'டைம்' கொடுக்கும் ட்ரம்ப்; ஈரான் வழிக்கு வரவில்லையேல் உலக நாடுகளுக்கு பாதிப்புகள...
'நீங்கள் மட்டும் தனியாக இல்லை' - உலகம் முழுவதும் முடங்கிய யூடியூப்; இதற்கு தொழில்நுட்ப காரணம் என்ன?
சில மணிநேரங்களாக, உலகில் உள்ள பல்வேறு பகுதிகளில் யூடியூப் சேவை தடைப்பட்டுள்ளது.
இதனால், யூடியூப்பின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டிற்கு ஆயிரக்கணக்கான புகார்கள் குவிந்து வருகின்றன.
சிலருக்கு யூடியூப்பின் முகப்புப் பக்கத்தில், 'Something went wrong' என்றும், சிலருக்கு யூடியூப் லிங்குகள் வேலை செய்யாமலும் இருக்கின்றன.
என்ன சிக்கல்?
இந்தப் பிரச்னை குறித்து யூடியூப் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது...
"எங்கள் பரிந்துரைகள் அமைப்பில் ஏற்பட்ட ஒரு சிக்கலால் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

ஹோம் பேஜ் தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. பிரச்னையை முழுமையாக சரி செய்ய இன்னமும் வேலை செய்து வருகிறோம் - சீக்கிரம் அனைத்தும் சரியாகி விடும்" என்று பதிவிட்டுள்ளது.
உலகம் முழுவதும் புகார்கள் எழத் தொடங்கியதும் யூடியூப் நிறுவனம் பதிவு செய்த முதல் பதிவு...
"யூடியூப் சேவை பெறுவதில் உங்களுக்கு ஏதேனும் இப்போது சிக்கல் இருந்தால், நீங்கள் மட்டும் தனியாக இல்லை. எங்களது நிறுவனம் அதை சரிசெய்வதற்கு வேலை பார்த்து வருகிறது".
Update: An issue with our recommendations system prevented videos from appearing across surfaces on YouTube (including the homepage, the YouTube app, YouTube Music and YouTube Kids). The homepage is back, but we're still working on a full fix – more coming soon!
— TeamYouTube (@TeamYouTube) February 18, 2026




















