செய்திகள் :

``நான் லஞ்சம் கொடுத்ததற்கு நானே சாட்சி" - மரிய வில்சன் பேச்சுக்கு அன்பில் மகேஷ் ரியாக்ஷன் என்ன?

post image

இன்று காலை நடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் உரையாற்றிய நிதி அமைச்சர் மரிய வில்சன், ``நான் பள்ளி நடத்துகிறேன். என்னுடைய பள்ளியை நடத்துவதற்கு என்னிடம் லஞ்சம் வாங்கினார்கள். எங்கே வாங்கினார்கள்? எவ்வளவு வாங்கினார்கள்? எப்படி வாங்கினார்கள் என்று நான் கூறுவதற்கு தயாராக இருக்கிறேன்." எனத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் இது தொடர்பாக விவாதம் எழுந்தது. இந்த நிலையில், சென்னை அறிவாலயத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,``சட்டமன்றத்தில் உயர்கல்வித் துறை தொடர்பான விவாதத்தின் போது, நிதியமைச்சர் திடீரெனச் சம்பந்தமில்லாமல் `நான் லஞ்சம் கொடுத்ததற்கு நானே சாட்சி, எவிடன்ஸ் என்னிடம் உள்ளது' எனக் கூறி என் மீது அவதூறு பரப்பியிருக்கிறார்.

நிதியமைச்சர் மரியவில்சன்
நிதியமைச்சர் மரியவில்சன்

பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கும், சட்டமன்றத்தின் உள்ளே பேசுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. பொறுப்புள்ள இடத்தில் இருந்து கொண்டு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் சுமத்தியது மிகப்பெரிய தவறு. அதையும் கடந்து `லஞ்சம் கொடுத்ததற்கு நானே சாட்சி' என்று கூறிய அமைச்சரை லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக அழைத்து விசாரணை நடத்த வேண்டும். லஞ்சம் வாங்குவது எப்படி குற்றமோ கொடுப்பதும் குற்றம்தானே...

தற்போது ஆளுங்கட்சி கூட்டணிக்குள் பல்வேறு சலசலப்புகள் நிலவி வருகின்றன. 100 கோடி ரூபாய் முறைகேடு குற்றச்சாட்டு கூறிய வழக்கறிஞர் கட்சியிலிருந்து நீக்கம், எம்.எல்.ஏ மீதான குற்றச்சாட்டுகள், ஒப்பந்ததாரரால் மிரட்டப்பட்ட அமைச்சர் விவகாரம், நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது ஏவப்பட்ட அடக்குமுறை, மற்றும் இடதுசாரிகள், காங்கிரஸ் தலைவர்களின் விமர்சனங்கள் எனப் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன. ஊடகங்களில் விவாதிக்கப்படும் இந்த முக்கியச் சிக்கல்களைத் திசைதிருப்புவதற்காகவே சட்டமன்றத்தில் இத்தகைய திட்டமிட்ட நாடகங்கள் நடத்தப்படுகின்றன.

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

சம்பந்தமே இல்லாத ஒரு குற்றச்சாட்டைக் கல்லூரி நடத்தி வரும் ஒரு அமைச்சர் சட்டமன்றத்தில் பேசுவதற்குச் சட்டப்பேரவைத் தலைவர் எவ்வாறு அனுமதித்தார் என்பது தெரியவில்லை. அவை முன்னவரும் இது குறித்துப் பேசாதது விசித்திரமாக உள்ளது. எனவே, அவதூறாகப் பேசப்பட்ட அந்த உரையாடல்களை உடனடியாகச் சட்டமன்ற அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும், இது குறித்து உரிய விளக்கம் கேட்க வேண்டும் என்றும் சட்டப்பேரவைத் தலைவரைக் கேட்டுக்கொள்கிறேன்." என்றார்.

குடியுரிமை: ``3 நாடுகளுக்கு தூதுராக இருந்தேன்; எனக்கே இந்த நிலை..." - நவதீப் சிங் சூரி சொல்வதென்ன?

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கான இந்தியத் தூதராகவும், ஆஸ்திரேலியாவுக்கான உயர் ஆணையராகவும் பணியாற்றியவர், நவதீப் சிங் சூரி. இவர் பஞ்சாபில் நடைபெற்ற இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சிறப... மேலும் பார்க்க

"பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்திருக்கும் Sofa Model அரசை..!"- உதயநிதி கண்டனம்

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என்று முதல்வர் விஜய் இன்று (ஆகஸ்ட்.24) சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார்.இதற்கு திமுக எதிர்ப்பு வருகிறது. இந்நிலையில் பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக எதிர்... மேலும் பார்க்க

'LED ஸ்க்ரீன், வாட்டர் பாட்டில், ஒரு நாள் அரசு டாக்டர்'- அவையில் எம்.எல்.ஏக்களின் வினோத கோரிக்கைகள்!

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத் தொடரில் மக்கள் பிரச்னைகளை கடந்து சட்டமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த ஜாலியான வேடிக்கையான கோரிக்கைகள் இங்கே.கல்லாணைமுதல்வரை பார்க்க ... மேலும் பார்க்க

"பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும்"- ஸ்டாலின்

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என்று முதல்வர் விஜய் இன்று (ஆகஸ்ட்.24) சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார். இதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது ... மேலும் பார்க்க

பரந்தூர்: ``தனிப்பட்ட அரசியல் ஆதாயத்திற்காக..." - முதல்வர் விஜய்யைச் சாடும் நயினார் நாகேந்திரன்!

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என்று முதல்வர் விஜய் இன்று (ஆகஸ்ட்.24) சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார். இது குறித்து பேச திமுக அனுமதி கேட்டது. திட்டம் ரத்து செய்யப்பட்டதால் பேச எதுவும் ... மேலும் பார்க்க

'வருங்கால பிரதமர் விஜய்!' கலக குரல் எழுப்பும் அமைச்சர்கள் - காங்கிரஸை சீண்டுகிறதா த.வெ.க?

தவெக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கும் நிலையில், `முதல்வர் விஜய்தான் அடுத்த பிரதமர்' என தவெகவினர் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் சரத்குமார், 'விஜய்தான் அடுத்த ... மேலும் பார்க்க