செய்திகள் :

திமுக - அதிமுக கூட்டணி ஆட்சி: தவெக எம்எல்ஏ-கள் ராஜினாமா செய்ய முடிவா? | Tamilnadu Live Updates

post image

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஆட்சியமைப்பதில் நீடிக்கும் இழுபறியால் மாநில அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத கொந்தளிப்பைக் கண்டுள்ளது.

108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், தங்களை ஆட்சியமைக்க அழைக்காத ஆளுநரின் முடிவை எதிர்த்து நீதிமன்றம் செல்லத் திட்டமிட்டுள்ளது.

ஆளுநர் ஆர்.வி. அர்லேகர், விஜய்யின் ஆட்சியமைக்கும் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

"ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க போதுமான ஆதரவு கடிதங்கள் இல்லை" என ராஜ்பவன் தெரிவித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின், விஜய்
எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின், விஜய்

திமுக நடத்திய நிர்வாகிகள் கூட்டத்தில், கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு "அவசரகால முடிவுகளை" எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மீண்டும் ஒரு தேர்தலைத் தவிர்க்கவும், 'சமூக விரோத சக்திகள்' உள்ளே வருவதைத் தடுக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக திமுக தரப்பு கூறுகிறது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவும், அவருக்கு திமுக வெளியில் இருந்து ஆதரவு அளிக்கவும் ஒரு திட்டம் ஆலோசிக்கப்படுவதாகவும் தகவல்கள் கசிகின்றன.

பல தசாப்தங்களாக எதிரும் புதிருமாக இருந்த இரு கட்சிகள் இணைவதை மக்கள் ஏற்கும் விதமாக இருக்குமா? என்ற அச்சம் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு உள்ளது.

அதிமுக நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், "தவெக-வுடன் கூட்டணி கிடையாது; கட்சித் தாவல் பேச்சுக்கே இடமில்லை" என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இன்னும் இரண்டு நாள்களுக்கு அமைதி காக்குமாறு தனது எம்.எல்.ஏ-க்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

இந்த நிலையில்தான், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கைகோர்த்து ஆட்சியமைக்க முயன்றால், தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒட்டுமொத்தமாகப் பதவி விலக வேண்டும் என அக்கட்சித் தலைமை தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

மக்கள் தீர்ப்பைப் புறக்கணித்துவிட்டு, இரு கட்சிகளும் ரகசியக் கூட்டணியில் ஈடுபடுவதாக தவெக சந்தேகிப்பதாகச் சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் ஆட்சியமைக்கப் போவது யார்? அல்லது மீண்டும் ஒரு தேர்தல் வருமா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

தேர்தல் முடிந்துவிட்டது... அரசியல்வாதிகள் ஓய்வுக்கு என்னென்ன செய்யலாம்? - சில ரகளையான ஐடியாக்கள்

தேர்தல் திருவிழா முடிந்துவிட்டது. மக்கள் இயல்புநிலைக்கு உடனே திரும்பிவிடுவார்கள். ஆனால், நம் அரசியல்வாதிகளின் நிலைமைதான் பாவம்! கடந்த சில மாதங்களாகக் கத்தித் தொண்டை வரண்டு, ஊர் ஊராகச் சுற்றிக் கால்கள்... மேலும் பார்க்க

"மீண்டும் மனிதப்பிறவி எடுத்தால்.!" சொந்த தொகுதியில் கண்கலங்கிய எடப்பாடி பழனிசாமி; பேசியது என்ன?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைய இருக்கிறது. இறுதிகட்ட வாக்கு சேகரிப்பு பணிகள் அதிதீவிரமாக நடைபெற்று வருகின்றன. எதிர்கட்சி தலைவரும் முன்னாள் முதலம... மேலும் பார்க்க

8,000 ரூபாய் கூப்பனா, 10,000 ரூபாய் QR Code டோக்கனா? மக்களை விலை பேசும் மலிவான அரசியல்

தேர்தல் வந்துவிட்டாலே நம் ஊர்கள் களைகட்டிவிடும். சுவரொட்டிகள், மேடைப் பேச்சுகள் ஒருபுறம் இருந்தாலும், திரைக்குப் பின்னால் நடக்கும் `கவனிப்பு' நாடகங்கள் தான் உச்சகட்டமாக இருக்கும். ஜனநாயகத் திருவிழா என... மேலும் பார்க்க

Delimitation: தொகுதி மறுவரையறையில் அண்டா நமக்கு; பிரியாணி அவங்களுக்கா?

இந்தியாவில் `தொகுதி மறுவரையறை' (Delimitation) என்ற பெயரில் எதிர்காலத்தில் ஒரு பிரமாண்டமான அரசியல் மேஜிக் ஷோ நடக்கப்போகிறது. சிறு வயதில் பள்ளியில் ஒரு லாஜிக் சொல்வார்கள், நன்றாகப் படித்து வாத்தியார் பே... மேலும் பார்க்க