கரூர்: மது அருந்தும் போது தகராறு; நண்பரை பீர் பாட்டிலால் அடித்துக் கொலை செய்த இள...
திடீரென்று ஒரு சைரன் சத்தம்! - அந்நிய மண்ணில் ஒரு அபாய அனுபவம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
இரவில் கலைந்த தூக்கத்தை இழுத்துப் பிடித்துப் பின் ஓரளவு நிம்மதியாகவும் ஆழமாகவும் தூங்க ஆரம்பிக்கும் நேரம்தான் விடிகாலை.
இந்த நேரத்தை நான் யாருக்கும் எதற்காகவும் விட்டுத் தருவதில்லை.
சிட்னி நகரில் அப்படிப்பட்ட ஒரு ஆஸ்வாசமான விடிகாலை நேரம்.
திடீரென்று ஒரு சைரன் சத்தம் ...ட் முதலில் , கனவோ என்று அசட்டையாக புரண்டு படுத்த என்னை, அந்த அபாய சங்கு பிடிவாதமாக அலறி , உலுக்கி எழுப்பி விட்டது.
கூடவே ஆங்கிலத்தில் கனமான எச்சரிக்கை குரல், Emergency...Evacuate now... என்று வீட்டில் உள்ள இரண்டு smoke detectors மூலம் ,விடாமல் துரத்தியது.
தூக்கம் கலையாத அந்த விடி காலையில் இந்த ஓலம் பயமாகவும், கூடவே வெறுப்பாகவும் இருந்தது.
முதலில் நான், உடனே மனைவி, உள்ளே இருந்து கொஞ்சம் கொஞ்சமாக, மகன் என்று எல்லோரும் எழுந்து விட்டார்கள். மருமகள் ஒண்ணரை வயதுக் குழந்தையை தூக்கிக் கொண்டு பயத்துடன் வந்தாள்.
குழந்தை , ஏதோ விளையாட்டு என்று நினைத்துக் கொண்டு, சிரித்துக் கொண்டே, சைரனைத் தொடர்ந்து அதுவும் சைரன் போல கத்திக் கொண்டு வீடு முழுக்க ஓடிக் கொண்டிருந்தது . நல்ல வேளை, அழவில்லை..
இந்த ஆர்த்ரடிஸ் காலை வைத்துக் கொண்டு 9வது மாடியில் இருந்து படிக்கட்டு வழியாக இறங்க வேண்டுமே என்ற கவலை என் வயிற்றில் புளியைக் கரைத்தது.
எதையும் சிந்திக்க விடாமல், அபாய சங்கு ஒலியுடன் evacuate , emergency என்ற குரல் விடாமல் அலறிக் கொண்டே இருந்தது.
இந்த நால்வரில் மனோ தைரியமும் , உடல் வலுவும் கொண்ட என் மகன், " எல்லோரும் இங்கேயே இருங்கள். நான் கீழே போய் நிலைமையை பார்த்து விட்டு உங்களுக்கு ஃபோன் செய்கிறேன். அப்புறம் வேகமாக வந்தால் போதும் ..அதற்குள் நீங்கள் தயாராக இருங்கள் " என்று கூறிவிட்டு வேகமாக படியில் இறங்கி சென்றார்.
காலையில் எழுந்த மறு நிமிடமே டீ போடப் போகும் மனைவி, இன்றும் " அவசரமா ஒரு டீ போட்டு விடவா? " என்று கேட்டார். நாங்கள் எல்லோரும் ஒரே குரலில் இந்த நேரத்தில் அடுப்பு ஏற்ற வேண்டாம் என்று தடுத்து விட்டோம்.

நான் அவசரம் அவசரமாக எங்களின் பாஸ்போர்ட், பர்ஸ், அனைவரின் charge செய்யப்பட்ட மொபைல் ஃபோன், வீட்டு, கார் சாவிகள், முக்கியமான வங்கி ஆவணங்களை எல்லாம் ஒரு பையில் பதுக்கினேன். ஷூ போட நேரம் ஆகும் என்பதால் ஷூவையு ம் போட்டுக் கொண்டு மெள்ள மெள்ள கீழே இறங்கத் தயாராகி விட்டேன்.
என் மனைவியும் அவசரமாக ஆடை மாற்றிக் கொண்டு ஒரு சின்ன பையில், கையில் சிக்கிய பழம், ரொட்டி, எனர்ஜி பார் எல்லாம் நிரப்பி ரெடியாகி விட்டார்.
