செய்திகள் :

``தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்கிற பாஜக-வை எமது மக்கள் எப்போதும் ஆதரிக்க மாட்டார்கள்!" - ஜோதிமணி

post image

"எந்த முகத்தை வைத்துக் கொண்டு பா.ஜ.க-வும், நரேந்திர மோடியும் இங்கு வாக்கு கேட்டு வருகிறார்கள்?. தமிழ்நாடே தண்ணீரில் மிதந்தபோது, புயல் வீசியபோது எட்டிக்கூடப் பார்க்காத பிரதமருக்கு இப்போது மட்டும் இங்கென்ன வேலை?. டாட்டா பை பை " என்று காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தனது சமூகவலைத்தள பக்கத்தில் அவர் செய்துள்ள பதிவில்,

"தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து துரோகம் செய்கிற பா.ஜ.க-வை எமது மக்கள் எப்போதும் ஆதரிக்கமாட்டார்கள். ஒன்றிய அரசு கொடுக்கிற நிதி எமது மக்களின் வரிப்பணத்தில் 29% மட்டுமே. அதிலும் இந்தியை திணித்து தமிழை அழிக்க தடையாக இருப்பதால் கல்விக்கு நிதி மறுப்பு.

கீழடியில் எமது அடையாளங்களை, தொன்மையை, வரலாற்றுச் சிறப்பை ஏற்க மறுப்பு.

இயற்கைச் சீற்றங்களின் போது தமிழ்நாடு என்று ஒரு மாநிலம் இந்தியாவிலேயே இல்லாததுபோல புறக்கணிப்பு.

ஜி.எஸ்.டி என்ற பெயரில் உற்பத்தியில் சிறந்து விளங்கும் மாநிலமான தமிழ்நாட்டிற்குப் பேரிழப்பு.

பெரும்பான்மையான ஏழை, எளிய மக்களின் வாழ்வில் காங்கிரஸ் ஏற்றிவைத்த 100 நாட்கள் வேலை ஒழிப்பு.

jothimani

விவசாயக் கடனகளை தள்ளுபடி செய்ய மறுப்பு.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையில் பல லட்சம் கோடி கொள்ளையடிக்க மக்கள் வயிற்றில் அடிப்பு.

தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட பிரதிநிதிகள் நிறைந்த தமிழ்நாடு சட்டமன்றம் அவமதிப்பு.

தமிழ்நாட்டு மக்களின் நலன்காக்கும் மசோதாக்கள் நிறுத்தி வைப்பு .

தமிழ் படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் தராமல் தமிழ் திரையுலகின் மீது தாக்குதல்...

இப்படி எமது மக்களுக்கு எதிரான துரோகப் பட்டியலை தொடர்ந்து வாசித்துக் கொண்டே போகலாம். எந்த முகத்தை வைத்துக் கொண்டு பா.ஜ.க-வும், நரேந்திர மோடியும் இங்கு வாக்கு கேட்டு வருகிறார்கள்?. தமிழ்நாடே தண்ணீரில் மிதந்தபோது, புயல் எங்கள் வாழ்வைப் பிடிங்கி தரையில் வீசியபோது எட்டிக்கூடப் பார்க்காத பிரதமருக்கு, இப்போது மட்டும் மட்டும் இங்கென்ன வேலை?.

டாட்டா பை பை" என்று தெரிவித்துள்ளார்.

`210 இடங்களில் நம் கூட்டணி வெற்றிபெற்று அதிமுக ஆட்சியமைக்கும்!' - NDA கூட்டத்தில் இபிஎஸ் பேச்சு

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் இன்று (ஜன. 23) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ``இந்திய திருநாடே மதுராந்தகத்தை நோக்கிப் ... மேலும் பார்க்க

`இரட்டை இன்ஜின் அரசு தேவை.. திமுக ஆட்சியின் கவுன்ட்டவுன் ஆரம்பம்!'- மதுராந்தகத்தில் பிரதமர் மோடி உரை

மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ``பாரதா மாதா வாழ்க... என் சகோதர சகோதரிகளே வணக்கம். 2026-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் என... மேலும் பார்க்க

'கூட்டணிக்கு அவர் வேண்டாம் முதல்வரே!' - தூதுவிட்ட விசிக... குழப்பத்தில் திமுக!

தி.மு.க கூட்டணியில் இணைய ராமதாஸ் தரப்பு முண்டியடிக்கும் சூழலில், 'ராமதாஸ் நம் கூட்டணிக்கு வேண்டாம்' என முதல்வருக்கு வி.சி.க தூது அனுப்பியதாகச் சொல்கிறார்கள் அறிவாலயப் புள்ளிகள்.தந்தை - மகன் மோதலால் பா... மேலும் பார்க்க

Modi : NDA பொதுக்கூட்டம் - கைலாசா செல்ல வழிகாட்டு நெறிமுறைகள் விநியோகிக்கும் நித்தியானந்தா சீடர்கள் | Live

கைலாசாவுக்கு அழைத்து செல்வதற்கான கையேடுNDA பொதுக்கூட்டத்தில் நித்தியானந்தாவின் சீடர்கள் கைலாசாவுக்கு செல்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய புத்தகத்தை விநியோகித்து வருகின்றனர்.ஆளுநரின் அராஜகம் எப்ப... மேலும் பார்க்க

``நாங்க எவ்வளவு சொல்லியும் டிடிவி தினகரன் கேட்கல.!” - திமுகவில் இணைந்த மாணிக்கராஜா

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூரைச் சேர்ந்தவர் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா. கடம்பூர் ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், இவரை, ”ராஜா”, “இளைய ஜமீன்தார்” என்றுதான் அழைப்பார்கள். அ.தி.மு.கவில் தன்னை இணை... மேலும் பார்க்க