செய்திகள் :

தவெக ஆட்சியமைக்க ஆதரவு ஏன்? - "எங்களை மதித்து அழைத்ததால்..." - கார்த்தி சிதம்பரம் விளக்கம்

post image

நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது.

ஆனாலும் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை த.வெ.கவிற்குக் கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 118 தொகுதிகளை தனிக் கட்சியாக வென்றால் மட்டுமே தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைக்க முடியும்.

விஜய் - ராகுல் காந்தி
விஜய் - ராகுல் காந்தி

ஆனால் தனிக்கட்சியாக 108 இடங்களை மட்டுமே த.வெ.க வென்றுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை கட்சி பெறாததால், ஆதரவு அளிக்க காங்கிரஸை த.வெ.க நாடியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்த நிலையில் த.வெ.க ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

இந்நிலையில் இதுதொடர்பாக பேசியிருக்கும் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், "தமிழ்நாடு மக்கள் வாக்களித்துவிட்டார்கள். மாற்றத்திற்காக வாக்களித்திருக்கிறார்கள். ஆனால் மக்கள் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கொடுக்கவில்லை.

ஒரு கட்சிக்கு அதிக இடங்களை வழங்கியிருக்கிறார்கள். 108 இடங்களைக் கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக அந்தக் கட்சியின் தலைவர் விஜய்க்கு வாக்களித்திருக்கிறார்கள். அவர் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்று வாக்களித்திருக்கிறார்கள். தற்போது எங்களின் ஆதரவை விஜய் கேட்டிருந்தார்.

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்

எங்கள் கட்சியில் இருக்கும் அனைவரும் சேர்ந்து ஒரு மனதாக மதசார்பற்ற அரசாங்கம் அமைய த.வெ.கவுக்கு ஆதரவு தந்திருக்கிறோம். தேர்தலுக்கு முன்பு கட்சிகள் ஒரு நிலைபாட்டில் இருப்பார்கள்.

தேர்தலுக்குப் பிறகு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் எதிர் எதிராக நின்றவர்கள் கூட ஒரு கூட்டணி அமைப்பார்கள். விஜய் எங்களை மதித்து அழைத்ததால் நாங்கள் த.வெ.கவிற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறோம்" என்று கூறியிருக்கிறார்.

`விஜய் முதல்வராவதை தடுத்தால்..!' - ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவூட்டும் காங்கிரஸ் நிர்வாகி

காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் மகேந்திரன். இவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதி மகேந்திரனுக்கு ... மேலும் பார்க்க

`தி.மு.க-வுக்கு பாயத் தயாராகும் சிறுத்தைகள் டு சாரி கேட்ட செந்தில் பாலாஜி!' | கழுகார் அப்டேட்ஸ்

புலம்பும் கு.ப.கிருஷ்ணன்!"தப்புக்கணக்கு போட்டுட்டோம்"த.வெ.க-வில், முகம் தெரியாத பலரும் வெற்றிபெற்ற நிலையில், லால்குடி தொகுதி வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனோ தோல்வியைத் தழுவியிருக்கிறார். அ.தி.மு.க முன்னாள் அ... மேலும் பார்க்க

விஜய்க்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமல் பந்தாடும் ஆளுநர்! - வலுக்கும் கண்டனங்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன... மேலும் பார்க்க

`அந்த திட்டம் வேண்டாம்!' - அதிமுகவுக்கு `நோ' சொல்லிய திமுக?

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்தாலும் இன்னும் பரபரப்புக்குக் குறைவில்லாமல் நகர்கிறது அரசியல் களம். குறிப்பாக நேற்று இரவு வெளியான சில தகவல்கள் தமிழக அரசியல் பார்வையாளர்கள்கூட எதிர்பாராதவை. அதாவது, ... மேலும் பார்க்க

"விஜய்யைப் பதவியேற்க அனுமதிக்க வேண்டும்; ஆளுநர் அப்படி சொல்ல முடியாது" - திருமாவளவன்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றிருக்கிறது. 118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுக கூட்டணிய... மேலும் பார்க்க

`மு.க.ஸ்டாலின் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி மனதார வருத்தப்பட்டார்!' – ஆதங்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக த.வெ.க உருவெடுத்திருந்தாலும், ஆட்சி அமைப்பதற்கு தேவையான தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் தி.மு.க கூட்டணியில் இருந்த காங்கிரஸ் அதிலிருந்து ... மேலும் பார்க்க