மருமகள் குழந்தைக்கான அத்தியாவசிய பொருட்களை சேகரித்துக் கொண்டார்.
விடாமல் அபாய அறிவிப்பும், சைரனும் தொடர்ந்து, ஒரு பக்கம் பதட்டத்தையும் பயத்தையும் கொடுத்துக் கொண்டே இருந்தன.
வெளியே எட்டிப் பார்த்தபோது சிலர் சிறு பைகளை முதுகில் சுமந்து கொண்டு, கிடு கிடு என்று படிகளில் இறங்கிக் கொண்டிருந்தார்கள். சிலர் முகத்தில் பயத்துடன், எங்களைப் போல வாசலில் தயங்கி நின்று கொண்டிருந்தார்கள்.
கீழே சென்ற மகன் ஃபோனில், " பயப்பட ஒன்றுமில்லை" என்று ' கண்டேன் சீதையை..' என்பது போல சொல்லிவிட்டு , மீதியை சொன்னார்.
" Fire engine உடனே வந்து விட்டது. அவர்கள் எல்லாவற்றையும் சோதித்து விட்டு , not serious , you can go home என்று சொல்லிவிட்டார்கள். இதோ நான் லிஃப்ட் மூலம் மேலே வருகிறேன்.." என்றார்.
அபாய சங்கும் தன் அலறலை நிறுத்திக் கொண்டது.
எல்லாம் சுபம். மனைவி காலை டீ போட சென்றுவிட்டார். நானும் ஷூவை கழற்றி விட்டு இயல்பு உடைகளுக்கு மாறி படுக்கையில் மீண்டும் சாய்ந்தேன்.

அனுபவம் தந்த பாடம்:
- எதற்கும் தயாராக இருக்க வேண்டும்..
- பதட்டம் இல்லாமல் evacuation ( வெளியேற்றம்) நிலைமையை எப்படி எதிர்கொள்வது...
- எந்த பொருட்களை உடனே எடுத்து செல்லவேண்டும் என்று சீக்கிரம் முடிவு எடுக்க வேண்டும். அது கொஞ்சமாகவும் முக்கியமானதாகும் இருக்க வேண்டும்
- false alarm என்று நாமே முடிவு செய்யக் கூடாது. ' புலி வருது ' கதை ஆகக் கூடாது.
சில தகவல்கள்:
அபாய அறிவிப்பின் காரணம் என்னவென்று தெரியவில்லை. நிச்சயம் technical fault என்று சொல்ல முடியாது. ஏனென்றால் இங்கு அடிக்கடி இந்த புகை நெருப்பு எச்சரிக்கை ( smoke detection and fire alarm system) அமைப்பின் வன்பொருள் ( hardware) மென்பொருள் ( software) இரண்டும் அடிக்கடி பரிசோதிக்கப் படுகிறது.
எந்த பிளாட்டில் என்ன புகையோ தெரியவில்லை. சாதாரண புகை என்றால் கொஞ்ச நேரம் இந்த அபாய சங்கு ஊதிவிட்டு அடங்கிவிடும். இதை false alarm என்று சொல்வார்கள். இல்லை கனமான புகை, அல்லது நெருப்புடன் கூடிய அபாயம் என்றால் இந்த smoke detector ( வீட்டில் பொருத்தப் பட்ட, புகையை உணரும் sensor) இன்னொரு fire alarm சிஸ்டத்தை முடிக்கி விட்டு கட்டிடம் முழுதும் அலற விடும். எல்லோரும் உடனடியாக படி வழியாக கீழே ஓடவேண்டும்.
சில இடங்களில் தீயின் தீவிரத்தை பொறுத்து இந்த fire alarm தானாகவே தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவித்து விடும். தீ எரியும் இடத்தில் sprinklers என்னும் கருவி தண்ணீரைத் தெளித்து தீயை அடக்க முயற்சி செய்யும்.
சமையல் செய்யும்போது அஜாக்கிரதையாக புகையவிட்டு அதனால் automated fire alarm முடுக்கப்பட்டு தீ அணைப்பு படையினர் அனாவசியமாக வர நேர்ந்தால் நாம் ஒரு பெரும் தொகையை அபராதம் கட்ட வேண்டி வரும்.
- ராஜன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
















