செய்திகள் :

"தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்து பிரதமர் மோடியை காப்பாற்றி இருக்கிறார்!" - சு.வெங்கடேசன்

post image

நேற்று நாடாளுமன்றத்தில் 'பொதுத் தேர்வுகள் (முறையற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) திருத்த மசோதா, 2026' மீதான விவாதம் நடந்தது.

அதில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசியதாவது...

"நீதிபதியினுடைய அருவருப்பான சிந்தனையும் ஆளுங்கட்சியினுடைய அராஜகமான சிந்தனையும் இணைந்து உருவாக்கிய கரப்பான் பூச்சிகள் தற்போது இந்த மசோதாக்கள் முழுவதும் பறந்து கொண்டிருக்கிறார்கள்.

மோடி - அமித் ஷாவுக்கு எதிரான இளைஞர்களின் ஆட்டம் சாதாரண ஆட்டம் அல்ல. 12 ஆண்டு காலம் ட்ரம்பிடம் மட்டுமே மண்டியிட்ட மோடியை முதல் முறையாக மாணவர்களிடம் மண்டியிட வைத்த பெருமை ஜந்தர் மந்தர் போராட்டத்திற்கு உண்டு.

தர்மேந்திர பிரதான்
தர்மேந்திர பிரதான்

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்து பிரதமரை காப்பாற்றி இருக்கிறார். அவ்வளவுதான். மாணவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ராஜினாமா செய்வதாக அவர் சொல்கிறார்.

மே மூன்றாம் தேதி வினாத்தாள் கசிந்தது, 83 நாட்கள் எங்கே போனார்? ஏறக்குறைய கடந்த 10 ஆண்டுகளில் 152 முறை வினாத்தாள் கசிவு ஏற்பட்டிருக்கிறது.

ஏழரை கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவ்வளவு குற்றத்திற்கும் ஒருவர் கூட தண்டனை பெறவில்லை என்றால் ஒரு குற்ற உணர்ச்சி கூட இல்லாமல் அந்த ராஜினாமா கடிதத்தை அவர் சமர்ப்பித்திருக்கிறார்.

2003-ஆம் ஆண்டு வாஜ்பாய் காலத்திலே ஏற்பட்ட வினாத்தாள் கசிவு வழக்கு இன்றைக்கு வரை நடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் தமிழ்நாட்டிலே இருந்து இந்த நாடாளுமன்றத்தில் கேட்கிறோம்.

அரியலூர் அனிதாவில் துவங்கி, மதுரை ஜோதிஸ்ரீ துர்காவிலிருந்து கோயம்புத்தூர் கோபிகா வரை எண்ணற்ற மாணவர்களை பலிகொடுத்த துயரத்தின் வழியிலே இருந்து சொல்கிறோம்.

நீட் என்பது டீச்சிங்கை கொன்று கோச்சிங்கை கொண்டாடுகிறது. நீட் என்பது மாநில உரிமையை குழிதோண்டிப் புதைக்கிறது. நீட் என்பது மாணவர்களின் தன்னம்பிக்கையை ஒழித்து தற்கொலைக்கு தள்ளுகிறது.

அனிதா
அனிதா

எனவே நீட்டை கைவிடுங்கள், NEP-ஐ கைவிடுங்கள். கார்ப்பரேட் மயமாகிற கல்வி கொள்கையை கைவிடுங்கள்.

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருகிற ஒரு மசோதாவை தாக்கல் செய்யுங்கள். அதை விட்டுவிட்டு இந்தக் கண்துடைப்பு மசோதாவால் எந்த வேலையும் ஆகப்போவதில்லை.

தமிழக அரசால் அமைக்கப்பட்ட நீதியரசர் ராஜன் குழு மிக முக்கியமான புள்ளிவிவரத்தை வெளியிட்டது.

2010-ஆம் ஆண்டு நீட் அறிமுகமாவதற்கு முன்பு மாநில கல்வி திட்டத்திலிருந்து மருத்துவக் கல்லூரிக்கு போன மாணவர்கள் 2,330 பேர். சிபிஎஸ்இ-லிருந்து போனவர்கள் வெறும் 14 பேர்தான்.

ஆனால் நீட் அறிமுகமான பிறகு சிபிஎஸ்இ-லிருந்து போனவர்கள் 1,604 பேர். நீட் அறிமுகமாவதற்கு முன்பு கிராமப்புற மாணவர்கள் 65% பேர் மருத்துவக் கல்லூரிக்கு போனார்கள். இப்பொழுது வெறும் 49% ஆக அது குறைந்திருக்கின்றது.

இந்த போராட்டம் நுழைவுத் தேர்வு குறித்து ஒரு பெரிய கவனத்தை உருவாக்கி இருக்கிறது. இதற்கு பின்பு இருப்பது நிர்வாக பிரச்சனை அல்ல, அரசியல் கேள்வி". என்றார்.

தாய்மாமன் தங்க மோதிரம்: "திராவிட மாடல் அரசின் திட்டத்தைப் பின்பற்றுகிறார்" - விஜய்யைச் சீண்டிய மேயர்

ஜூலை மாதத்துக்கான சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் இன்று ரிப்பன் பில்டிங்கில் நடந்து வருகிறது. இதில் உரையாற்றிய மேயர் பிரியா முதல்வர் விஜய்யைச் சீண்டும் வகையில் பேசியிருந்தார்.மேயர் பிரியாஅவர் ப... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை!

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது. இந்தச் சோதனை இன்று காலை 7 மணி முதல் நடந்து வருகிறது. எங்கெல்லாம் நடக்கிறது? கரூர் ராமேஸ்வ... மேலும் பார்க்க

`விசிக அலுவலகத்துக்கு அந்த சோபா வாங்கி தந்தது இவர்தான்' - விவரிக்கும் திருமாவளவன் மருமகன் இசை அமுதன்

வி.சி.க-வின் தொழிலாளர் பிரிவான `தொழிலாளர் விடுதலை முன்னணி'யின் மாநிலச் செயலாளராக இருப்பவர் இசை அமுதன். திருமாவளவனின் உடன் பிறந்த சகோதரியின் மகன். குழந்தைப் பருவம்தொட்டு திருமாவின் அரவணைப்பில் வளர்ந்தவ... மேலும் பார்க்க

ரஷ்யா - உக்ரைன் போர்: கருங்கடலில் ஏவுகணை தாக்குதல்; கப்பலில் சிக்கித் தவிக்கும் 13 இந்திய மாலுமிகள்

ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையே ஆண்டுக்கணக்கில் போர் நடந்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் பலனலிக்கவில்லை. இரு நாடுகளும் ஒருவர் ம... மேலும் பார்க்க

பழநி நில விவகாரத்தில் திடீர் திருப்பம்: 1882-ஆம் ஆண்டு அசல் ஆவணங்களுடன் வந்த வாரிசுதாரர்கள்!

பழநி தண்டபாணி மடத்துக்குச் சொந்தமான நில மோசடி வழக்கு தொடர்பாக, 1880-ஆம் ஆண்டின் நில உரிமையாளர் எனக் கூறப்படும் குப்புசாமி மணியகாரரின் வாரிசுதாரர்கள் திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜ... மேலும் பார்க்க