Greenland: ``எங்கள் எல்லையில் நுழைந்தால் சுடுவோம்" - அமெரிக்காவை எச்சரிக்கும் டெ...
'தந்தைக்கே துரோகம் செய்த கொம்பனுக்கா ஓட்டு?' - அதிமுகவுடனான கூட்டணியை நிராகரித்த ராமதாஸ்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேற்று(07-01-2026) சந்தித்து கூட்டணியை உறுதி செய்திருக்கிறார் பாமக தலைவர் அன்புமணி.
ஆனால், இன்னொரு பக்கம், பாமக நிறுவனர் ராமதாஸ் அந்தக் கூட்டணியை ஒப்புக்கொள்ளவில்லை.
இந்தச் சூழலில், இன்று தைலாபுரத்தில் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். அவர் பேசியுள்ளதாவது...
"நேற்று ஒரு நபர் (அன்புமணி) ஒரு கட்சியுடன் கூட்டணி என ஒப்பந்தமோ... கையெழுத்தோ போட்டிருக்கிறார்.
நான் செய்த சத்தியத்தை மீறி அவரை கட்சியில் சேர்த்தேன்... மத்திய அமைச்சர் ஆக்கினேன். அப்போது அவன் எனக்கே வேட்டு வைப்பான் என்று தெரியவில்லை.

ஆனால், அவர் செய்த தில்லுமுல்லுகள் தெரிந்த பின், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினேன்.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வைத்த வாதத்தின் படியும், தீர்ப்பின் படியும் அன்புமணி பாமகவில் இல்லை.
என்னிடம் தான் கட்சி உள்ளது என்பதற்கான ஆதாரம் - நடந்த செயற்குழு, பொதுக்குழு, நிர்வாகக்குழு ஆகியவற்றிற்கு ஆயிரக்கணக்கானோர் வந்தனர்.
பாமகவின் தொண்டர்கள் என்னிடம் தான் உள்ளனர். சில நபர்கள் மட்டும் பணத்திற்காக அவருடன் இருக்கிறார்கள்.
அன்புமணி யாரை எங்கு நிறுத்தினாலும், பாமகவினருடன், மக்களும் அவர்களுக்கு ஓட்டு போடமாட்டார்கள்.
காரணம், 'தந்தைக்கே துரோகம் செய்த கொம்பனுக்கா ஓட்டு போடுவது?' என்று யோசிப்பார்கள்.
அன்புமணி பாமக சார்பாக கூட்டணி பேசுவது நேற்று நடந்த கூத்து. அது நீதிமன்ற அவமதிப்பு.
என் தலைமையில் தான் கூட்டணி பேச முடியும். நான் அமைக்கும்... சேரும்... இருக்கும் கூட்டணி தான் ஆட்சி அமைக்கும்". என்றார்.
















