செய்திகள் :

`நம் கண்ணுக்கு தெரியாமல் அரூபமாக வாழும் மனிதர்களின் கதை' - எழுத்தாளர் ஜெயராணியின் பரிந்துரைகள்!

post image

சென்னையில் நடைபெற்று வரும் 49-வது புத்தகத் திருவிழாவில், வார இறுதிநாள் என்பதால் வாசகர்கள் கூட்டம் களைகட்டியது.

அங்கு வாசகர்களால் சூழப்பட்டிருந்த, விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை தனது எழுத்துகளில் தொடர்ந்து பதிவு செய்து வரும் எழுத்தாளர் ஜெயராணியை சால்ட் பதிப்பக அரங்கில் சந்தித்து உரையாடினோம்.

இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் மிஸ் செய்யக் கூடாத முக்கிய புத்தகங்கள் எவை எவை குறித்து பேசிய அவர், “எழுத்தாளர் நரனின் சமீபத்திய ‘குமாரத்தி’ நாவல் சால்ட் பதிப்பகத்தில் வெளிவந்துள்ளது.

இது கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாகவே வெளிவரும் என்று அவரது வாசகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நாவல். புனைவு வாசிப்பவர்களுக்கு இது மிகவும் பிடிக்கும்.

பெண்களை மையப்படுத்தி, குறிப்பாக குடும்ப சாதிய அமைப்புமுறையில் கௌரவத்துக்காக பெண்கள் சந்திக்கும் வன்முறைகளை மையமாகக் கொண்டு எழுதியுள்ளார்.

சென்னை புத்தக திருவிழா
சென்னை புத்தக திருவிழா

சமூகத்தில் நம் கண்ணுக்குத் தெரியாமல் அரூபமாக வாழும் மனிதர்களான கன்னியாஸ்திரி, திருடர், பாலியல் தொழிலாளி, தூக்கு தண்டனை கைதி போன்றவர்களின் வாழ்வை ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி இந்தக் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இது ஆணவக் கொலைகளை பற்றியும் பேசுகிறது. கண்டிப்பாக வாசிக்கப்பட வேண்டிய ஒரு புத்தகம்.

அடுத்த பரிந்துரை, எழுத்தாளர் அதிஷா எழுதிய ‘மௌனம்சரணம்’. இது விபாசனா எனும் தியான முறைக்கும் புத்தரின் போதனைகளுக்கும் ஒரு அறிமுகமாக இருக்கும். பத்து நாட்கள் தொலைக்காட்சி, மொபைல் இல்லாமல் இருந்தால் நாம் வெறுத்து விடுவோம். ஆனால் அந்த பத்து நாட்களையும் இவர் மிகவும் ஜாலியான அனுபவமாக எழுதியுள்ளார். இது ஒரு சிறந்த வாசிப்பு அனுபவமாக இருக்கும்.

 எழுத்தாளர் ஜெயராணி
எழுத்தாளர் ஜெயராணி

மூன்றாவது பரிந்துரை, கவிஞர் முத்துராசாவின் ‘கருநாக்கு’. கவிஞர் முத்துராசா சமகாலத்தில் குறிப்பிடத்தக்க இளைய தலைமுறை எழுத்தாளர். கடந்த ஆண்டு அவரது ‘கங்கு’ நாவல் வெளிவந்து பெரிதும் பேசப்பட்டது. அவரின் அனைத்து படைப்புகளுமே முக்கியமானவையே. பெரும்பாலும் விளிம்புநிலை மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்தே அவரது எழுத்துகள் இருக்கும். ‘கருநாக்கு’ கவிதைத் தொகுப்பை நாட்டார் வழக்கு முறையில் அவர் எழுதியுள்ளார். இதில் சாதியத்தை மையப்படுத்திய பல கவிதைகள் இடம்பெற்றுள்ளன." என்றார்.

இளைஞர்கள் பலவிதம், ஒவ்வொருவரும் ஒரு விதம் - இளம் தலைமுறையினரிடையே எப்படி இருக்கிறது புத்தக ரசனை?!

சென்னையில் 49-வது புத்தகக் காட்சியை, Ymca மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று வார இறுதி நாள் என்பதால், இளைஞர்களின் கூட்டமும் அலைமோதியது. சரி, இந்த புத்தகத் திருவிழாவில் இளைஞர்களின் சாய்ஸ் என்னவாக இ... மேலும் பார்க்க

`வாசிப்புப் பழக்கம் தொடர்வது மகிழ்ச்சி' - பவா செல்லதுரை பரிந்துரைக்கும் 3 நூல்கள்!

கோலாகலமாக நடைபெற்று வரும் 49-வது சென்னை புத்தக கண்காட்சியில், வார இறுதியில் குவிந்த வாசக கூட்டத்திற்கு மத்தியில், தனசீலி திவ்யநாதன் எழுதிய ஏவாளும் சாராளும் நூல் வெளியீட்டு நிகழ்வு, Her Stories அரங்கில... மேலும் பார்க்க

சென்னை புத்தக கண்காட்சியில் ஒரே இடத்தில் ஆதார், தபால், மை ஸ்டாம்ப் சேவைகள்! - சூப்பர் வரவேற்பு!

இன்று வங்கி கணக்கு தொடங்குவதிலிருந்து பலதரப்பட்ட பொது மக்கள் சேவைகள் வரை, ஆதார் அடையாள எண் இன்றியமையாத ஒன்றாக ஆகிவிட்டது.இந்நிலையில், ஆதார் விண்ணப்பிக்கவும், அதிலுள்ள தகவல்களை மாற்றம் செய்யவும் பலருக்... மேலும் பார்க்க

`எழுத்துலகம் பெரிய கடல்; அதில் கால்களையாவது நனைத்திடுங்கள்!' - கவிஞர் மனுஷ்யபுத்திரன்

உயிர்மை பதிப்பகத்தின் நிறுவனரும், கவிஞருமான மனுஷ்யபுத்திரனை, சென்னை புத்தகக் காட்சியில் சந்தித்து உரையாற்றினோம்.நம்மிடம் பேசிய அவர், ``இன்றைய இளைஞர்கள் ஜென்சி கிட்ஸ் என்ற கருத்தாக்கத்தையே நான் ஏற்க மற... மேலும் பார்க்க

`பதிவிடுவது பயனல்ல, அதை அச்சில் எழுத்தாக்க வேண்டும்!'- சென்னை புத்தகக் காட்சியில் ஆழி செந்தில்நாதன்

சென்னை YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் 49-வது புத்தகக் காட்சியில், மொழியுரிமை செயல்பாட்டாளரும், ஆழி பதிப்பகத்தின் நிறுவனருமான செந்தில்நாதன் பேசினார்.ஏன் ஆழி ?``ஆழி என்பது ஆழமானது. அது போன்று நல்ல ஆழ்... மேலும் பார்க்க

சென்னைப் புத்தகக் கண்காட்சி : ரமலோவ், மணிபல்லவம், ஆர்ட்டிகிள் - 29... மிஸ் பண்ணக்கூடாத 5 நூல்கள்!

ரமலோவ்ரமலோவ் - சரவணன் சந்திரன்நாவல்தனித்துவமான கதைக் களங்களோடு நாவல் உலகில் வலம் வருபவர் சரவணன் சந்திரன். இவரின் புதிய நாவல் ரமலோவ். இந்த நாவல் குறித்துப் பேசும் பதிப்பாளர் மனுஷ்யபுத்திரன், "கடல், அதன... மேலும் பார்க்க