்படுத்தபட்டது. மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த இந்தத் தொடரை உருவாக்கியதில் லலித் மோடி முக்கிய பங்காற்றி இருக்கிறார்.

2010 ஆண்டு நிதி முறைகேடுகள், டெண்டர் முறைகேடுகள் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் காரணமாக ஐபிஎல் ஆணையர் பதவியில் இருந்து பிசிசிஐ இவரை இடைநீக்கம் செய்தது.
பின்னர் இவரது ஒழுங்கு நடவடிக்கையால் 2013ஆம் ஆண்டு பிசிசிஐ அவருக்கு ஆயுள் தடை விதித்தது. அதன் பிறகு லலித் மோடி லண்டன் சென்றுவிட்டார்.
இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி அளித்திருக்கும் அவர், "நான் நிரந்தரமாக கிரிக்கெட் உலகை விட்டு விலகியதற்கு, நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது 'டி-கம்பெனி' நெட்வொர்க் கொடுத்த கொலை மிரட்டல்கள்தாம் காரணம்.
ஐபிஎல் தொடங்கப்பட்ட ஆரம்ப காலத்திலேயே, நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமின் 'டி-கம்பெனி' (D-Company) தரப்பு ஒரு ஐபிஎல் அணியில் பங்குகளைப் பெற்று, அதன் மீது தங்களது செல்வாக்கைச் செலுத்த முயன்றது.
ஆனால், அவர்களின் இந்த முயற்சிக்கு நான் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்ததுடன், அதற்கு அனுமதியளிக்கவும் மறுத்துவிட்டேன். இந்த மறுப்புக்குப் பிறகுதான், எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் பல்வேறு வழிகளில் கொலை மிரட்டல்களும் அச்சுறுத்தல்களும் வரத் தொடங்கின.

ஐபிஎல்லைச் சுற்றி இயங்கி வந்த சட்டவிரோத சூதாட்ட மாஃபியாக்களுக்கு எதிராக நான் எடுத்த தீவிரமான நடவடிக்கைகளும், இந்த விவகாரங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக எனக்கு ஆசையாகக் காட்டப்பட்ட பல நூறு மில்லியன் டாலர் லஞ்சப் பணத்தை நான் தூக்கியெறிந்ததும்தான் இந்த மிரட்டல்களுக்கு முக்கியக் காரணம்.
குறிப்பாக, தாவூத் இப்ராஹிமின் ஆட்கள் என்னை மும்பை, கேப்டவுன் மற்றும் லண்டனின் ஸ்லோன் ஸ்ட்ரீட் ஆகிய மூன்று வெவ்வேறு இடங்களில் வைத்து சமயம் பார்த்து கொலை செய்ய முயன்றனர்" என்று தெரிவித்திருக்கிறார்.














