செய்திகள் :

"பெயர் மாற்றம், தமிழகத்தில் பாஜக-வின் புதிய உத்தி" - அண்ணாமலையை விமர்சித்த பெ.சண்முகம்

post image

அண்ணாமலை, பாஜக-வில் இருந்து விலகி புதிய அரசியல் இயக்கம் தொடங்கப்போவதாகத் தெரிவித்திருக்கிறார்.

பின்னாளில் அது கட்சியாக உருவெடுக்கும் என்றும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

அண்ணாமலை
அண்ணாமலை

இந்நிலையில் புதிய இயக்கம் தொடங்க இருக்கும் அண்ணாமலையை சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதிவில், "பெயர் மாற்றம், தமிழகத்தில் பா.ஜ.க-வின் புதிய உத்தி! ஆர்.எஸ்.எஸ் ஏற்கனவே 2500 அமைப்புகளை வழி நடத்துகிறது.

அண்ணாமலை தொடங்கும் அமைப்பு 2501 அவ்வளவுதான். பாஜக என்ற கட்சி தமிழக மக்களிடம் எடுபடவில்லை.

எனவே, பெயரை மாற்றி வியாபாரத்தை வெற்றிகரமாக்க முடியுமா என்று மோடி - அமித்ஷா ஆசியுடன் முயற்சிக்கிறார் அண்ணாமலை.

பெ.சண்முகம்
பெ.சண்முகம்

ஆரம்பித்த இரண்டு மணி நேரத்தில் 2.50 லட்சம் பேர் சேர்ந்து இருப்பதாகக் கூறுவதெல்லாம் பாஜக கட்சியினர் இதில் இணைக்கப்படுகிறார்கள் என்பதே அண்ணாமலை போடுவது "மாரீச மான் வேடம்" என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.

'ஜம்பம் அடித்த பிரவீன் சக்கரவர்த்தி; உஷ்ணமான விஜய்!' - கம்யூ.,க்களை தேடி ஓடிய காங்கிரஸ்

தமிழகத்தில் காலியாக இருக்கும் ராஜ்ய சபா எம்.பி சீட்டை காங்கிரஸூக்கு கொடுத்திருந்தது தவெக. காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி இன்று தலைமைச் செயலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார். ஆனால், இ... மேலும் பார்க்க

"நான் கிரிக்கெட்டைவிட்டு விலக தாதா தாவூத்தான் காரணம்" - லலித் மோடி அடுக்கும் குற்றச்சாட்டுகள் என்ன?

தான் நிரந்தரமாக கிரிக்கெட் உலகை விட்டு விலகியதற்கு, நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரது 'டி-கம்பெனி' நெட்வொர்க் கொடுத்த கொலை மிரட்டல்கள்தாம் காரணம் என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருக்க... மேலும் பார்க்க

`மோடி எதிர்ப்பு மட்டுமே போதுமா?' - ஸ்டாலின் முடிவும் இந்தியா கூட்டணியின் எதிர்காலமும்? - ஓர் அலசல்!

2023 ஜூன் மாதத்தில் 28 கட்சிகளுடன் தொடங்கப்பட்ட 'இந்தியா' கூட்டணி, கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வின் தனிப்பெரும்பான்மையைத் தடுத்து நிறுத்தியதில் முக்கியப் பங்கு வகித்தது. அந்த தேர்தலில், உத்த... மேலும் பார்க்க

Annamalai: 'பாஜக துணை தலைவர் டு தொண்டர்' - அண்ணாமலையின் கோவை REWIND | Photo Album

ஆகஸ்ட 2020 - தமிழக பா.ஜ.க மாநில துணைத்தலைவராக பொறுப்பேற்று கோவைக்கு முதன்முதலில் வந்தபோது ஆகஸ்ட 2020 - தமிழக பா.ஜ.க மாநில துணைத்தலைவராக கோவையில் அண்ணாமலை முதல் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு ஆகஸ்ட 2... மேலும் பார்க்க

கோவை பாஜக முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா – அண்ணாமலை அமைப்பில் ஐக்கியம்

பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ராஜினாமா ஏற்கப்பட்ட நிலையில், முன்னாள் கோவை மாநகர மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, தெற்கு மாவட்டத் தலைவர் வசந்த ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் அக்கட்சியில்... மேலும் பார்க்க

முன்பு வேண்டாம் என்று மறுத்த `இந்தியா' ; மீண்டும் கதவைத் தட்டும் `ரஷ்யா!' Su-57 டீல் ஓகே ஆகுமா?

ஐந்தாம் தலைமுறை போர் விமானமான சுகோய் Su-57-ஐ இந்தியாவோடு இணைந்து தயாரிக்கத் தயார் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மீண்டும் ஒருமுறை வெளிப்படையாகவே அழைப்பு விடுத்திருக்கிறார். ஒரு காலத்தில் இதே திட்டத்... மேலும் பார்க்க