செய்திகள் :

துபாய்: 'உலகின் சிறந்த ஆசிரியர்' பரிசை வென்ற இந்தியர்; யார் இந்த ரூபிள் நாகி?

post image

துபாயில், உலக அரசாங்க உச்சி மாநாடு நவம்பர் 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்த மாநாட்டில், ஆசிரியர்களுக்கான மிக உயரிய விருதாகக் கருதப்படும் 'உலகின் சிறந்த ஆசிரியர் பரிசு' இந்தியாவைச் சேர்ந்த ரூபிள் நாகி என்பவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

உலகின் சிறந்த ஆசிரியருக்கான பரிசு (Global Teachers Prize) 2015 ஆம் ஆண்டு முதல் லண்டனைத் தலைமையகமாகக் கொண்ட வர்க்கி அறக்கட்டளை நிறுவனத்தால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

'உலகின் சிறந்த ஆசிரியர் பரிசு' வென்ற ரூபிள் நாகி
'உலகின் சிறந்த ஆசிரியர் பரிசு' வென்ற ரூபிள் நாகி

கல்வியில் சிறந்த சேவை வழங்கும் ஆசிரியர்களுக்கு 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகை வழங்கப்படும்.

அந்த வகையில் இந்தாண்டு, நகர்ப்புற குடிசைப்பகுதிகளில் வாழும் குழந்தைகளிடையே கல்வி அணுகலை மாற்றியமைத்ததற்காக இந்தியாவைச் சேர்ந்த ரூபிள் நாகி என்பவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

யார் இந்த ரூபிள் நாகி?

ஜம்மு காஷ்மீரில் பிறந்த ரூபிள் நாகி, லண்டனில் உள்ள 'slade school of fine art' என்ற கல்லூரியில் பயின்றவர்.

சர்வதேச அளவிலான புகழ்பெற்ற கலைஞர் மற்றும் சமூகச் செயல்பாட்டாளரான இவர், இந்தியாவின் குடிசைப் பகுதிகளில் உள்ள சுவர்களில் கல்வி சார்ந்த சித்திரங்களை வரைந்து, அவற்றைத் திறந்தவெளி வகுப்பறைகளாக மாற்றியிருக்கிறார்.

இதன் மூலம், எளிய முறையில் வாசிப்பு, எழுதுதல் மற்றும் கணித அறிவை குழந்தைகளுக்குக் கொண்டு சென்றிருக்கிறார்.

 ரூபிள் நாகி
ரூபிள் நாகி

தவிர, 'ரூபிள் நாகி கலை அறக்கட்டளை' மூலம் இந்தியா முழுவதும் 800-க்கும் மேற்பட்ட கற்றல் மையங்களை உருவாக்கி இருக்கிறார்.

10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்குக் கலை சார்ந்த கல்வியை வழங்கி இருக்கிறார்.

இவரது புதுமையான கற்பித்தல் முறையால், பின்தங்கிய பகுதிகளில் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ளது.

மேலும் 'Misaal Mumbai / Misaal India' திட்டம் மூலம் குடிசைப்பகுதிகளை அழகுபடுத்தி இருக்கிறார்.

ட்ரோன் பிராண்டிங்: விளம்பர உலகில் புதிய சகாப்தம் - தமிழகத்தில் அறிமுகம் செய்த அலோக் இன்ஃபோடெக்

360° கோணத்தில் முழுமையான டிஜிட்டல் மார்க்கெட்டிங் தீர்வுகளை வழங்குவதில் முன்னணி நிறுவனமான அலோக் இன்ஃபோடெக், தமிழகத்தின் முதல் ட்ரோன் பிராண்டிங் சேவையை பெருமையுடன் அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த புதுமையான... மேலும் பார்க்க

மும்பையின் முதல் பாஜக மேயராகும் ரிது தாவ்டே; சிவசேனாவிற்கு துணை மேயர் பதவி; முடிவுக்கு வந்த இழுபறி

மும்பை மாநகராட்சிக்குக் கடந்த மாதம் தேர்தல் நடந்து முடிந்தது. இத்தேர்தலில் பா.ஜ.க 89 வார்டுகளிலும், சிவசேனா (ஷிண்டே) 29 வார்டுகளிலும் வெற்றி பெற்றது. இது தவிர உத்தவ் தாக்கரேயின் சிவசேனா 65 இடங்களில் வ... மேலும் பார்க்க

மும்பை: ரயில் தண்டவாளத் தடுப்புகளில் கிரீஸ் தடவும் பணி; ரயில்வேயின் திட்டத்தின் பின்னணி என்ன?

மும்பை புறநகர் ரயில்களில் அடிபட்டு தினமும் 10 பேர் வரை உயிரிழந்து வருகின்றனர். இந்த உயிரிழப்புகளைத் தடுக்க ரயில்வே நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகள் போதிய பலனளிக்காமல் இருக்கின்றன.ரயில் பயணிகள் அதி... மேலும் பார்க்க

பழுது பார்த்து கொடுக்க மறுப்பு: ரூ.2.50 லட்சத்துக்கு வாங்கிய எலக்ட்ரிக் ஆட்டோவை தீவைத்த பெண்

இப்போது பேட்டரியில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. ஆனால் இது போன்ற எலக்ட்ரிக் வாகனங்களில் பழுது ஏற... மேலும் பார்க்க

"குழந்தை பெற்றுக்கொள்வது பெண்ணின் விருப்பம்" - 30 வாரக் கருவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

மும்பையைச் சேர்ந்த 17 வயது பெண் தனது ஆண் நண்பருடனான உறவில் கர்ப்பமானார். அவருக்கு இப்போது 18 வயதாகிறது. அவரது வயிற்றில் உள்ள கருவின் வளர்ச்சி 30 வாரமாகிவிட்டது.இக்குழந்தையைப் பெற்றுக்கொள்ள விரும்பவில்... மேலும் பார்க்க

அருணாச்சலப் பிரதேசம்: இருசக்கர வாகனத்தில் சென்ற காவலருக்கு நேர்ந்த கொடூரம்; 'புலி' அச்சத்தில் மக்கள்

அருணாச்சலப் பிரதேசத்தில் புலிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு ஆகும். ஆனால் அங்கு காவலர் ஒருவரை புலி ஒன்று தாக்கிக் கொன்றுள்ளது.அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள லோவர் திபாங்க் மாவட்டத்தில் தலைமைக் காவலராகப்... மேலும் பார்க்க