செய்திகள் :

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு? மாறிய நிலைப்பாட்டின் பின்னணி என்ன?

post image

பாஜக தலைமையிலான மத்திய அரசு மீண்டும் கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறை (Delimitation) மசோதா தொடர்பாக திமுக தனது நிலைப்பாட்டில் மாற்றத்தை வெளிப்படுத்தியிருப்பது தேசிய அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் இதே மசோதாவை திமுக கடுமையாக எதிர்த்திருந்தது. அப்போது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மசோதா நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன், “தமிழகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கும் கருப்புச் சட்டம்” என்று விமர்சித்திருந்தார்.

மேலும், மசோதா நிறைவேற்றப்பட்டால் உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்துவோம் என்றும் திமுக அறிவித்திருந்தது.

ஆனால் தற்போது, தொகுதி மறுவரையறை மசோதாவின் இறுதி வடிவம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறகே அதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்று திமுக அறிவித்துள்ளது.

இந்த முடிவு, மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி

“தமிழக நலன் பாதுகாக்கப்பட்டால் எதிர்க்கத் தேவையில்லை”

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறுகையில், “மசோதாவின் உள்ளடக்கத்தைப் பார்த்த பிறகே கட்சியின் இறுதி நிலைப்பாடு முடிவு செய்யப்படும். திமுக முன்வைத்துள்ள பரிந்துரைகள் மற்றும் தமிழகத்தின் நலன் பாதுகாக்கப்படும் வகையில் மசோதாவில் இடம் பெற்றிருந்தால், அதை எதிர்க்க வேண்டிய அவசியம் இருக்காது.

ஆனால் தென் மாநிலங்களின் உரிமைகள் பாதிக்கப்படும் வகையில் இருந்தால் தொடர்ந்து எதிர்ப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், மசோதாவுக்கு திமுக நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக இல்லாமல், “உள்ளடக்கத்தைப் பொறுத்து முடிவு” என்ற புதிய நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

அரசியல் பின்னணி

திமுகவின் இந்த மாற்றம் அரசியல் வட்டாரங்களில் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய அரசியல் மாற்றங்கள், எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறுவதற்கான அரசியல் கணக்கீடுகள் ஆகியவை இந்த நிலைப்பாட்டுக்குக் காரணமாக இருக்கலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

ஸ்டாலின் | அண்ணா அறிவாலயம் | திமுக
ஸ்டாலின் | அண்ணா அறிவாலயம் | திமுக

இதுவரை திமுக, தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், தமிழகத்தின் நலனும் திமுக முன்வைத்துள்ள பரிந்துரைகளும் மசோதாவில் பிரதிபலித்தால், அதை எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

எனவே, மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறகே திமுகவின் இறுதி அரசியல் முடிவு தெரியவரும் என்பது தற்போதைய சூழலாக உள்ளது.

சாதிய பாகுபாட்டால் இயக்கப்படாத அரசுப் பேருந்து – இயக்க வைத்து பயணித்த அமைச்சர் வன்னி அரசு!

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் என்ற கிராமம் உள்ளது. இங்கிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் அண்ணா நகர் என்ற பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதி அமைந்துள்ளது. இதனிடையே அப்பகுதியைச் சேர... மேலும் பார்க்க

வாரிய தலைவர் பதவிக்கு 5 'அன்பு பரிசு'கள்; முதல்வருக்கு நெருக்கத்தில் ஜரூராக நடக்கிறதா வசூல் வேட்டை?

'யாராவது லஞ்சம் கேட்டா உங்க அண்ணன் விஜய்யோட ஆட்சி நடக்குதுன்னு சொல்லுங்க...' என முதல்வர் விஜய் கரூரில் பேசியிருந்தார். ஆனால், கோட்டையில் முதல்வரின் நெருக்கமான வட்டத்திலேயே ஒரு முக்கிய புள்ளியின் பெயரி... மேலும் பார்க்க

"தேர்தலுக்கு 5 வருஷம் காத்திருக்க தேவையில்ல; திமுகவுக்கு ஆசை காட்டும் பாஜக.!"- கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் திருப்பத்தூரில் இன்று (ஜூலை. 18) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "என்னுடைய புரிதல் என்னவென்றால் திமுகவுடன், பாஜக பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டது. 'தொ... மேலும் பார்க்க

`என் போராட்டங்கள் அண்ணன் விஜய்க்கு தெரிந்திருந்தால்..!’ - தவெகவில் நீக்கப்பட்ட பெண் வழக்கறிஞர்

`அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டுதான் நியமிக்கிறார்கள்' என்று, த.வெ.க-வின் விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ஞானசௌந்தரி சென்னை உயர் நீத... மேலும் பார்க்க

’எவ்வளவு அவதூறு பரப்பினாலும் வைகோவை நேசித்துக் கொண்டே இருப்போம்’ - அமைச்சர் வன்னி அரசு விளக்கம்!

கோவை விமான நிலையத்தில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ஆதிதிராவிடர் நலத்துறை பெயர் மாற்றம் வருத்தமளிக்கின்றது என திருமாவளவன் சொல்லியிப்பது குறித்த கேள்வ... மேலும் பார்க்க

`கரூர் கம்பெனி வேலைக்காரர்கள்போல் நடத்தப்பட்டோம்'- திமுகவிலிருந்து கோவை மாநகராட்சி கவுன்சிலர் விலகல்

கோவை மாநகராட்சி 22 வது வார்டு கவுன்சிலர் கோவை பாபு செல்வக்குமார் என்பவர், தி.மு.க-வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “2020 ஆம் ஆண்டிலிருந்து திராவிடன் அறக்கட்டளையைத்... மேலும் பார்க்க