இந்திய ATM-களில் பணப் பற்றாக்குறை; பணப் புழக்கத்தில் சிக்கலா? மக்களுக்கு என்னென்...
'மாற்றத்தை விரும்பும் மக்களும் எங்களோடு கைகோர்க்கலாம்' - புதிய இயக்கத்தைத் தொடங்கிய லதா ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் தனியாக மக்கள் இயக்கம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். 'மக்கள் மேடை' என்கிற பெயரிலான இந்த இயக்கத்தை இன்று தொடங்கியிருக்கிறார் லதா ரஜினிகாந்த்.
இது தொடர்பான அறிவிப்பை காணொளி வாயிலாக அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.
அந்தக் காணொளியில் அவர், "எங்களுடைய இயக்கம் மூலமாக இந்த மாநிலத்துக்குப் பணி செய்ய நினைக்கும் அனைவரும் எங்களுடன் இணையலாம். பெரிய மக்கள் சக்தியாக உருவாகி மாநிலத்திற்குப் பல நன்மைகள் செய்திட முன் வாருங்கள்.
ஒன்றாகச் சேர்ந்து ஆக்கப்பூர்வமான விஷயங்கள் செய்வோம். உள்ளூர்களில் தலைவர்களை உருவாக்க வேண்டும். வலிமையும், சிந்தனைகளையும், பங்களிப்புகளையும் மக்கள் இந்த மாநிலத்திற்குத் தருவதற்குத் தயாராக இருக்கிறார்கள்.

அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள், இளைஞர்கள் என மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் எங்களோடு கைகோர்க்கலாம்.
ஒன்றாகச் சேர்ந்து, ஒரு பெரும் மக்கள் சக்தியாக உருவெடுத்து நல்ல பல காரியங்களைச் செய்வோம்!" எனத் தெரிவித்திருக்கிறார்.
பா.ஜ.க-விலிருந்து விலகிய அண்ணாமலையும், ஏற்கெனவே அவர் வைத்திருக்கும் 'We The Leaders - Lead The Change' அமைப்பை அரசியல் இயக்கமாக மாற்றுவதாக இன்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.


















