செய்திகள் :

``தவெக எம்எல்ஏ-க்கள் திமுக-வுக்கு வருவாங்க; 6 மாசத்துல ஆட்சி மாற்றம் நடக்கும்" - அனிதா ராதாகிருஷ்ணன்

post image

தி.மு.க முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்ற கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, ``எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரால் வழிநடத்தப்பட்ட அதிமுகவை யாராலும், குறிப்பாக தவெக-வால் அழித்துவிட முடியாது. அதிமுகவின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் எங்கு வேண்டுமானாலும் ஓடலாம். ஆனால் உண்மையான தொண்டர்கள் இயக்கத்திலேயேதான் இருப்பார்கள்.

எவரை ஒழித்தால் சரியாக இருக்கும் என்பது தொண்டர்களுக்குத் தெரியும். எனவே, அந்த அ.தி.மு.க தொண்டர்கள் விரைவில் தி.மு.க-வுடன் கைகோர்ப்பார்கள். இன்னும் ஆறு மாத காலத்தில் தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க-வின் ஆட்சி மலரும்.

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

எந்த ஒரு சக்தியாலும், எந்தக் கொம்பனாலும் தி.மு.க-வைத் தொட்டுப் பார்க்கவோ அல்லது அசைத்துப் பார்க்கவோ முடியாது என்பதுதான் வரலாறு. அதைத் தற்போதும் நிரூபித்துக் காட்டுவோம். தற்போதைய சூழலில் த.வெ.க எம்.எல்.ஏ அனைவரும் எப்போது அக்கட்சியை விட்டு வெளியேறலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காக தி.மு.க-வைக் காட்டி அவர்களைப் பயமுறுத்தி வருகிறது. இரண்டே மாதத்தில் இந்தக் கட்சி விளங்காது என அவர்களே வருவார்கள். நாங்கள் யாரையும் கூப்பிட வேண்டிய அவசியம் இல்லை, அவர்களாகவே தானாக முன்வந்து தி.மு.க-வில் இணையப் போகிறார்கள்" என்றார்.

சாதிய பாகுபாட்டால் இயக்கப்படாத அரசுப் பேருந்து – இயக்க வைத்து பயணித்த அமைச்சர் வன்னி அரசு!

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் என்ற கிராமம் உள்ளது. இங்கிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் அண்ணா நகர் என்ற பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதி அமைந்துள்ளது. இதனிடையே அப்பகுதியைச் சேர... மேலும் பார்க்க

வாரிய தலைவர் பதவிக்கு 5 'அன்பு பரிசு'கள்; முதல்வருக்கு நெருக்கத்தில் ஜரூராக நடக்கிறதா வசூல் வேட்டை?

'யாராவது லஞ்சம் கேட்டா உங்க அண்ணன் விஜய்யோட ஆட்சி நடக்குதுன்னு சொல்லுங்க...' என முதல்வர் விஜய் கரூரில் பேசியிருந்தார். ஆனால், கோட்டையில் முதல்வரின் நெருக்கமான வட்டத்திலேயே ஒரு முக்கிய புள்ளியின் பெயரி... மேலும் பார்க்க

"தேர்தலுக்கு 5 வருஷம் காத்திருக்க தேவையில்ல; திமுகவுக்கு ஆசை காட்டும் பாஜக.!"- கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் திருப்பத்தூரில் இன்று (ஜூலை. 18) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "என்னுடைய புரிதல் என்னவென்றால் திமுகவுடன், பாஜக பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டது. 'தொ... மேலும் பார்க்க

`என் போராட்டங்கள் அண்ணன் விஜய்க்கு தெரிந்திருந்தால்..!’ - தவெகவில் நீக்கப்பட்ட பெண் வழக்கறிஞர்

`அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டுதான் நியமிக்கிறார்கள்' என்று, த.வெ.க-வின் விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ஞானசௌந்தரி சென்னை உயர் நீத... மேலும் பார்க்க

’எவ்வளவு அவதூறு பரப்பினாலும் வைகோவை நேசித்துக் கொண்டே இருப்போம்’ - அமைச்சர் வன்னி அரசு விளக்கம்!

கோவை விமான நிலையத்தில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ஆதிதிராவிடர் நலத்துறை பெயர் மாற்றம் வருத்தமளிக்கின்றது என திருமாவளவன் சொல்லியிப்பது குறித்த கேள்வ... மேலும் பார்க்க

`கரூர் கம்பெனி வேலைக்காரர்கள்போல் நடத்தப்பட்டோம்'- திமுகவிலிருந்து கோவை மாநகராட்சி கவுன்சிலர் விலகல்

கோவை மாநகராட்சி 22 வது வார்டு கவுன்சிலர் கோவை பாபு செல்வக்குமார் என்பவர், தி.மு.க-வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “2020 ஆம் ஆண்டிலிருந்து திராவிடன் அறக்கட்டளையைத்... மேலும் பார்க்க